சிநேகிதியே..இவள் உங்களின் தோழியே...(புதுப்பொலிவுடன்)

என்னப்பா கலைஞர் டி.வில நிஷா நடத்துற ஷோ மாதிரியே இருக்கேன்னு பார்க்கறீங்களா..சும்மா உங்கள எல்லாம் உள்ள இழுக்கத்தான்.நான் இப்போதைக்கு இந்த ப்ரோக்ராமை பார்க்கிறேன்,அந்த மாதிரி நீங்க என்ன ப்ரோக்ராம்,எந்த டி.வில எத்தனை மணிக்கு பார்க்கறீங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்,ஏன் ஒரு விளாம்பரம்,ஒரு பாட்டு,ஒரு சீன் இப்படி எது வேணும்னாலும் உங்கள கவர்ந்தத பத்தி சொல்லுங்க,ஆனா மெகாகாகாகாகாகா சீரியல் பத்தி வேண்டாம்டா சாமி,அதுல உள்ள குட் திங்ஸ் ஆல்வேஸ் வெல்கம்,சீரியஸா டிஸ்கஸ் பண்ணாம,அதுல என்ன நல்ல விஷயங்கள் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லுங்க,அப்புறம் என்ன எப்பவும் போல நம்ம அரட்டையும் இங்க தொடரட்டும் நான்ஸ்டாப்பா..பார்ப்போம் யாரெல்லாம் முதல்ல அட்டெண்டன்ஸ் போடறாங்கன்னு..வாங்க வாங்க.

என்னுடைய ப்ரோகிராம் எப்பவும் சமையல் குறிப்பு தான் சன் ல சனிக்கிழமை 1 மணிக்கு அப்புறம் ஜெயால சாயங்காலம். அப்புறம் TLC நு ஒரு சானல் உண்டு அதுல வேற வேற நாட்டுல எப்பிடிலாம் சமைக்குறாங்கனு போடுவாங்க... சமைச்சும் காண்பிப்பாங்க. நிறைய போட்டி வைப்பாங்க அது ரொம்ப பிடிக்கும்.... இன்னும் இருக்கு சொல்றேன்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

உங்களூக்கு அட்டண்டன்ஸ் கொடுக்க வந்தேன்... ;) ஆனா எந்த ப்ரோக்ராமும் நான் ரெகுலரா எந்த டிவியிலும் பார்த்ததில்லை... எனக்கு நேரமெல்லாம் நினைவில் வைத்து எந்த ப்ரோக்ராமும் வைக்க நினைவிருக்காது... அந்த அளவுக்கு எந்த விஷயத்தையும் ரசிப்பதும் இல்லை. :( நான் அந்த பக்கமா போகும் போது யார் எதை வைத்து பார்த்துக்கொண்டிருந்தாலும் பிடிச்சா உட்கார்ந்து பார்த்துட்டு போயிடுவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்பா நா 24 மணிநேரமும் பாட்டு தா போகும் பா ஆனா கண்ணால பாக்கமாட்டொம் கேட்போம் ஏன்னா நிறைய பாட்டு பாக்கற மாறி இல்ல பா சுட்டி டிவி பாப்பேன் எப்ப வேணாலும் slimpig handymanny dragonboster பிடிக்கும்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் அஸ்வினிதியாகு நல்ல தலைப்பு சொல்லி இருக்கிங்க என்னுடைய ப்ரோகிராம் எப்பொதும் காமெடிதான்.நான் என்னை மறந்து சிரிக்க.அப்புறம் பாட்டு கேட்கிறது.எக்காரணம் கொண்டும் சீரியல் கிடையாது.

இன்று வேளையை இன்றை முடிப்பது

ராகமாலிகா...

எனக்கு இந்த ப்ரோக்ராமும் ரொம்ப பிடிக்கும்,ஆனா இப்போ இங்க ஜெயா டிவி இல்ல அதனால பார்க்க முடியலைப்பா.

மீணு:வாங்க,எப்படி இருக்கீங்க?இதான் முதல் தடவை உங்க கூட பேசறேன்னு நினைக்கிறேன்,நீங்க எங்க இருக்கீங்கப்பா?கொஞ்சம் முடிஞ்சா ப்ரோக்ராம் பேரும் சொல்லுங்களேன்.

வனி:குட்டுமார்னிங்,வாங்க,என்ன ஸ்பெஷல்?இப்படி சொல்லிட்டீங்க?எல்லா ரசனையும் ஒரே இடத்துல (அண்ணாக்கிட்ட) கொட்டிடீங்களா?வெக்கப்படாதீங்க,எனக்கே உங்க பிங்க் முகம் தெரியுதுப்பா?சரி வேற என்ன ரசிச்சு பார்ப்பீங்கன்னு சொல்லுங்கப்பா?

