குழந்தை சீக்கிரம் பேச வைக்க?

ஆண் குழந்தை பேச தாமதமானால் என்ன செய்வது தோழிகளே ? இருபது வாரங்கள் முடிந்து விட்டன ( ஒன்றே முக்கால் வருடம் ). "டாட்டா" மற்றும் "ம்மா ம்மா ம்மா" மட்டும் சொல்கிறான்..... தேன் அடிக்கடி உணவில் சேர்க்கிறேன்......

இந்த லிங்குக பாருங்க. இந்த தலைப்பில் ஏற்கனவே நிறைய பேசி இருக்காங்க. உங்களுக்கு உதவும் நினைக்கிறேன். http://www.arusuvai.com/tamil/node/8000
http://www.arusuvai.com/tamil/node/12660
http://www.arusuvai.com/tamil/node/4837

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி ....

Destiny creates situations and its WE, who creates our destiny by the way we handle our situations!!!

பக்கத்து வீட்டு பெண் குழந்தை 2.5 வயசு வரை எதுவும் பேச மாட்டாள்..ரொம்ப கவலை பட்டார்கள்..மூன்று வயசிலெல்லம் கொஞ்சமாக சில வார்த்தைகள் சொல்லுவாள்..ஆனால் இப்ப 3.5 வயது ஒரு சில மாசம் தான் ஆச்சு பேச தொடங்கியே ஆனால் நானே ஆச்சரியப்படும் அளவுக்கு ரொம்ப அழகாக பேசுகிறாள்..நீங்கள் பேசிட்டே இருங்க அவர் திடீர்னு பேச ஆரம்பிச்சால் போதும் பிறகு உங்க பாடு தான்

நேற்று கேட்டேன்"ஏம்மா கவலையா இருக்கீங்க"
குட்டிப் பெண்" ஆண்ட்டி என் கொலுசு பிஞ்சுடுச்சு"
"நாளைக்கு ஆன்ட்டி வாங்கி தறேன்"
"வேணாம் என் டாடி தங்ககொலுசு வாங்கி தருவாங்க"

இந்தளவுக்கு அவங்க முன்னேறிட்டாங்க ..நான் ஆச்சரியப்பட்டேன்

மிகவும் ஆவலாக இருக்கேன் ...பேசும் நாளை எதிர்பார்த்து :)

Destiny creates situations and its WE, who creates our destiny by the way we handle our situations!!!

மேலும் சில பதிவுகள்