விளையாடு மங்காத்தா கண் சிமிட்டினாலும் ஏமாந்தா !!! ???

எப்படி எல்லாம் ஏமாத்தராங்க இந்த உலகத்திலே.? ! அதுவும் கண் சிமிட்டினாலும் போச்சு. அறுசுவையில் இந்த டாபிக் இருக்கா இல்லியான்னு தெரியலை.ஆனா என்ன? புதுசு புதுசா ஏமாத்த முடியுதே.வாங்க .வந்து சொல்லுங்க

மங்காத்தான்னு ஏன் சொன்னேன்னா.சண்டே மங்காத்தா படம் பார்க்க போனோம். மகள் அழுததால் என் கணவர் வெளியே போனார். தனிஷ்கா பாப்கார்ன் கேட்டால் வாங்கியாச்சு.ஆயிரம் ரூபாயை என் 'தல' கடைகாரரிடம் கொடுத்துருக்கார். அவர் ஐநூறு நோட்டு ஒன்றும் 4 நூறு நோட்டுக்களும்,மீதி 10 ரூபாய் கொடுத்துருக்கிரார். பாப்பா அழுதாலும் பரவாயில்லை என்று என் கணவர் எண்ணி பார்த்தால் 10 ரூபாய் குறைகிறது.சொன்னதும் கடைகாரரும் 10 ரூபாய் கொடுத்தால் கதை முடிந்திருக்குமே.
ஆனால் அவரோ தாங்க சார் நானும் எண்ணி பார்க்கிறேன்னு வாங்கி எண்ணும் போதெ 2 100 ரூபாய் தாளை அவர் கல்லாவில் போட்டாச்சு.திருப்பி தந்ததும் என் கணவர் திருப்பியும் எண்ணி பார்த்தார்.சண்டை போட ரெடியானர்.ஒரு வழியாக கடைகாரர் மன்னிப்பு கேட்டு பணம் வந்தது. ஒரு தடவை மட்டும் எண்ணி பார்த்திருந்தால் நாங்கள் ஏமாந்திருப்போம்பா .பணமென்றால் ஒவ்வொரு முறையும் எண்ணி பாருங்கள்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

நான் ஏற்கனவே சொல்ல விரும்பினேன் பகுதியில் லக்கி ட்ரா பற்றி எழுதி இருந்தேன்... அதுவும் ஏமாத்து கதை தான் :)

அதுவும் சென்னையில் வாங்கும் முன் ஒரு விலை சொல்வாங்க... வாங்கிட்டு பணம் கொடுத்தா ஒரு விலை சொல்வாங்க... கேட்டா நீங்க ஒழுங்கா கவனிக்கல, நான் இந்த விலை தான் முதல்லயே சொன்னேன்னு சொல்வாங்க. கெட்டிக்காறங்க ஏமாற்று வேலையில். ;)

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு துணி வாங்கறோம்னு ரோட்டில் பெரிய வண்டி வரும்... கொடுத்தோம்னு வைங்க... அந்த துணியை அடுத்த சில நாட்களில் சோழிங்கநல்லூர் ஜன்க்‌ஷன்ல “செகண்ட்ஸ்” சேல்ல பார்க்கலாம்.... பாவம் எந்த புன்னியவான் இலவசமா கொடுத்ததோ... எதாவது ஒரு ஏழப்பட்டவன் காசு கொடுத்து வாங்குவான்... வேறு வழி... 1000 ரூபாய் ஜீன் 100 ரூபாய்க்கு அங்க மட்டும் தானே கிடைக்கும்.

