கெழுத்தி மீன் குழம்பு

தேதி: August 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

கெழுத்தி மீன் துண்டுகள் - 6
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 5 பல்
வர மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 5 இதழ்
எண்ணெய் - தாளிக்க
கடுகு - சிறிது
வறுத்து அரைக்க:
சீரகம் - 2 மேசைக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - 1 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 5 இதழ்

வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீன் துண்டுகளை புளித் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். வரமிளகாயை கிள்ளிக் கொள்ளவும். புளியை தனியே குழம்பிற்காக ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டியவற்றை போட்டு வறுத்து ஆறியதும் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை வெடிக்க விட்டு முதலில் வரமிளகாயை போட்டு வறுத்து, பின் பூண்டு மற்றும் வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும். பின் தக்காளியை சேர்த்து நன்கு குழையும்படி வதக்கவும்.
நன்கு ஒன்று சேர கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தனியாத் தூளை சேர்த்து பச்சை வாசம் போகும்படி 3 நிமிடம் கொதிக்க விட்டு புளிக்கரைசலை ஊற்றவும்.
பின்னர் எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மீன் குழம்பு ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்... சூப்பர்!! பார்த்ததும் உங்க குறிப்புன்னு தோனுச்சு... கரக்டா நீங்க தான் :) பார்த்தாலே சாப்பிட ஆசை வந்துருச்சு. சீக்கிரம் செய்துட்டு வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கும் போதே நாக்கு ஊருது நான் இப்பவே ட்ரை பன்றேன்

-ரஸினா

நல்லா இருக்கு ரம்யா.... நான் ரொம்ப சிம்பிளா வெச்சிருவேன்.... எனக்கு இந்த மசாலா பிரெஷ் ஆக அரைத்து செய்தது ரொம்ப பிடிச்சிருக்கு... ரொம்ப அழகா இருக்கு கடைசி படம்... அருமையான குறிப்பு.... கண்டிப்பா இந்த வாரம் செய்துட்டு சொல்றேன்.... இது எந்த மீன்ல வேணாலும் செய்யலாமா....?? வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

ஹாய் ரம்யா நான் அறுசுவைக்கு புதுசு. உங்க மீன் குழம்பு சூப்பரோ சூப்பர்.

ரம்ஸ் மீன் குழம்பு வாசனை இங்க அடிக்குதுப்பா சூப்பர்ர்ர்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இது கேட் பிஷ்-ஆ? ரம்மி எப்படி இப்படி எல்லாம்......நிறைய பொருள் சேர்த்து சூப்பரா பண்ணியிருக்கீங்க.....எங்களையெல்லாம் சாப்பிட கூப்பிட மாட்டீங்களா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரம்யா மீன் குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கெழுத்தி மீன் குழம்பு நாக்குல தண்ணீர் வருது வாழ்த்துக்கள் ரம்யா, படங்கள் தெளிவுக்கும் பாராட்டுக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பாரட்டுகளுக்கு மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமாம்.கேட் ஃபிஷ் தான்.. நீங்க எப்ப வறீங்கனு சொல்லுங்க ..அப்ப நான் எடுத்து ரெடியா வைக்கிறேன்.. நீங்க சமைபிங்களாம்.. உங்க சமையல் சாப்பிட ஆசை.. :).. அதிலும் மட்டன் பிரியாணி :)..நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப தேங்க்ஸ் டா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றிங்க.. அறுசுவைக்கு வரவேற்கிறேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நானும் சிம்பிளா செய்வேன் டா.. இந்த முரையிலும் செய்வேன். பொதுவா கேட் ஃபிஷ் நல்லா வாடை அடிக்கும்.. அதான் மசாலா இத்தனை.. ரொம்ப நன்றி..எந்த மீனில் வேணாலும் மாடலாம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா செய்து பார்த்து எப்படி இருந்ததுனு மறக்காம சொல்லுங்க. நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

;) முதல் பதிவுக்கு நன்றி.. எப்படி இருந்ததுனும் சொல்லுங்க. ;)
நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,
கெளுத்தி மீன் பயங்கரமான மீன் போலே இருக்குமே!!
எப்படியோ வீரமா குழம்பு வைச்சுடீங்க!!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Thunkalaya

கெளுத்தி மீன் பயங்கரமான மீன் போலவா ? :-)
நாங்க நல்லா வெட்டி க்ளீன் செய்து ஃபில்லட்ஸ்ஸா தானே கடையில் இருந்தே வாங்குவோம்..
முழுசா வாங்குவது இல்லை ..நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Good Morg kavi

போட்டோ பாத்த உடனே நினைச்சேன், நீங்க தான்னு....
கலக்கறீங்க ரம்ஸ். ஒன்னும் சொல்லிகரக்கு இல்ல,போங்க!!
சூப்பர் ஹா இருக்கு :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

superb fish curry

இப்படிக்கு ராணிநிக்சன்

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி டா..
எதுவும் சொல்ல வேண்டாம்.. செய்து பார்த்துட்டு சாப்பிட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்கோ ;) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா, இன்று இந்த மீன் குழம்பு செய்தேன்... நன்றாக இருந்தது....

நன்றி.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான் சுவைத்த மீன் குழும்பில் இது தான் பெஸ்ட்.

Hi Ramya,Tasty Recipe..Wonderful Pics:)

"Happiness is a habit, cultivate it"

Hi mam,
We tried ur receipe today. It was very nice. My husband also likes it very much. thanks for the good receipe.

This has become my all time favorite fish curry

Super a erukku fish kuzhambu mmmmmmmmmmmmmm