CMC, Vellore மருத்துவமனை சிகிச்சை பெற்றவர்கள்

CMC, Vellore மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் யாரேனும் இருந்தால். மருத்துவமனையை பற்றி கூறுங்களேன்.
* ஞயாயிறு வெளி நோயாளிகள் சிகிச்சை உண்டா?
* பார்க்கும் நேரம்?
* முதல் முறை சென்றால் அட்டை ஏதேனும் போட வேண்டுமா? ( 1st entryக்கு தனி கட்டனும் ஏதேனும் செலுத்தவேண்டுமா? எவ்வளவு?)
மருத்துவமனையின் போன் நம்பர் கொடுக்கவும்.

சி.எம்.சி மருத்துவமனையில் ஞாயிறு அன்று வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது எமர்ஜென்சி மட்டும் பார்ப்பார்கள்

திங்கள் முதல் வெள்ளிவரை 8முதல்4.30 வரை சனிகிழமை 8முதல்11.45 வரை

முதன்முறை செல்லும்போது ஜென்ரல் சிகிச்சைக்கு 160தும் பிரைவேட் சிகிச்சைக்கு 570தும் செலுத்த வேண்டும்

மருத்துவமணைக்கென்று தனி போன் நம்பர் என்று ஏதும் இல்லை
நீங்கள் சிகிச்சைக்கு வரும் நாளுக்கு முன்னரே அட்டை போட வேண்டும்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

நன்றி புவனா மேடம். பிரைவேட் சிகிச்சை என்று கூறியுள்ளீர்களே? அப்படி என்றால் என்ன?

மேடம் எல்லாம் வேண்டாம் பா தோழி என்று சொல்லுங்கள் பிரைவேட்னா special treatment பா அதாவது சிறப்பு சிகிச்சை சரி யாருக்காக என்னாச்சி பா தவறாக இருந்தால் மண்ணிக்கவும்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

ஹாய் புவனா தோழி. இதில் தவறாக நினைக்க என்ன உள்ளது? உங்களை போல் அக்கறையுடன் விசாரிக்கும் தோழியை பெருமையாகதான் நினைக்க வேண்டும்.
என் மனைவிக்ககதான். இந்த கேள்விகள்.
என் மனைவிக்கு இது 3 வது மாத கர்ப்பம் (இரண்டாவது குழந்தை, முதல் குழந்தை சிசேரியன்) லேசான ப்ளீடிங் ஆனது, டாக்டரிடம் சென்றோம், அவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, எதுவும் பிரச்சினை இல்லை, குழந்தை நன்றாக உள்ளது. என்று கூறி போலிக் அசிட் மற்றும் விட்டமின் டேபிலேட் குடுத்து உள்ளனர்.
முதல் குழந்தை சிசேரியன் என்றால் இரண்டாவது குழந்தையும் சிசேரியன் தான் என்று எல்லோரும் கூறுகிறார்கள். நாங்கள் வாணியம்பாடி இங்குள்ள டாக்டர்களும் இரண்டாவது நார்மல் ட்ரை பண்ண முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் CMC சென்றால் அங்கு ட்ரை பண்ணுவார்கள் என்று கேள்விபட்டேன்.
இது பற்றிய தகவல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
நார்மல் டெலிவரி எதற்காக கேட்கிறேன் என்றால், சிசேரியன் செய்துகொண்டு என் மனைவி அவஸ்தைபடுவதை (காயங்கள் மற்றும் வலியால்) என்னால் தாங்கமுடியவில்லை.
கொஞ்ச அதிகமாகதான் எழுதிட்டேன். படிக்க கஷ்டமாக இருந்தால் மன்னிக்கவும்.