லேசா தலை வலின்னு ஹாஸ்பிடல் போனா... 1 வாரம் அலய விட்டு இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்ன்னு எல்லாம் எடுத்துட்டு கடைசியா “வீக்னஸ்”னு சொல்லிடுவாங்க. இது அவங்களுக்கு முதல்லயே தெரியும்... கூடவே நமக்கு கம்பெனியில் பணம் கொடுப்பாங்கன்னும் தெரியும்... அந்த மேக்ஸிமம் லிமிட்க்குள்ள கரக்ட்டா எல்லா டெஸ்ட்டும் முடிஞ்சுடும். :D நாம டாக்டர் வேறு பிரெச்சனை ஏதும் இருக்க கூடாதேன்னு சேஃப்ட்டிக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்தார்ன்னு பெருமையா சொல்வோம்... டாக்டர் பற்றியும், ஹாஸ்பிடல் பற்றியும். இதே கையில் காசில்லாத பேஷண்ட் போனா சீரியஸ் விஷயத்துக்கு கூட ஒன்னுமில்லன்னு அனுப்பிடுவாங்க. அவங்களுக்கு வைத்தியம் பார்த்தா எந்த கம்பெனியும் காசு கொடுக்காதே அதான். சின்ன சாம்பிள் சொல்லவா... எனக்கு சிசேரியன் ஆனப்போ சிசேரியன் சார்ஜ் மட்டும் 16000. அதே ஹாஸ்பிடலில் என் தங்கைக்கு சிஸேரியன் ஆனப்போ 25000. ஏன்னா அவளுக்கு கம்பெனி கொடுக்குதாம், பில் வேறாம். இதே கதை தான் நாங்க தங்கின ரூம் சார்ஜ், டிஸ்சார்ஜ் ஆக ஆன நாட்கள் எல்லாமே. 3 நாள் எழுந்து உட்கார முடியாத என்னை 5வது நாள் டிஸ்சார்ஜ் பண்ணாங்க, ஒரு பிரெச்சனையும் இல்லாம முதல் நாளே எழுந்து உட்கார்ந்த அவளை 8வது நாள் டிஸ்சார்ஜ் பண்ணாங்க.

ஏமாற்ற புது வழி... புது ட்ரெண்ட். சென்னை மட்டுமில்ல... இப்போ எல்லா ஊருமே முன்னேரிடுச்சு!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதான் நானும் பார்த்தேன் பதிவுக்கும் தலைப்புக்கும் பொருந்த வில்லையேன்டு
மங்காத்தா கதை இப்போவுல தெரியுது

ஜெயா இப்போ உள்ள காலகட்டத்தி எதுலையும் விழிப்புனர்வோட இருக்க வேண்டி இருக்கு

இப்படித்தான் இங்கே சவிக்கட் மார்க்கட்டு சரியான கூட்டமா இருக்கும்
11 வருத்துக்கு முன்பு என் மகன் 11 மாதம் கலுத்தில் சங்கிலி போட்டு இருந்தான் அப்போ பெருநாள் நேரம்

என் மகனை தூக்கி கொண்டு ட்ராபிக்கை தான்டி போகயில என் மகன் என்னை நெஞ்சில் ட்ப்ட்ப்ன்டு போட்டு அடித்தான் ஏன் அடிக்கிரான் என்று திரும்பி பாக்கிரேன் என் மகன் கலித்தில் இருந்த சங்கிலியை கழுத்தோட இழுத்துட்டான் திருடன் [அடை பின்னாடி வந்தவுங்க பார்த்துட்டு கூட ஒண்னுமே சொல்லாம போய் கொண்டு இருக்காங்க ] நான் திரும்பவுமே எப்படி எங்கே ஓடுனான்டே தெரியலை

இதை போல் தான் போன வருடம் என் மூணாவது பயன் ஒண்ரை வயது
காதில் பல்லு குத்தும் குச்சியை வய்த்து காதை குத்தி கொண்டான் ஒரே அழுகை அன்று ஞாயிற்று கிழமை எப்போதும் காட்டும் தமிழ் டொக்ட்டர்ட்ட மோட்டாரில் 3 பிள்ளைகளேயும் எத்தி கொண்டு போய் கொண்டு இருந்தேன் அவசரத்தில் சின்னவனுக்கு சட்டை போடல கழுத்தில் சங்கிலி..............அந்த இடமே வெருச்சுன்டு இருக்கு டோக்டர் இல்லை என்று வண்டியே திருப்பி மோட்டரை மெதுவா ஓட்டி வந்து கொண்டு இருக்கேயிலயே ஒரு இந்தோனிசியா ஆல் என் மகன் கழித்தில் இருந்து சங்கிலியே இழுக்குரான் பின்னாடி இருக்கும் 2 பிள்ளேகலும் தோலோங் தோலோங்[உதவி உத்வி] என்று கத்துதுக சின்னவன் கழுத்து வழித்து கத்துரான் நான் ஓராங் சூரி [திருடன்] என்று கத்தி கொன்டே அவன் கைய்யே என் மகன்ட்ட இருந்து தல்லுரேன் அப்போ பாத்து 4 பசங்க அந்த பக்கம் வந்தாங் [இது எல்லாமை மோட்டரிலேயே நடக்குது]அதை பார்த்தவுடன் திருடன் ஓடிட்டான் இப்ப இது எழுதையிலயே படபடப்பா இருக்கு எனக்கு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் ஜெயா.... கண்டிப்பாக இன்றைய கால கட்டத்தில் ஏமாற்றுபவர்கள் எங்கும் நிறைந்திருக்காங்க. எப்ப ஏமாத்தலாம், எப்படி ஏமாத்தலாம், என்னைக்கு ஏமாத்தலாம் என்று சதா சர்வ காலமும் நினைத்து பிளான் போட்டு ஆட்டைய போடுறாங்க.

