சோயா உருண்டை

தேதி: September 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

சோயா உருண்டை - ஒரு கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5


 

சோயா உருண்டைகளை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் தூள் செய்து வைக்கவும். அரைக்க தந்துள்ள பொருட்களை மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
இந்த இரண்டு கலவைகளையும் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும்.
மாவு கலவைகளை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும். அந்த உருண்டைகளை பொட்டுக்கடலை மாவுடன் ஒரு உருட்டு உருட்டி, சூடான எண்ணெயில் போடவும்.
அடுப்பின் தணலை சிம்மில் வைத்து பொரித்து எடுக்கவும். சுவையான சோயா உருண்டை தயார். இது சாப்பிடுவதற்கு கைமா உருண்டை டேஸ்ட் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சூப்பரா ஈஸியா இருக்குது.சோயா என்றவுடன் நீங்க தான் என்று நினைத்தேன்.வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள் சுகந்தி.

Expectation lead to Disappointment

அன்பு சுகந்தி,

அருமையாக செய்திருக்கீங்க. பாராட்டுக்கள்.

சோயாவை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஹெல்தியான ரெசிபி.

அன்புடன்

சீதாலஷ்மி

சுகி நல்லா செய்து இருக்கீங்க. வாழ்த்துக்கள். ப்ரெட் பொரிச்சு வெஜிடபிள் பிரியாணில சேர்ப்பதற்கு பதிலா இந்த சோயா உருண்டையை சேர்த்து செய்யலாம் நல்லா இருக்கும்.

சூப்பரான குறிப்பு..
அவசியம் செய்து பார்த்து சொல்றேன்.. மாலை நேர ஸ்நாக்ஸ் :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சோயா உருண்டை சூப்பர். செய்து பார்ர்க்கிறேன். :)

Arumaiyana kurippu., valthukkal.,

ஹாய் சுகி சூப்பர் குறிப்பு கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுகி,
வித்தியாசமான குறிப்பு.அழகா செய்து இருக்கீங்க.கண்டிப்பா ட்ரை பண்றேன்.வாழ்த்துக்கள்.

சோயா உருண்டை சூப்பர். செய்து பார்ர்க்கிறேன். வாழ்த்துகள் பா-)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி...

மீனாள் - முதல் ஆளாய் வந்து பதிவு போட்டதுக்கு நன்றி,
//சோயா என்றவுடன் நீங்க தான் என்று நினைத்தேன்.//// - அந்த அளவுக்கு வந்துட்டேனா? சந்தோசம்

சீதாம்மா - வாழ்த்துக்கு நன்றி, நீங்க தான் எல்லா ரெசிபிக்கு கீழயும் அதன் பயன்களை சொல்லி அசத்தறீங்க :-)

வினோ - வாழ்த்துக்கு நன்றி, உன் ஐடியா கூட நல்லா இருக்கே, அடுத்த முறை பண்ணிடலாம்

ரம்யா - நல்லா ஸ்நாக்ஸ் தான், பண்ணி பாத்துட்டு சொல்லுங்க

தேன்மொழி - அவசியம் பண்ணி பாருங்க, பதிவுக்கு நன்றி

ஷோபனா - உங்க வாழ்த்துக்கு நன்றி...

குமாரி - மிக்க நன்றி,

ஹர்ஷா - வாழ்த்துக்கு நன்றி, கொஞ்சநாளா ஆளையே காணோம்?

யோகப்ரியா - கண்டிப்பா செஞ்சு பாருங்க, நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

paarkave romba alaga irukkuthu. udane seithuduren.

god is love

சுகந்தி,
சூப்பர் ஸ்நாக்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

hi na today soya urundai seithaen ana enaku sariya varavillai mavu patham matumm epudi irukanum solunka pls..

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.