நீங்க வாணியம்பாடியா??? சரி... முதல்ல ஏன் சிசேரியனுக்கு பின் நார்மல் வேண்டாம்னு சொல்றாங்கன்னு புரிஞ்சுக்கங்க... அதன் பின் முடிவு செய்யுங்க. பொதுவா சிசேரியன் செய்தா கருப்பை ரொம்ப வீக்கா இருக்கும். அடுத்த டெலிவரி நார்மல் ஆனா கருப்பை இறங்க வாய்ப்பு அதிகம். சாதாரணமாவே பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் கருப்பை இறங்கும் வாய்ப்பு உண்டு, அதுவும் சிசேரியன் என்றால் அதிகம். அதனால் தான் முதலில் சிசேரியன் ஆனால் அடுத்தது நார்மல் வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனா நார்மல் ஆகாது என்பதில்லை... ஆரோக்கியமாக இருந்தால் தாரளமா நார்மல் ஆகும். ஆகாது என்று சொல்லும் கேஸ் சில உண்டு... அது முதல் குழந்தை ஏன் சிசேரியன் ஆனது என்பதை பொருத்தது. உங்கள் மனைவியின் முதல் குழந்தைக்கு ஏதும் பிரெச்சனை இருந்து சிசேரியன் செய்திருந்தாலோ, அல்லது உங்க மனைவிக்கு செர்விக்ஸ் ஓபன் போன்ற காரணம் தெரியாத பிரெச்சனைகள் இருந்து சிசேரியன் செய்திருந்தாலோ இம்முறை நார்மலுக்கு ட்ரை பண்ண வேண்டாம், சிசேரியனுக்கு போங்க என்று சொல்வாங்க. காரணம் அதே பிரெச்சனை இம்முறையும் வர கூடும் என்ற சந்தேகமே. அதனால் வலியை பற்றி யோசிக்காமல், எது சிறந்தது பிற்காலத்தில் உங்கள் மனைவிக்கு ஏற்றது என்பதை யோசித்து முடிவெடுங்கள். நலமோடு பிள்ளை பெற்றெடுக்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் வாணியம்படிதான், எதற்காக கேட்கறீங்க தோழி?, நீங்க?
நீங்கள் சொல்வதை புரிந்துகொண்டேன். சிசேரியன் என்றால் பிற்காலத்தில் ஆரோக்ய குறைவு ஏற்படும். என்பதர்க்ககவே நார்மல் கேட்டேன். ஆலோசனைக்கு நன்றிகள்.
நீங்கள் சொன்ன மாதிரி, எங்களின் முதல் குழந்தை பிரசவ தேதி வந்தும், வலி அதிகமாக வரவில்லை (பெயின் இன்ஜெக்சென் போட்ட பிறகும்) கருப்பை ஒப்பேன் ஆகவில்லை என்றுதான் கூறினார்கள், பிரசவ தேதிர்க்கு பிறகு வெயிட் பண்ண முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டார்கள். சிசேரியன் முடிந்த பிறகு குழந்தை வெயிட் அதிகமாக (4Kgs) இருந்திருக்கிறது அதனால்தான், நார்மல் பெயின் வரவில்லை என்று டாக்டர்கள் கூறினார்கள்.

அப்படியானால் இம்முறையும் டெலிவரி தேதி வரை செர்விக்ஸ் ஓப்பன் ஆகிறதா என்பதை பார்ப்பார்கள். அதை பொருத்து தான் நார்மல் ஆகுமா ஆகாதா என்று முடிவெடுப்பார்கள். 9வது மாத துவக்கத்திலேயே சொல்லிட முடியும்.

வாணீயம்பாடி... நான் படிச்ச ஊர். அதான் கேட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வேலூர் போறதா முடிவு பண்ணிட்டீங்களா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சி.எம்.சிலதான் என் பையன் பிறந்தான் எனக்கு டெலிவரி டேட் குடுத்து 10 நாள் கழிந்து பிறந்தான் நார்மல் டெலிவரிதான் பா சி.எம்.சி பொறுத்தவரை சிசேரியன் என்பது குறைவுதான் அவங்களால முடிந்த வரை நார்மல்கு கொண்டு வந்துவிடுவார்கள் இருந்தாலும் தோழி சொன்னதை மனதில் வதுக்கொண்டு செயல்படுங்கள் அழகும் ஆரோக்கியம் நிறைந்த குழந்தை பெற்றெடுக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

vanitha nega enga erukiriga

god is love

மேலும் சில பதிவுகள்