உங்கள் நல்ல நேரம் உங்கள் கணவர் விழிப்பாக இருந்ததால் முதல் முறை எண்ணிய போது 10 ரூபாயும், இரண்டாம் முறையில் 200 ரூபாயும் காப்பாற்றப்பட்டது.

வனிதா: எனக்கும் கிட்டத்தட்ட டெலிவரி டைமில் வெண்டுமென்றே சிசேரியன் செய்துவிட்டார். நான் ஆபரேஷன் தியேட்டரில் மயக்கத்தில் இருக்கும் போது ஒரு டாக்டர் எங்கள் டாக்டரிடம் நார்மலே பண்ணியிருக்கலாமே. சிசேரியனுக்கு சான்சே இல்லையே என்று கேட்டது தெள்ளத்தெளிவாக என் காதில் கேட்டுவிட்டது. எங்க டாக்டர் பதிலே கூறவில்லை. இருந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த ஹாஸ்பிடலில் வேலைபார்க்கும் நர்ஸ் என் அம்மாவிடம் படித்த மாணவிதான். எனக்கு 5 வருட சீனியர் செட். பின்பு ஒரு முறை வெளியில் சந்திக்க நேர்ந்த போது மனசு கேட்காமல் சொல்லிவிட்டார். மாதத்தில் இத்தனை சிசேரியன் கேஸ் இருக்கனும் அப்பத்தான் அவர் மகள் பேமென்ட் ஷீட்டில் மெடிக்கல் படிப்பதால் சமாளிக்க முடியும் என்று. எங்க அம்மாவிற்கு வெறுத்தே போய்விட்டது. இப்படித்தான் பலபேர் இருக்கிறார்கள்.

நான் பிரக்னன்டாக இருக்கும் போது ரொம்ப அனிமிக்காக இருந்தேன். எனவே தினமும் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டேன். ரொம்ப நாளாகியும் முன்னேற்றமே இல்லை. எங்க டாக்க்டருக்கு(இவர் வேற டாக்ட்டர்) ஒரே குழப்பம். பின்பு நான் சாப்பிட்ட மாத்திரையை கொண்டுவரச்சொன்னார். அதை காண்பித்தபோதுதான் தெரிய வந்தது 2 மாதமாக டூப்ளிகேட் மாத்திரையை சாப்பிட்டுகிட்டு இருந்தேன்னு. ரொம்ப ஷாக் ஆகிட்டோம். பின்பு மாத்திரைக்கு பயந்து டெலிவரி ஆகும் வரை 3 நாட்களுக்கு ஒருமுறை ஜெக்டோகாஸ் என்கின்ற ஊசி போட்டுக்கொண்டேன். கிட்டத்தட்ட ஊசி போடப்பட்ட இரண்டு பக்க டுப்பும் பஞ்சராகாத குறைதான். டெலிவரி முடிந்தும் ஆறேழு மாதங்கள் வரை ஊசிபோடும் இடத்தில் வலி இருந்தது. (பட்டிமன்றத்தில் மனிதாபிமானமற்ற போலி மருந்து தயாரிப்பும் அதன் விளைவுகள் பற்றி பேசலாம் என்று நினைத்தேன். அப்போது பேச வார்த்தை வரலை.) நிறைமாத கர்பினியாக இருந்த எனக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று எனது உறவுகளுக்கு ஏற்பட்ட பீதியை நினைத்தால் நமக்கும் மனது பதைபதைக்கின்றதுதான்.

