ஹாய்... தோழீஸ்! .... அறுசுவையில் நம்ம அனுபவங்கள்

ஹாய்... தோழீஸ்! .... அறுசுவையில் நம்ம அனுபவங்கள் கூடிக்கொண்டே போகிறது.. பிரசவ அனுபவம்!, அமானுஷ்ய அனுபவம்!, தாய்மையடைந்த அனுபவம்!, இப்படிப்பல...
ஆனால் இவையெல்லாவற்றிலும் ஒன்னு பேயோடு பழகியிருக்கணும்.. இல்ல... குழந்தை பெற்றிருக்கணும்..... அட்லீஸ்ட் கல்யாணமாச்சும் ஆகியிருக்கணுங்க.. ஹூம் என்ன பண்ணுறது....
அப்போ நாங்க எல்லாம் எங்க அனுபவத்த எங்கே பகிர்கிறதுனு எனக்கு ஒரே கோவமாயிடிச்சு... ஆ... அதுக்குத்தான் இந்த இழை... எல்லோருடைய புதுப்புது அனுபவங்களை கேட்கும் போது ரொம்ப சுவாரசியமாக இருக்கில்ல.. அது சரி ஊர்வம்பு கேட்டு உனக்கொரு சுவாரசியம் தேவையான்னு நீங்க என்னைத்திட்டுறது புரியுது...
ஆனால் பல பேருடைய அனுபவங்கள் தான் வரலாறாகின்றன இல்லையா? "அனுபவம் ஒரு கண்டிப்பான ஆசான்.. பெறு பேறுகளை தந்த பின்னேயே பாடம் நடத்துவான்..".. அய்யோ இது நான் சொல்லலைங்க.. யாரோ ஒரு அறிஞர் சொன்னது..
அனுபவங்கள்.. அப்படீன்னா, எப்படிப்பட்ட அனுபவங்களாகவும் இருக்கலாம்.. முதல் தடவை மூக்கு வழிய வழிய ஸ்கூலுக்கு போனது...
பக்கத்து சீட் பொண்ணோட பேனாவை சப்பாத்துக்கடியில ஒளித்து வைத்து டீச்சர்கிட்ட திட்டு வாங்கினது...
கடற்கரை மண் காலில் ஒட்டியிருக்க தலைமுடியைப்பிடிச்சு அம்மா அடிச்சது....

என்னடா இவ எங்களையெல்லாம் இப்படி அசிங்கப்படுத்துறாளேனு கோவப்படாதீங்க.. சொல்றேன்.. இதுக்காக மட்டுமில்ல...
உங்க கடந்த கால அழகான ஞாபகங்களை எங்க கூட பகிர்ந்துக்கவும் தான் இந்த இழை.. எதுவாயிருந்தாலும் சொல்லுங்க.. நாங்களும் கொஞ்சம் ரசிச்சுக்கிறோமே...
புது மருமகள்களா உங்க முதல் சமையலறை அனுபவம்... சமையல் என்ற பேரில் நீங்கள் அடித்த லூட்டி அப்புறம்... பாத்ரூம் கழுவ விட்டது கூடத்தான்.... முதல் தடவை உங்க கணவன்கிட்ட திட்டு வாங்கினது... அப்புறம் உங்க குழந்தை முதல் முதலா பேசின முதல் மழலை வார்த்தை.... நீங்க வாழ்க்கையில இதுவரை பிரம்மிச்ச விடயங்கள்... உங்க கனவை நிறைவேற்றின முதல் நபர்... உங்க வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு... உங்களை நீங்களே மாற்றிக்கொண்ட விடயம்... இப்படிப்பல...

உங்கள் துக்கம் கவலை , சந்தோஷம், வெற்றி தோல்வி... என எதுவாகயிருந்தாலும்... உங்கள் துக்கத்தில் பங்கெடுக்கவும் மகிழ்ச்சியைப்பகிரவும் நாம் இருக்கிறோம்... எதுவாயிருந்தாலும் உங்க அனுபவங்களை எங்க கூடப்பகிர்ந்துக்குங்க.. நாங்க கேட்கவும் பகிர்ந்துக்கவும் ரொம்ப ஆவலாயிருக்கோம். ...

திவ்யா உங்க கதையை படிச்சு சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குதுப்பா,ரேணு கதையை படிச்சு சிரிச்சு இப்போ வயறும் வலிக்கிற மாதிரி இருக்கு..செம கூத்து போங்க.
உங்க இழை நல்லா இருக்கு,உங்க கவிதை சூப்பர்..படிச்ச பிற்பாடு என் முதல் இரவுதான் ஞாபகம் வந்தது,அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..கதையை படிச்ச பின்னாடி சிரிப்போ சிரிப்பு..இந்த மாதிரி அனுபவம் ஏதும் இல்லை,அப்புறம் வர்ரேன்..

இதுவும் கடந்துப் போகும்.

திவ்யா உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு,நிஜமாலே வயிறு வலிக்குது.

