காபி பெயிண்டிங் ஆரத்தி தட்டு

தேதி: August 27, 2011

4
Average: 3.6 (11 votes)

 

தெர்மாக்கோல் தட்டு
ஃப்ரூ காஃபித்தூள்
ப்ரஷ்
பென்சில்
ஆண், பெண் உருவம் கொண்ட படங்கள்
சம்கி
ஸ்டிக்கர்
பெவிக்கால்
காட்டன்

 

தேவையானப்பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். திருமணபத்திரிக்கையின் முகப்பு அட்டையே இதுப்போல் ஆண், பெண் உருவப்போல் அச்சிடப்படுகிறது. இதுப்போல் வரையவதற்காக இந்த அட்டை பயன்படுத்தி உள்ளேன். இந்த உருவங்களை தனித்தனி அட்டையாக நறுக்கி வைக்கவும்.
தெர்மாக்கோல் தட்டில் இந்த படங்களை வைத்து வடிவம் மாறாமல் பென்சிலால் அப்படியே வரையவும். உங்களுக்கு வரைய தெரியுமெனில் இதுப்போல் உருவங்களை நேரடியாக தட்டில் வரைந்துக் கொள்ளலாம்.
காஃபி பவுடரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து வைக்கவும். தெர்மாக்கோல் தட்டு வழவழப்பாக இருப்பதால் ப்ரஷ் கொண்டு அடித்தால் காஃபி கரைசல் ஒட்டாமல் தனித்தனியாக பிரியும். ஆள்காட்டி விரலில் கரைத்த காஃபிப்பவுடரை தொட்டுக் கொண்டு கண்களை தவிர மற்ற இடங்களில் லேசாக தேய்த்துக் கொண்டே வரவும்.
லைட் கோல்டன் நிறம் வந்தால் போதும். இரு உருவங்களும் பெயிண்ட் செய்ததும், காஃபி பவுடரை இன்னும் சற்று திக்காக கரைத்து பென்சிலால் வரைந்த இடத்துக்கு அவுட்லைன் கொடுத்து காய விடவும்.
பிறகு கண், புருவம் மற்றும் காது ஜிமிக்கி ஆகியவற்றிக்கு ப்ரஷால் பெயிண்ட் செய்யவும்.
தட்டின் மேல், கீழ் ஓரங்களில் சம்கியை இடைவெளிவிட்டு ஒட்டிக் கொள்ளவும். தட்டி கீழ்ப்பகுதியில் விரும்பிய ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளலாம்.
தெர்மாக்கோலில் தடவியிருக்கும் காஃபிக்கரைசல் பிசுபிசுப்பாக இருக்கும். பேப்பரை போல் உறிஞ்சுக் கொள்ளாது. இந்த உருவங்களில் திட்டு திட்டாக இருக்கும் இடத்தை காட்டனை கொண்டு ஒரேநிறமாக இருப்பதுபோல் சரிசெய்து விடவும். (தேவையெனில் காட்டனில் சிறிது தண்ணீர் தொட்டுக் கொள்ளலாம்). மீண்டும் ஒரு முறை திக்கான காஃபிகரைசலினால் அவுட்லைன் கொடுத்துமுடிக்கவும்.
திருமதி. வனிதா அவர்கள் செய்து காட்டிய காஃபி பெயிண்டிங் முறையில் திருமதி. செண்பகாபாபு அவர்கள் செய்த ஆரத்தி தட்டு இது.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த ஆரத்தி தட்டு செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எப்பிடில்லாம் யோசிக்கிறீங்க!
வித்தியாசமா இருக்கு செண்பகா. அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

அடடா... இப்படிலாம் எங்க இருந்து தான் ஐடியா கிடைக்குதோ!!! அழகான கம கம ஆரத்தி தட்டு ;) சூப்பரா இருக்கு செண்பகா. அதுலையும் காபி பெயிண்டிங் செய்து என்னை ரொம்பவே மகிழ்ச்சி ஆக்கிட்டீங்க... :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்ப்பா..வெரி வெரி குட் ஐடியா..ரொம்ப நல்லா இருக்கு..உங்க குட்டி ரொம்ப அழகா இருக்காப்பா..சுத்தி போடுங்க..

இதுவும் கடந்துப் போகும்.

வாவ்வ் சூப்பர் ..... ரொம்ப அழகா இருக்கு

Really superb neenga unga papa romba super

இப்படிக்கு ராணிநிக்சன்

செண்பகா

மிக அழகான ஈசியான ஆரத்தி தட்டு. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

செண்பகா,

ஆரத்தி தட்டு அழகா இருக்கு. வெகு அருமையா, நேர்த்தியா செஞ்சு காண்பிச்சிருக்கிங்க! வித்தியாசமான ஐடியா!! பாராட்டுக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஆகாஷீ

baminy

rompa nalla irukku superrrr

baminy

இமா அம்மா ரொம்ப நன்றி. //எப்பிடில்லாம் யோசிக்கிறீங்க!// எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் அம்மா. //வித்தியாசமா இருக்கு செண்பகா.// எப்படி செய்யலாம் என்று யோசிக்கும் போது ரேவதிதான் ஐடியாதந்தா அம்மா. அப்பறம் இதை வனிதா சொல்லி கொடுத்தது போல் காபி பெயிண்டிங்குல பண்ணி பார்க்கலாம் என்று செய்து பார்த்தோம் ஓகே நல்லா வந்தது அதான் அறுசுவையில் போட்டு விட்டோம்.

முதலில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் வனிதா.//அடடா... இப்படிலாம் எங்க இருந்து தான் ஐடியா கிடைக்குதோ!!!// இமா அம்மாக்கு சொன்னதுதான் உங்களுக்கும். காபி பெயிண்டிங் உங்க ஐடியாதான். பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ஹாய் அஷ்வினி எப்படி இருக்கீங்க? பாராட்டிற்கு ரொம்ப நன்றி. //உங்க குட்டி ரொம்ப அழகா இருக்காப்பா..சுத்தி போடுங்க..// ரொம்ப நன்றி பா.

ஹாய் ஜனனி, ராணி ரொம்ப நன்றி//Really superb neenga unga papa romba super// மீண்டும் ஒரு நன்றி.

ஹாய் மஞ்சுளாஅரசு எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

ஹாய் சுஸ்ரீ, பாமிணி எப்படி இருக்கீங்க? பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

senbagababu

அன்பு செண்பகா,

எப்பவும் போல, இதுவும் ரொம்ப அழகு. உங்க கை பட்டால், ஆரத்தி தட்டிலும் காஃபி கமகமக்கும். சூப்பர்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

NICE ARTISTIC AARATHI THATTU. VERY NICE CREATION. I THANK SHENBAGAJI, FOR GIVING NICE ART TO THE ARUSUVAI VIEWERS. IT IS LOOKING SIMPLE AND EASY. I HOPE I WILL ALSO TRY IT. BYE.
BOTH OUR THOUGHTS AND METHODS MUST BE GOOD AND NOBLE.

super akka , but oru doubt , picture transparenta thermocol plate la theriuma pls clarify akka