பல்கிஸ்: மனிதாபிமானமற்ற திருடர்கள். குழந்தை மிகவும் துடித்துப்போயிருப்பான்ல........ அப்பா..... கண்டிப்பா மனதை பதறவைக்கும் சம்பவம்.
எனக்கும் பஸ்ஸிலும், தின்டுக்கல் பஸ்டேன்டிலும் திருட்டு அனுபவம் இருக்கு. ஆனால் உடனடியாக கத்தி கூப்பாடு போட்டதில் பயந்து போய் என்னோட பௌச்சை போட்டுட்டு ஓடிட்டாங்க. அது என்ன பவுச் என்றால் என்னோட பென், பென்சில் பவுச். ஆமாம்....... நான் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியிலிருந்து விடுமுறைக்காக ஊர் திரும்பும் போது வெவ்வேறு நாட்களில் நடந்தது. இந்த திருட்டு பசங்களுக்கு என் பென்சில் பவுச் மேல அப்படி என்னதான் கண்ணோ தெரியலை போங்க. எப்படியோ பணம் இருந்த பர்ஸ் தப்பிச்சது.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

1.நெல்லையில் திராட்சை பழம் விற்பவர்கள் எடை போட்டு கறுப்பு பிலாஸ்டிக் பையில் போட்டு தரேன்னு சொல்லி அவங்க பக்கம் வைத்து போடும்போது கொடுப்பது அழுகிய திராட்சையுள்ள பை. எந்த பையுனாலும் அங்கேயே செக் பண்ணினால் தப்பித்தோம்.
2.கீரை கட்டில் உள்ளே வேற வகை கீரை அல்லது வாடியது .வெளியே நல்லது.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

நன்றி வனிதா ,பல்கீஸ்,ப்ரியா..
வனிதா என்னை நினைவிருக்கிறதா? என் சீமந்தம் ஆல்பம் பார்த்திருக்கீங்க.

கோயிலில் சாமி கும்பிடும்போது குழந்தையின் வளையல்,செயின் திருட்டு போதல் .பொதுவாக வெளியே செல்லும்பொது தங்கம் தேவையா? போட்டோ எடுக்கும்போது மட்டும் மகளிற்க்கு போடுவேன்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

இரண்டு வாரத்துக்கு முன்ன நடந்த விசயம். காரை சர்வீஸ் விடுறதுக்காக தஞ்சாவூர் போயிருந்த நான், கிடைச்ச கேப்புல, அப்படியே நம்ம நண்பர், கவிஞர் ஷேக்கையும் பார்த்துட்டு வரலாம்னு அவர் இருக்கிற இடத்துக்கு போனேன். போன் பண்ணாம போனது என் தப்புதான். நண்பர் பெருநாளுக்காக ஊருக்கு போயிருந்தாரு. சரி வந்தது வந்தோம், அப்படியே பக்கத்துல இருக்கிற பழமுதிர்ச்சோலையில கொஞ்சம் பழங்கள் வாங்கிட்டு போவோம்னு உள்ளே நுழைஞ்சிட்டேன்.

வரிசையா பிடிச்சது எல்லாத்தையும் எடுத்து கூடையில போட்டுக்கிட்டே, வாழைப்பழம் அடுக்கி வச்சிருந்த செக்சனுக்கு வந்தேன். பிடிச்சது மலைப்பழம்தான். சரி வாங்கலாம்னு பார்த்தா, அது கொஞ்சம்தான் இருந்துச்சு. பக்கத்துல இருந்ததை பார்த்தா மலைப்பழம் மாதிரி தெரியலை. அங்க ஒருத்தர் கையில ஒரு சீப் மலைப்பழத்தை எடுத்து அந்த பக்கம் நகர்த்திக்கிட்டு இருந்தாரு. கடையில வேலை பார்க்கிறவரா இருக்கணும். அவர்கிட்டே 'ஏங்க அது எல்லாமே மலைப்பழமா?' ன்னு கேட்டேன். இல்லை சார்.., இது நாட்டு பச்சை நாடா பழம், அதுதான் மலைப்பழம்... னு சொல்லிக்கிட்டே ஒரு மலைப்பழத்தை எடுத்து என்கிட்டே கொடுத்து சாப்பிட்டுப் பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னாரு..

