கார குழிப்பணியாரம்

தேதி: August 31, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

இட்லி மாவு - ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகுத்தூள் - 3 அல்லது 4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
மல்லி தழை, கறிவேப்பிலை - சிறிது
ரவை - ஒரு டம்ளர்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

வெங்காயம், மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
மாவில் நறுக்கிய வெங்காயம், மல்லிதழை, கறிவேப்பிலை, மிளகுத்தூள், ரவை ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ரவை சேர்ப்பதினால் மாவு இறுக்கமாக இருக்கும்.
அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி சிறு தீயில் வேக விடவும்.
திருப்பி விட்டு சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான ஈசியான கார குழிப்பணியாரம் ரெடி. கார சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். ரவை சேர்ப்பதினால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்படி தான் நாங்களும் பண்ணுவோம், ரவை மட்டும் சேத்தது இல்ல,அடுத்த முறை சேத்தி பண்ணி பாக்கறேன்ம்மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பர்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகந்தி சொன்னதுபோலவே நானும் ரவா சேர்த்ததில்லை
ரவா போட்டு கார குழிப்பணியாரம் செய்தேன். ரொம்ப நல்லா இருந்ததும்மா.

பொன்னி

அன்பு ஃபாத்திமா,

ரவை போட்டு செய்வது வித்தியாசமாக இருக்கு. இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் பாத்திமா... நாங்களும் இப்படித்தான் செய்வோம். ஆனால் ரவை சேர்க்காமல் முட்டை சேர்ப்போம். ரொம்ப சாஃப்ட்டா மணமாக இருக்கும். மழை காலங்களில் மாலை நேரத்தில், விடுமுறை நாட்களில் காலை நேர உணவாக சாப்பிட எங்களுக்கு ரொம்ப இஷ்ட்டம். விருப்பமான குறிப்புகள் கொடுத்ததற்க்கு வாழ்த்துக்கள்.வோட் போட்டு விருப்பப்பட்டியலிலும் சேர்ந்தாச்சு.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

பாத்திமா அம்மா,

சுவையான பணியாரம் ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

செய்துட்டு சொல்லுடா முதல் ஆளாய் வந்தது நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செய்துட்டீங்களா மகிழ்ச்சி மிக்க நன்றி

செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

விருப்பபட்டியில் சேர்த்ததுக்குரொம்ப சந்தோசம் மிக்க நன்றி

கவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

பாத்திமா சூப்பரான எளிமையான பணியாரம் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா நல்லா இருக்கு செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

nalla irrunthadhu

Very nice taste ur recipy, i prepared 2 times, really gud this methoad, Thanks for your dish.. by Hema Prasanna at London

வாழ், வாழ விடு