ஹாய் தோழிகள் ,
அனைவரும், நலமா?எனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத அனுபவம்.2 வருடமாக குழந்தை இல்லாமல் மிகவும் கஷ்ட பட்டோம்..எனக்கு சில சமயங்களில் 2 மாதத்திற்கு ஒரு தடவை கூட மாதவிலக்கு வரும். 2.2.2010 அன்றிலிருந்து 50 நாள் வரை எனக்கு மாதவிலக்கு வரவில்லை. நான் மெடிக்கலில் ஹோம் டெஸ்ட் கிட் வாங்கி காலை 5 மணிக்கு டெஸ்ட் செய்து பார்த்தேன்.2 கோடு காட்டியது. என்னால் சந்தோஷம் தாங்க முடியவில்லை.அப்புறம் என் கணவர் எப்போது விழிப்பார் என்று பார்த்து கொண்டிருந்தேன்.விழித்ததும் சொன்னேன்
அப்பா எவ்வளவு கொண்டாட்டம் அந்த நாளை என் உயிர் இருக்கும் வரை என்னால் மறக்க முடியாது

வணக்கம் தோழிகளே அனைவரும் நலமா? நல்ல இழை தொடங்கி இருகீங்க திவ்யா. நான் புது மருமகளா செய்த லூட்டிய இங்க சொல்ரன்ப்பா. நான் என் மாமியார் வீட்டுக்கு போய் 3 நாளா என்னை அவ்ங்க ஒரு வேலையும் செய்ய விடலைப்பா,புது மருமகள் ஆச்சே.மூன்ராம் நாள் என் மாமியார் என்ன கூப்பிட்டு இன்னிக்கு ரொட்டி சுட்டிரு என்று சொன்னாங்க அம்மா கூட இருந்த வரைக்கும் நான் ரீ தவிர எதுவும் போட தெரியாது அம்மா என்னை சமைக்க பழகு என்ரு எப்பவும் சொல்லிட்டே இருப்பங்க நான் காதில வாங்கிரது இல்லை.ரொட்டி சுட தெரியாதே என்று என் மாமியாரிடம் சொல்ல எனக்கு பயமாக இருந்தது.ஏன்னா என் அம்மவ எல்லா திட்டுவாங்க.சரின்னு நான் கிச்சனுக்குள்ள போய் ரொட்டி சுட ஆரம்பிச்சேன் அங்க தான் பாருங் விசயமே இருக்கு மாவில உப்பு எல்லாம் போட்டு தண்ணிய ஊத்தினன் பாருங்க அந்த தண்ணியில பத்து கிலோ மா குழைக்கலாம் ஐஐயோ என்ன பண்ரது என்று முழிசிட்டு இருந்தேன் யாரும் உள்ள வந்தா என்னாகிறது.அத என்ன பண்ணலாம் என்றூ யோசிச்சு ஒரு ஐடியா கண்டு பிடிச்சேன்
அது என்ன ஐடியா என்று நீங்க யாரவது சொல்லுங்க பார்கலாம் நீங்க சொன்ன 1000 பொற் காசு தாரேன் அப்புறம் வந்து பதில் சொல்றேஏண்

துஷி தருண்

வேரென்ன கோதுமை மாவு தோசைதானே

இதுவும் கடந்துப் போகும்.

இப்டிலாம் கதைய பாதில விடக்கூடாது வாங்க வந்து கதையை முடிச்சு வைங்கப்பா கதை இப்பதா சூடு பிடிக்குது சீக்கிரம் வாங்கபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அன்பு திவ்யா,

நல்லா இருக்கு இந்த இழை. நீங்க கொடுத்திருக்கும் இண்ட்ரோ ரொம்ப அட்டகாசமாக இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

அன்பு துஷி தருண்,

அப்படியே, தோசையாக ஊத்தியிருப்பீங்க, சரியா? அதிலே கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு, புது ரெசிபியா மாத்தியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

(பதிலில் எத்தனை பிழை இருக்கோ, அத்தனை பொற்காசு குறைச்சுட்டு, கொடுத்துடுங்க:):))

அன்புடன்

சீதாலஷ்மி

அப்படி இல்ல அஸ்வினி ,நான் என்ன செய்தேன் தெரியுமா அவசர அவசரமா குப்பை கூடை எடுத்து அதுக்குள்ள இருந்த கொஞ்ச குப்பயை எடுத்து வெளிய வச்சிட்டு மாவ கூடைக்குள்ள போட்டு மேல எடுத்து வச்ச குப்பையை போட்டிட்டு பாத்திரத்த களுவி துடச்சு வேற மா போட்டு அப்பாடி என்றூ நிமிர்தால் வாசல்ல மாமியார் நிக்றாங்க.நான் பேயை கண்ட்டால் கூட அப்படி அதிர்ந்திருக்க முடியாதுங்க எனக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.அடிப்பாவி மாமியார பேய் என்று சொல்றாளே என்று நீங்க சொல்றது புரியுது.அப்புறம் என்ன மாமிதான் ரொட்டி சுட்டாங்க

துஷி தருண்

ரொம்ப பயமா மாமின்னா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வணக்கம் சீதாலஷ்மி மேம் எனக்கு இப்படி எல்லாம் அறிவுபூர்வமா யோசிக்க எனக்கு தெரியலையே ஆனால் இப்ப நான் அறுசுவையயைப் பார்து சமச்சு என் மாமியார் மெச்சும் மருமகள் ஆகிட்டேன் நன்றி அருசுவை

துஷி தருன்

மேலும் சில பதிவுகள்