திராட்சை மாதிரி சின்ன பழங்கள்னா சாப்பிட்டு பார்த்து வாங்கலாம். இது என்ன வாழைப்பழத்தையே சாப்பிட்டு பார்த்து வாங்க சொல்றாரேன்னு ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு பழமே நாலு ரூபா, அஞ்சு ரூபா சொல்வாங்க.. நான் வேண்டாம்னு சொன்னாலும் விடாம என் கையில திணிச்சாரு. விட்டா உரிச்சு வாயிலேயே திணிச்சிருப்பாரு. சரி, சின்ன மலைப்பழம்தானேன்னு கொஞ்சம் சங்கோஜத்தோடயே வாங்கி உரிச்சு சாப்பிட்டுட்டேன். நான் சாப்பிடுறப்ப அவர் செஞ்ச ஒரு காரியம் இன்னும் ஆச்சரியமா இருந்துச்சு. அப்படியே சுவர் இருந்த பக்கம் திரும்பி, ரெண்டு மலைப்பழத்தை அவசரம் அவசரமா உரிச்சு சாப்பிட்டாரு. நல்ல ஆளு, முதலாளிக்கு தெரியாம எப்படி எல்லாம் சாப்பிடுறாரு பாருன்னு எனக்கு தோணுனுச்சு. பசியில இருந்திருப்பாரு.. சாப்பிட்டுட்டு போறாருனு நினைச்சேன். பழத்தோட தோலை எங்க போடலாம்னு இடம் தேடுறப்ப, இங்க கொடுங்க சார்ன்னு கையில வாங்கிகிட்டாரு. எனக்கு வேண்டிய பழங்களை எடுத்துட்டு நகர்ந்துட்டேன்.

பில்லு போடுறப்ப பார்த்தா, எனக்கு பழம் கொடுத்த ஆளு, கையில ஒரு சின்ன பையில காய்கறி வச்சுக்கிட்டு வெளியில போனாரு. எனக்கு கொஞ்சம் டவுட் ஆயிடுச்சு. பில்லு போடுற அந்த பொண்ணுக்கிட்டே கேட்டேன். 'ஏம்மா, வெளியில போறாரே அவர் இங்க வேலை பார்க்குறாரான்னு'.. 'யார் அந்த ப்ரவுன் கலர் சட்டையா.. இல்லையே'ன்னுச்சு.. கொஞ்சம் அதிர்ச்சியா, நல்லா தெரியுமான்னு கேட்டேன். அந்த பொண்ணு, என் முகத்தை நல்லா உத்து பார்த்து, ஏன் சார், வேலை பார்க்குற எங்களுக்கு தெரியாதா.. அவருக்கு இப்பத்தான் காய்கறிக்கு பில்லு போட்டு கொடுத்தேன். என்ன விசயம் சார் ன்னு கேட்டுச்சு..

