தோழிகளே சஷ்டி விரதம் எப்படி எடுப்பது என்று சொல்றீங்களா?எங்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை.அதனால் என்னையும் உங்கள் தோழியக ஏற்று சொல்றிங்களா?PLEASE...
தோழிகளே சஷ்டி விரதம் எப்படி எடுப்பது என்று சொல்றீங்களா?எங்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை.அதனால் என்னையும் உங்கள் தோழியக ஏற்று சொல்றிங்களா?PLEASE...
சஷ்டி விரதம்
கந்த சஷ்டி விரதம்
ஐப்பசி மாதம் அமாவாசை கழிந்த ஆறு நாள் கொண்டாடுவாங்க. ஆறு நாளும் காலைல குளிச்சு, மடி ஆடை உடுத்தி, முருகன் படம் அல்லது கும்பம் வச்சு பூஜை செஞ்சு கந்த புராணம் படிச்சு, யாருக்காவது சாப்பாடு குடுத்துட்டு பாலும் பழமும் மட்டும் ஆறு நாளும் சாப்பிடுவாங்க. ஆறாவது நாள் விரதம் முடிச்சுட்டு சாப்பிடலாம்.
மாத சஷ்டி விரதம்
சுத்தமா குளிச்சு சங்கல்பம் பண்ணிட்டு பிள்ளையார் பூஜை, அங்க பூஜை செஞ்சு சுப்ரமணிய அஷ்டோத்ர சதநாமாவளி, கந்த சஷ்டி கவசம் சொல்லணும்.
நைவேத்யத்துக்கு பருப்பு, நெய்யோட சாதம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வச்சு சாமி கும்பிடணும். சாயங்காலம் கற்பூர ஆரத்தி காட்டிட்டு டிபன் சாப்பிடலாம்.
குளிக்கும்போது (ரெண்டு விரதத்துலயும்) வடக்கு திசை பார்த்து தண்ணில ஸ்டார் மாதிரி வரைந்து சென்டர்ல ஓம் எழுதி குளிங்க.
KEEP SMILING ALWAYS :-)
NAGA RAM
ரொம்ப நன்றி தோழி.எனக்காக உங்களது நேரத்தை செலவு செய்து பதில் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
இதுவும் கடந்து போகும்.
அனிதா
உங்கள் விரதம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
KEEP SMILING ALWAYS :-)
NAGA RAM
ரொம்ப நன்றி
இதுவும் கடந்து போகும்.