ப்ரட் பஜ்ஜி

ப்ரட் பஜ்ஜி

தேதி: June 24, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

மாலை நேரத்தில் ஏதேனும் சூடாக சாப்பிடுதல் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பஜ்ஜி, வடை போட்டு விற்கும் எல்லா டீக்கடைகளுமே மாலை நேரத்தில் மிகவும் பிஸியாக இருக்கும். இனிய மாலைப் பொழுதை ஒரு சுவையான பஜ்ஜியுடன் நீங்களும் அனுபவித்திட உங்களுக்காக இங்கே ப்ரட் பஜ்ஜி செய்முறையைக் கொடுத்துள்ளோம்.

மற்ற பஜ்ஜிகள் போல்தான் இதனையும் செய்ய வேண்டும் என்றாலும், ப்ரட் பஜ்ஜி அதிகம் காரம் இல்லாமல் சற்றே இனிக்கின்றார்போல் இருக்கவேண்டும். அதோடு மட்டுமன்றி மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்து பாருங்கள்.

 

பிரட் ஸ்லைஸஸ் - 6
கடலை மாவு - ஒரு கப்
இட்லி மாவு - அரை கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - அரைத் தேக்கரண்டி


 

கடலை மாவு, இட்லி மாவு மற்றும் தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும்.
தேவையானப் பொருட்கள்
பிரட் துண்டங்களின் குறுக்கே இரண்டாக வெட்டி, முக்கோண வடிவில் துண்டங்களாக்கி வைக்கவும்.
ப்ரட் ஸ்லைசஸ்
ஒரு பாத்திரத்தில் கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
கடலை மாவு
அதில் இட்லி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, கேசரிப் பவுடர், பெருங்காயத் தூள் அனைத்தையும் போட்டுக் கிளறவும்.
இட்லி மாவு
அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கட்டிகள் விழாதவாறு கரைத்துக் கொள்ளவும்.
பஜ்ஜி மாவு
கரைத்த மாவு மிகவும் தண்ணீராகவும், மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் பதமாக இருக்க வேண்டும்.
பஜ்ஜி மாவு
வாணலியில் முக்கால் பாகம் எண்ணெய் விட்டு சூடாக்கவும். ப்ரட் துண்டங்கள் ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, கொதிக்கும் எண்ணெய்யில் போடவும்.
ப்ரட் தோய்த்தல்
இரண்டு புறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் போடவும்.
பஜ்ஜி பொரித்தல்
இதனை தக்காளி சாஸுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ப்ரட் பஜ்ஜி
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வித்யா அவர்கள் இந்த சிற்றுண்டியை செய்து காண்பித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர், விதவிதமாய் புதுவித உணவுகளைச் சமைப்பதில் வல்லவர். தமிழகச் சமையல் மட்டுமல்லாது ஆந்திர, வட இந்திய சமையல் முறைகளும் இவருக்கு அத்துப்படி.
திருமதி. வித்யா

காரம், உப்பு சற்று குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதிகம் விரும்புகின்றவர்கள் ஒரு அரைத் தேக்கரண்டி மிளகாய்த்தூள், உப்பு இரண்டையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிரட் பஜ்ஜி,
ரொம்ப‌ ரொம்ப‌ ஈஸி அன்ட் ரொம்ப‌ டேஸ்டி.
வித்யா அக்கா ரொம்ப‌ நல்லா இருக்குங்க‌.