நான் என்னத்த சொல்ல.. அந்த ஆளு சுவத்தை பார்த்து வாழைப்பழத்தை சாப்பிடுறப்பவே மைல்டா ஒரு டவுட் வந்துச்சு.. நான் மட்டும் ரொம்ப கூலா வீட்டுல சாப்பிடுற மாதிரி உரிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அப்புறம் அந்த பொண்ணுக்கிட்டே, மலைப்பழம் காயா, பழமான்னு தெரியலை.. ஒண்ணை கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன். அதுக்கும் பில்லு போட்டுடுமான்னேன். அது என்னை மறுபடியும் ஒரு டயம் உத்து பாத்துட்டு, பரவாயில்லை சார், ஒரு பழம்தானே ன்னுச்சு.. அப்படி சொல்லிட்டு விட்டு இருந்தா பரவாயில்ல. அடுத்த செகண்ட்டே, 'இருங்க.. கேட்டுக்கிறேன்'னு, பக்கத்து கவுண்டர்ல இருந்த ஒரு பெரிய அக்காகிட்டே, அவங்க ஒரு மலைப்பழம் சாப்பிட்டு பார்த்தாங்களாம், அதை பில்லுல ஏத்த சொல்றாங்க. என்ன பண்ண.. ன்னு கேட்க.. அந்த அம்மா, கம்ப்யூட்டரை பார்த்துக்கிட்டே ஏத்திக்கன்னு ஒத்த வார்த்தையில சல்லுன்னு பதில் சொன்னுச்சு. எனக்கு கடுப்பாயிடுச்சு. ஏம்மா, நானே பில்லுல சேர்த்துக்கோங்கன்னு சொல்றேன். அப்புறம் ஏன் அங்க எல்லாம் கேக்குறீங்கன்னு கொஞ்சம் கோபமா சொன்ன பிறகு அந்த பொண்ணு அதையும் பில்லுல சேர்க்க, பணத்தை கொடுத்துட்டு வெளியில வந்தேன். அந்த ஆளு வெளியில எங்கேயாவது கண்ணுல படுறானான்னு பார்த்தேன்.. காணலை..

அது எப்படி அண்ணா.... உங்க முகத்துல ஏதும் எழுதி ஒட்டியிருக்காங்களா!!!

அன்பு ஜெயா,

திருச்செந்தூரில் தமிழ்நாடு டூரிசம் டெவலப்மெண்ட் காட்டேஜில் தங்கினோம். அட்டெண்டர் தண்ணீர் பாட்டில் வாங்கி வரட்டுமான்னு கேட்டார். ரூபாய் கொடுத்தோம்.

நான் கதவுகிட்ட நின்னுட்டு இருந்தேன். அவர் நான் அங்கே இருந்ததைப் பார்க்கலை. ரிசப்ஷனில் இருந்த வாட்டர் ஃபில்டரில், ஒரு காலி பிஸ்லேரி பாட்டிலில் தண்ணீர் பிடிச்சுட்டு வந்தார். என் தம்பிகிட்ட கொடுத்தார். நான் என் தம்பிகிட்ட இதை சொன்னதும், அவரையே திரும்பக் கூப்பிட்டு, “பாட்டிலில் சீல் இல்ல, இது வேண்டாம்”, என்று சொல்லி, திருப்பிக் கொடுத்துட்டார்.

அந்த ஆள் கண்டுக்கவேயில்ல, ரூபாயைத் திருப்பிக் கொடுத்துட்டு, பாட்டிலை வாங்கிட்டுப் போயிட்டார், அவ்வளவுதான்.

வனிதா சொன்ன லக்கி ட்ரா அனுபவம் எங்களுக்கும் கிடைச்சுது. மகனும் மருமகளும் போய்ட்டு வந்து, ஒரு க்ளாஸ் வேர் பாக் வாங்கிட்டு வந்தாங்க. திரும்பத் திரும்ப ஃபோன் பண்ணிட்டே இருந்தாங்க, ரிசார்ட்டுக்கு பணம் கட்ட சொல்லி. நாங்க வேணாம்னு சொல்லிட்டோம். அதுக்கப்புறம் அது மாதிரி அடிக்கடி ஃபோன் வந்தாலும், சாரின்னு சொல்லி, கட் பண்ணிடறோம்.

அது சரி, மங்காத்தா படம் எப்படி இருந்துச்சு? தல ஏமாத்தல, படம் சூப்பர்னு சொன்னாங்களே, அப்படியா?

அன்புடன்

சீதாலஷ்மி

//வனிதா என்னை நினைவிருக்கிறதா? என் சீமந்தம் ஆல்பம் பார்த்திருக்கீங்க// - எப்போ?? எங்க?? நினைவில்லையே ;( கோவிக்காதீங்க... சொல்லுங்க ப்ளீஸ்.

பாபு அண்ணா... உங்க அனுபவம் படிச்சதும் என்னால சிரிக்காம இருக்க முடியல... பாவம் இவ்வளவு நல்லவரா நீங்க??? விடுங்க... இட்ஸ் ஆல் இன் தி கேம் ;) ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்