பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?

அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை நட்புகளுக்காக ஒரு தலைப்பு:

“பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?”

தலைப்பை தந்த தோழி “இஷானி”கு மிக்க நன்றி :)

தேவையான டாப்பிக்னு தோனுச்சு... உங்களுக்கும் வாதிட பிடிக்கும்னு நம்பிக்கையில் தேர்வு செய்துட்டேன் ;) வாங்க வாங்க... எல்லாரும் வந்து வாதங்களை வைங்க.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

எல்லாரும் வாங்க... பட்டி தடை இல்லாமல் துவங்கியாச்சு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நல்ல டாபிக் வாழ்த்துக்கள். நானும் கலந்துக்குறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பட்டியை தகுந்த நேரத்தில் தொடங்கிய நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..... அருமையான தலைப்பை தந்த இஷானி அவர்களுக்கு நன்றி.

பிச்சை என்பது லஞ்சம் வாங்குவதற்கு சமம். லஞ்சம் வாங்குவதும்,தருவதும் எப்படி தப்போ அதே போல தான் பிச்சை போடுவதும் எடுப்பதும். இதுல இருந்தே நான் எந்த அணி என்பது நடுவருக்கு புரிந்து இருக்கும். ஆம்,
பிச்சையிடுவதால் சமூகத்தை சீரழிக்கிறோம், சீரழிக்கிறோம்.....

வாதங்களுடன் விரைவில் வருகிறேன்!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நல்ல அவசியமான தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்..அதற்கு வாழ்த்துக்கள்..இப்படி ஒரு தலைப்பை தந்த இஷானிக்கு என் நன்றிகள்..
நாணும் முடிந்தளவில் பட்டியில் பங்குக்கொள்கிறேன்.

இதிலென்ன சந்தேகம் சமூகத்தை மட்டுமல்ல சமுதாயத்தையே சீரழிக்கிறோம்..இதற்கே என் வாதங்கள்..சீக்கிரமே வருகிறேன் நல்ல வாதங்களுடன்..

இதுவும் கடந்துப் போகும்.

நடுவரே..வணக்கம்! அருமையான தலைப்பு.சமுதாய சீரழிவுக்கு காரணம் பிச்சையிடுவதேங்கிற அணிக்குதான் என்னோட ஓட்டு.பிச்சை போடுகிறவர்கள் பிச்சைகாரர்களை சோம்பேரிகளாக உருவாக்குகிறார்கள்.ஒருவேளை பசியாற்ற அவர்களுக்கு பிச்சை போடுறதை தவிர்த்து ஏதாவது தொழில் கற்பதற்கு உதவி செய்தால் அவன் பலவேளை பசியாறுவதர்க்கும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்வதற்க்கும் உதவியாக இருக்கும். மீண்டும்சில கருத்துக்களோடு வருகிறேன்.

radharani

ஒரு காலனியில் ஒரு ரவுன்ட் சுத்தினா கண்டிப்ப குறைந்தது அன்றைய மூன்று வேளை சாப்பாட்டுக்கான காசு கிடைச்சாச்சு..
வருகிற பிச்சைக்காரர்களில் முக்கால் வாசி மூஞ்சியை கண்டால் என்னவென்று சொல்வது..பார்த்தாலேயே வெளியில் இருக்கிற செருப்பையெல்லாம் அள்ளி வீட்டுக்குள் கொண்டு வந்து வைக்கும் அளவுக்கு களையாக இருப்பாங்க..நல்ல கல்லு மாதிரி இருந்துகிட்டு எந்த வேலையும் செய்யாம ஈசியா காசு வாங்கிட்டு போறது சரியா..அதை கொடுக்கிறவர்களையும் சொல்ல வேண்டும்..வயசானவங்க ,உடல் ஊணமுற்றவங்க இம்மாதிரியானவர்களை அவர்கள் வராமலேயே நாமே ரோட்டில் தேடிப் பிடிச்சு கொடுப்போம் அது வேற கதை.
சும்மா கை ஏந்திக் கொண்டு சின்ன குழந்தைகள் கூட வரும் தர மாட்டேன் என்றால் கேட்டிலேயே துப்புவது கெட்ட வார்த்தையால் திட்டுவது என போவார்கள்.மனிதர்களாக ஒன்று சேர்ந்து இவர்களை ஒழித்தால் தான் உண்டு.
பதினைந்து பதிநாறில் எல்லாம் குழந்தையை பெற்று பச்சிளம் குழந்தையை முதுகில் கட்டி தூக்கிக் கொண்டு வருவதை பார்த்தால் என்னவென்று சொல்வது..அந்த பிஞ்சு முகத்தை கண்டால் பரிதாபமாக இருக்கும்.இதில் உண்மையில் பலதும் குழந்தையை காட்டி பிச்சை எடுக்க வருபவர்கள் தான்.
தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பது தர்மம்.நானும் கொடுக்கிறேன் என்று திருப்திபட்டுக்க கொடுப்பது பிச்சை.இது கண்டிப்பா ஒழிய வேண்டும்.
சம்பாதிப்பதை அப்படியே மூட்டை மூட்டையாக கட்டாமல் முடிந்தால் ஓரிரு குழந்தைகளுக்கு கல்வியளிப்பது,இல்லாதவார்களுக்கு தேடிப் போய் உதவுவது.நொYவாய்ப்பட்டவர்களுக்கு அநாதைகளுக்கு வயதானவர்களுக்கு என்று எல்லாரும் சிந்தித்தால் பிச்சை என்பது எதற்கு..
பிச்சைகாரர்கள் எல்லோரும் வேறவழியில்லாமல் வருவது கிடையாது..சும்மா கைய்யை காட்டினால் சில்லறையாச்சே என்று தான் வருகிறார்கள்..கொடுக்காமல் இருப்பதுவே இவர்களை பின்னாளில் ஒழித்துக் கட்ட உதவும்

