கோவக்காய் பொரியல்

தேதி: August 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

 

கோவக்காய் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

கோவக்காயை வட்டமாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் கோவக்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
நன்றாக கிளறி மூடி வைத்து அடிக்கடி கிளறி நன்கு சிவந்து வந்ததும் இறக்கவும்.
சுவையான கோவக்காய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவர்ணா, கோவக்காய் பொரியல் பார்க்கவே சுப்பரா இருக்கு, நான் சாம்பார்ல மட்டும் தான் போடுவேன், உங்க குறிப்ப பார்த்ததும் உடனே செய்யனும் போல இருக்கு, வாழ்த்துக்கள்.

கோவக்காய் பொரியல் சூப்பர் நானும் அப்படித்தான் செய்வேன் ஆணா வெங்காயம், தக்காளி சேர்க்க மாட்டேன்.

பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு

அன்புடன்
ஸ்ரீ

நாங்களும் இப்படி தான் செய்வோம்... ஆனா வெறும் மிளகாய் தூள் சேர்ப்பதில்லை, சாம்பார் தூள் சேர்ப்போம். இது போல் ட்ரை பண்றேன். நல்லா இருக்கு கலர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ஸ்வர்ணா,

இதுவரைக்கும் கோவக்காய் சமைத்ததே இல்லை. உங்க குறிப்பை பார்க்கும்போது, செய்து பார்க்கத் தோன்றுகிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

dear swarna,nanum ipadi than seiven.but tomato serkamaten.very nice for ur recipe.

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா, நானும் இப்படி தான் செய்வேன். நன்றாக இருக்கும். கடுகு,
உ. பருப்பு, கறிவேப்பிலை தாளிப்பேன். இது தான் வித்தியாசம்.

நான் செய்ததே இல்லை.. ஒருமுறை வாங்கி ட்ரை பண்ணி பாக்கறேன்.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

sariya sonnirkal ramya

ஸ்வர்ணா,

எனக்கு ரொம்ப பிடித்த பொரியல்!!! கிடைக்கணுமே :-(
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

s s

ஸ்வர்ணா நான் கடைல பார்த்து இருக்கேன் கோவக்காய்.எப்படி சமைபாங்கனு(என் கணவர்கிட்ட )கூட கேட்டேன் அவர் தெரிலன்னு சொல்லிட்டார் இன்னைக்கு தெரிந்துவிட்டது...வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஸ்வர்ணா,
கோவக்காய் பொரியல் அழகா செய்து இருக்கீங்க.இங்கு கிடைக்கும்போது செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

ஸ்வர்ணா கோவக்கா பொரியல் பார்க்க நேத்ரம் சிப்ஸ் மாதிரி சூப்பரா இருக்கு. அழகா நறுக்கி செய்து இருக்கீங்க.

எங்க ஆபீஸ் ல ஒருத்தங்க,இப்படி தான் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க. சூப்பர் ஹா இருக்கும். இதுவரை இந்த காய் பண்ணியது இல்லை. சீக்கரமே பண்ணிடறேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஸ்வர்ணா... இந்த பொரியல் தயிர் சாதத்துக்கு ஒரு செம காம்பினேஷன்... நல்லா செய்து காட்டி இருக்கீங்க... நான் தக்காளி சேர்க்காம செய்திருக்கேன்... இது போலவும் செய்து பார்க்கிறேன்... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றிகள் பல

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி மனோ கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆஹா ஸ்ரீ உன் பதிவை அறுசுவையில் பார்த்து எத்தனை மாதம் ஆகுதுப்பா ரொம்ப சந்தோசம் நீங்க வந்தது:))

இந்த முறையில் செய்து பாருப்பா நல்லாருக்கும் :)நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வனி. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சீதாம்மா இனி செய்துபாருங்கம்மா ரொம்பவே நல்லாருக்கும்.ரசம்சாதம்,மோர் சாதத்துக்கு பொருத்தமா இருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அனிதா மிக்க நன்றி தக்காளி சேர்ப்பதால கோவக்காய் சுவை,காரம்,தக்காளியின் புளிப்பு சுவை எல்லாம் கலந்து நல்லா இருக்கும்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாப்ஸ் உமா நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா :)
அடுத்த முறை உங்க முறைப்படி தாளித்து செய்து பார்க்கிறேன் நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் செய்ததில்லயா பா ஆஹா அடுத்த முரை வாங்கி செய்து பாருங்க ரொம்பவே நல்லாருக்கும்..
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி உங்களுக்கு பிடிக்குமா சந்தோசம் பா,கிடைக்கும்போது செய்து பாருங்க

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குமாரி அப்படியாப்பா சரி பரவால்ல இனி அடிக்கடி செய்வீங்க பாருங்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் அன்பு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுகி மிக்க நன்றிப்பா,கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லிடு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்யா வாழ்த்துக்கு மிக்க நன்றி,செய்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர் கோவக்காய் பொரியல் ரொம்ப சூப்பரா இருக்கு நானும் செய்து பார்க்கிரேன் வாழ்த்துக்கள் ஸ்வர்:)

உன்னை போல பிறரையும் நேசி.

it is very nice to eat and prepare. i did not tried this. i have seen your dish only, i made it. thank you.