கத்திரி மாங்காய் தொக்கு

தேதி: September 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கத்திரிக்காய் - 300 கிராம்
மாங்காய் - ஒன்று (சிறியது)
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
மல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

கத்திரிக்காய், வெங்காயம் இரண்டையும் நீளமாக நறுக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். மாங்காயை தோல் நீக்கி துருவி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். (வெங்காயம் சிவக்க கூடாது).
அதனுடன் கத்திரிக்காய் மற்றும் உப்பு போட்டு சிறு தீயில் நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
கத்திரிக்காய் வெந்ததும் துருவிய மாங்காவை சேர்த்து கிளறி விட்டு மாங்காய் வெந்ததும் இறக்கி விடவும்.
மல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான கத்திரி மாங்காய் தொக்கு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கத்திரிக்காய், மாங்காய் தனித்தனியா தொக்கு செய்து பார்த்து இருக்கேன். இது வித்தியாசமாதான் இருக்கு. எதுக்கு நல்லா இருக்கும் இந்த தொக்கு.

சூப்பரான குறிப்பு..
வாழ்த்துக்கள். :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா அம்மா,
புதுமையான குறிப்பா இருக்கு.காய்கள்,வெங்காயம் எல்லாம் அழகா கட் பண்ணி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

வித்தியாசமான கலக்கல் குறிப்பு. எனக்கு ரெண்டுமே ரொம்ப பிடிக்கும். இரண்டும் ஒரே பதார்த்தத்தில்.....அருமை. அருமையான குறிப்புக்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாத்திமா அம்மா,

ரொம்ப அருமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல குறிப்பு பாத்திமா வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு ஃபாத்திமா,

கத்தரிக்காய் மாங்காய் சேர்த்து செய்திருப்பது புதுமையாகவும் நன்றாகவும் இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வனி வருகைக்கு நன்றி

வினோ எல்லாத்துக்குமே நல்லா இருக்கும் வருகைக்கு நன்றி

ரம்யா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஹர்ஷா வருகைக்கும் வாழ்த்துக்கும் ந்ன்றி

லாவண்யா மிக்க நன்றி

கவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

குமாரி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சீதா வருகைக்கு நன்றி