வனி எனக்கு தலைப்பு புரியவே இல்லைபா;( சமூகம்னா பிச்சைக்காரர்கள் சமூகத்தையா சொல்றீங்க .....கொஞ்சம் தெளிவு படுத்துங்கப்பா......

பிச்சைக்காரர்களின் சமூகம்னா இன்னும் சுவராஸ்யமா இருக்கும்;) அவங்களுக்குதான் சுவிஸ்பேங்கிலேயே அகவுண்ட் இருக்கே;-))

Don't Worry Be Happy.

குமாரி... முதல் ஆளாக வந்திருக்கீங்க... மிக்க நன்றி. சீக்கிரம் அணியை முடிவு பண்ணிட்டு வாங்க :)

சுகி... வாங்க வாங்க... அணி முடிவாயிடுச்சா... குட் குட். சீக்கிரம் வாதத்தோடு வாங்க, காத்திருக்கோம்.

அஸ்வினி... வருகைக்கு மிக்க நன்றி... நீங்களும் சீரழிக்கிறோம் அணி தானா... கலக்குங்க சூடான வாதத்தோடு :)

ராதாராணி... வருகைக்கு மிக்க நன்றி :) நீங்களும் சீரழிக்கிறோம் அணி... //ஒருவேளை பசியாற்ற அவர்களுக்கு பிச்சை போடுறதை தவிர்த்து ஏதாவது தொழில் கற்பதற்கு உதவி செய்தால் அவன் பலவேளை பசியாறுவதர்க்கும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்வதற்க்கும் உதவியாக இருக்கும்.// - பாய்ண்ட் ரொம்ப சரி... ஆனா எதுவுமே செய்ய முடியாதவர்கள்? அவங்களுக்கு என்ன செய்து உதவுவது? வாங்க, இன்னும் வாதத்தோடு. காத்திருக்கேன் :)

தளிகா... ஆகா... பட்டி பக்கம் தளிகா வந்திருப்பதை நமப் முடியலயே!!! :) மகிழ்ச்சியா இருக்கு தளிகா மிக்க நன்றி. வித விதமா பிச்சை எடுப்பவர்களை பற்றி அழகா சொல்லி இருக்கீங்க... உண்மை உண்மை... ஆனா ஒழிக்க முடியுமா தெரியல... :) தர்மத்துக்கும் பிச்சைக்கும் நீங்க காட்டிய வித்தியாசம் அருமை. வாங்க இன்னும் வாதங்களோடு... காத்திருக்கோம்.

ஜெயலக்‌ஷ்மி... பிச்சைகாரங்க சமூகம் பற்றிலாம் யோசிக்கிற அளவுக்கு நான் புத்திசாளியும் இல்லை, நல்லவளும் இல்லை... ;) பொதுவா நம்ம மனித சமுதாயத்தை சொன்னேன். தெளிவாயிடுச்சா? வாங்க வாதத்தோடு :)

எங்கப்பா... எல்லாரும் சீரழிக்கிறோம் அணிக்கே போயிட்டீங்க... முடியாம வந்து பிச்சை எடுக்கும் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் இவங்களுக்கு கூட பிச்சை போடுறது தவறா?? பாவப்பட்ட ஆட்கள் பார்த்து 1 ரூபாய் கூட போட்ட ஆட்கள் நம்ம அறுசுவையில் இல்லையா??!!! வாங்கப்பா எதிர் அணி... அப்பறம் வாதமே இல்லாம தீர்ப்பு வந்துட போகுது!!! ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா இப்ப நல்லா புரிஞ்சுடுச்சு நடுவரே;) இந்தப் பட்டி பாத்து பிச்சைக்காரங்க சங்கத்த சேர்ந்தவங்க நம்மளை ரவுண்டு கட்டாம இருந்தா சரி;-)

நடுவரே

எதிர் அணி இல்லைன்னா ஈசியா பட்டித்தீர்ப்பு சொல்லிடலாம்னு நினைச்சீங்களா?
அப்படியெல்லாம் நாங்க உங்களை ஆயாசமா உக்கார விட்டுருவோமா என்ன?
வாழவைக்கிறோம்னே வாதாட வரேன்;) இப்போ சந்தோஷமா;-)

Don't Worry Be Happy.

நடுவருக்கு இப்ப தான் மூச்சு வந்திருக்கு... பின்ன... எதிர் அணிக்கு ஆள் கிடைச்சாச்சே!!! :) வாங்க வாங்க வாதத்தோடு வாங்க... ஏற்கனவே எதிர் அணி கொடுத்த வாதத்துக்கு பதிலும் கொண்டு வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்