ரேணு:வாங்க,காலை வணக்கம்..பாட்டுதானா,நாணும் அப்படித்தான் இருந்தேன்,இப்போதான் எப்ப பார்த்தாலும் டிஸ்னி சேனல்தானே ஓடுது,அதான் செலக்டட் ப்ரோக்ராம்ஸ்க்கு ஷிப்ட் ஆயாச்சு..

நித்தியா:வாங்க,தாங்கஸ்,சில பல ப்ரோக்ராம் பார்க்கறதுக்கு காமெடி ஓகே,ரொம்ப நல்லது,ஆனா வர வர குட்டீஸ வச்சிக்கிட்டு காமெடிகூட பார்க்க முடிய மாட்டேங்குது,வேற பர்ட்டிக்குலரா என்ன பார்ப்பீங்க?காமெடிலகூட யார் காமெடி ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்களேன்?

எங்க,இந்த பசரி,மெர்,ரேணு,கல்ப்ஸ்,எல்லாரும் எங்கப் போனாங்க,வாங்க வந்து கொஞ்சம் பேசுங்கப்பா...கொஞ்சம் அரட்டையும் அடிங்கப்பா,எப்ப இருந்து இப்படி நல்ல பிள்ளையா மாறீனீங்க எல்லாரும்..அடடா,கொஞ்சம் ப்ரேக் கொடுத்தது பிரச்சனையா போச்சே..

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி,
எனக்கு முழு நாள் அலுவலகத்தில் ஓடிவிடும். ஞாயிற்றுகிழமைகளில் என் சுட்டி கூட ஓடி விடும். எப்போதாவது டைம் கிடைத்தால் எனக்கு நம்ம தல அஜித்- ரொம்ப, ரொம்ப பிடிக்கும். அவர் பாடல்கள் போட்டால் சேனல் மாற்றி மாற்றி பார்ப்பேன்.

ஒரே சேனலாக பார்க்க பிடிக்கலப்பா.சேனல் மாற்றி மாற்றி பார்ப்பேன்.விளம்பர கேப்பில் சேனல் மாற்றி 2 சினிமா ஒரே நேரத்தில் பார்க்கர ஆளு நாங்கள்ளாம். ஹீ ஹீ .

1)sun music,இசையருவி
2)எந்த ஹிந்தி டப்பிங் தொடர்கள்(இரு மாதத்திற்கு ஒரு முறை என்றாலும் :-) for their dress and make up )
3)சமையல் குறிப்பில் அஞ்சறை பெட்டி(ஊர் ஸ்பெஷல்), தாமோதரன் சாரின் ப்ரோகிராம்(அளவு correct), .
4)விஜய் டிவி(அலட்டல்தான் ஆனால் music quality,நீயா நானா).
5)tlc to discovery -programs about fish ,dish, birds

ஆனால் கணவர் பார்க்கும் ஆதித்யா டிவியை தவிர மற்றதை பார்க்க நேரமில்லை.

அதை விட என் பொண்ணு கையில் ரிமோட் கிடைச்சா அவ எது பார்கறாளோ அதுதான் எல்லார்க்கும். இன்னும் கார்டூன் பார்க்க ஆரம்பிக்கலைபா.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

sun music,இசையருவி
விஜய் டிவி (Airtel super singer, நீயா நானா)

செம குஷியா,ருசியா குலோப்ஜாம்..

இந்த விளம்பரம்தான் இப்ப எங்க வீட்டுல நெம்பர் ஒன்,ஏன்னா என் பொண்ணு அதுக்கு ஆடற ஆட்டம்தான் காரணம்..

மல்லி:அதுசரி,அப்போ டிவி பார்க்கறதே இல்லையா?என்ன கொடுமை மல்லிகா இது?

ஜெயா:பெரிய ஆளுதான் போங்க..இப்படி மாத்தி மாத்தியே இத்தனை ப்ரோக்ராம் பார்க்குறீங்க போல,கலக்குங்க

கீதா:அப்பாடி பாட்டுதான் போல,நம்ம மூடு எப்படி இருந்தாலும் இந்த பாட்டு மாத்தி விட்டுடும் அதான் இந்த சங்கீதத்தின் ஸ்பெஷாலிட்டியே,எனக்கும் எப்பவும் எஃப்.எம் ஓடிக்கிட்டு இருக்கணும் நெட்ல,நல்ல விஷயம்,ஆனா உங்கள நம்ம பாட்டு பாடி அசத்தின அரட்டையில ஆளயே காணுமே,ஏன் வரலை?

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி, காலையில் வீட்டு வேலை பார்க்கவும், ஜீவியை கவனிக்கவும் சரியாக இருக்கும். பிறகு அலுவலகம்.பிறகு 7 மனிக்கு திரும்ப வீடு அப்புறம் இரவு சமையல், பிறகு ஜீவியுடன் கொஞ்சம் விளையாட்டு, அப்புறம் தூக்கம். ஞாயிற்றுகிழமைகளில் வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, ஜீவியுடன் விளையாட்டு.

மேலும் சில பதிவுகள்