ஊரெல்லாம் ஒரே பேச்சு......

ஹலோ தோழிஸ்.... எல்லோரும் இந்த புது அரட்டைக்கு வந்து உங்க அரட்டை பணியை தொடருங்க.... இந்த அரட்டையில்.....
உங்க ஊர்ல இப்ப எதை பற்றியே பேச்சு ரொம்ப பரபரப்பா போயிட்டு இருக்கு என்பதை இங்க சொல்லுங்க..... செய்தியில் கேட்பதை விட அந்த ஊர் சம்பந்த பட்டவங்க சொல்லி கேட்டா இன்னும் சுவாரிசயமா இருக்கும்.... எல்லோரும் வாங்க வந்து.. உங்க ஊரெல்லாம் எந்த விஷயத்தை பத்தி பேசுகிறது என்பதை சொல்லுங்க.......
"இப்பதிக்கு உங்க ஊருல என்ன ஸ்பெஷல்லா நடந்துட்டு இருக்கு"
அதைபத்தியும் சொல்லுங்க நாங்க கேட்டு தெரிந்து கொள்கிறோம்....

இங்க தமிழில் எழுத கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு அதை பயன் படுத்தவும்.....

இன்னைக்கு ஞாயிறு லீவை எல்லோரும் சந்தோஷமா கொண்டாட்டிட்டு இருக்கீங்க போல....
சரி நாளைக்கு வந்து உங்க ஊர் விஷயங்களை சொல்லுங்க.....

நான் இருப்பது சிங்கார சென்னையில்.... போன வாரம் வரைக்கும் இங்கு ஆடி சேல் தான் ரொம்ப பரபரப்பா போயிட்டு இருந்தது... அதை விட பிரபல துணி கடை அதிபர் கணக்கில் வராத பல கணக்குகளை??? மறைத்து அரசிடம் மாட்டி கொண்டார்..... அதை பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள்......
நான் ஆரம்பித்து வைத்து விட்டேன்.... இனி தோழிகள் தொடரவும்......

ஹாய் தீபா

நான் இருப்பது கோவையில். இங்கேயும் ஆடி தள்ளுபடி தான் பேச்சா இருந்தது. இப்போ தங்கம்விலை ஏற்றம் பற்றியும் கவலை படுறாங்க. அடுத்ததா யார் அரஸ்ட் ஆக போராங்க என்ற பேச்சும் பரபரப்பா நடன்ந்துகிட்டிருக்கு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நான் இருக்கிறது அமீரகத்தில (எமிரேட்ஸ்) இங்க எதப் பத்தி பயங்கரமா பேசிக்கிறாங்க தெரியுமா???

வர ரம்ஜான் லீவுக்கு எங்க போறதுங்கறதுன்னு பத்திதான்;-) பின்னே இரண்டு மூணு நாள் சேர்த்து லீவு வரதுல;-)

Don't Worry Be Happy.

என்னப்ப பேசலாம்னு கூப்பிட்டு இங்க யாரையுமே காணமே எங்கப் போனீங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் இருக்கறது கரூர்ல இங்க கொஞ்ச நாள திருட்டு நடக்கு.. சோ.. இங்க இதபத்தி தான் பேச்சு... தங்க நகை யாரும் போட வேண்டாம்னு சட்டம் வரத குறை தான்... இப்ப இங்க யாரும் தங்க தாலி சரடு பொடுறது இல்லை.. மஞ்சள் கயறு தான்....

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

என் அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம் அடுத்தது மன்னிப்பு சொல்லாம கொள்ளாம எங்க போயிட்டேன்னு நீங்க எல்லாரும் தேடனது தெரியவந்தது அதனால் தாண் இந்த மன்னிப்பு ஆஃபிஸ் புதிது படுத்தும் வேலைகளில் ரொம்ப மும்முரமாக ஈடுபட வேண்டியதாயிற்று என் போனையும் ஆஃபிஸ் ஸ்டாப் இன்னொருவரிடம் கொடுத்ததால் என் அருசுவை தோழிகளை நான் ரொம்பவே மிஸ் பன்னிட்டேன். எல்லாரும் கைய்யில் கம்பெடுத்து விடாதீர்கள் நான் ரொம்ப பாவம்.

சீக்கரம் வாங்க பேச நிரைய இருக்கு

தோழிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அன்புடன்
ஸ்ரீ

வாங்க... வாங்க... எங்கப்பா போனீங்க இவ்ளோ நாளா? எப்படி இருக்கிங்க? உங்களை Facebook gmailந்னு பிடிக்க ட்ரை செய்தேன்... ஆள் சிக்கவேயில்லை.....

கொஞ்சம் பிஸி அவ்லோ தான்.

அப்ரம் உங்க வேலை பாப்பா எல்லாரும் எப்டி இருக்கீங்க நான் சூப்பரா இருக்கேன் பா

அன்புடன்
ஸ்ரீ

எப்படி இருக்கிங்க? உங்ககூட பேசி எவ்ளோ நாள் ஆகுது.... உங்க ஊருல ரமலான் லீவ்தான் இப்ப பேச்சா இருக்கா..... (அப்ப நிறைய வீட்டில இருந்து உங்களுக்கு பிரியாணி வரும்ன்னு சொல்லுங்க... :))

நானும் என் த்ரிஷி குட்டி பையனும் நலம்.... நீங்க திரும்பவும் வந்ததுல ரொம்பவும் சந்தொஷம்..... இனிமேல் தினமும் வருவீங்கல...... உங்களை நம்ம கல்ப்ஸ், ஸ்வர்ணா எல்லொரும் கேட்டுட்டே இருந்தாங்க பா....

மேலும் சில பதிவுகள்