வேதனையான சம்பவம்

வேதனையான சம்பவம், என் அண்ணா இறந்து விட்டார்.அவருக்கு வயது 32, இரண்டு பெண் குழந்தைகள். தவறி மாடியில் இருந்து விழுந்துவிட்டார்.இறந்த நாள் 09.09.11. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

ஜீவி, நடந்த சம்பவம் மிகவும் துயரமான ஒன்றே. உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வருந்தும் அவருடைய மனைவி, குழந்தைகளுக்கு கடவுள் போதிய மன தைரியத்தை தரவும் இறைவனை பிரார்திக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சாரி ஜீவிமா, உங்கள் அண்ணா இற்ந்தது மிகவும் வேதனையா இருக்கு... மனசு ரொம்ப சங்கடமா இருக்குபா... சாரிமா, கண்டிப்பா குடும்பத்துக்கு தேவையான ஆறுதலும் தேறுதலும் இறைவனால கிடைக்கும் நான் கண்டிப்பா என் ப்ரேயர் சேர்த்துக்குறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கல்பு, அவர் ரொம்ப நல்லவர் பா. அவர் இறந்தது என்னால் தாங்க முடியவில்லை பா. ஏம்பா கடவுள் இப்படி சின்ன பூக்களை எல்லாம் தன்னுடன் சேர்த்து கொண்டு நம்மை இப்படி கலங்க வைக்கீறார்.

மனசு கஷ்டமா இருக்கு ஜீவிமா.. உங்க அண்ணாவின் ஆன்மா சாந்தி அடையவும் இனி எந்த துன்பமும் அந்த குடும்பத்த நெருங்காதிருக்கவும் நா பிராத்தனை பண்ணுகிறேன்... எனது தெரியும் ஜீவிமா அப்பா இல்லனா எவ்ளோ கஷ்டம்னு.. நா 11 வருஷமா அனுபவிக்கிறேன்..

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

ஜீவி, உங்க அண்ணா ரொம்ப நல்லவரா இருக்கறதால தான் கடவுள் தன்னோடயே இருக்கட்டும்னு அழைச்சுட்டார் போல. எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. முக்கியமா உங்க அண்ணாவோட குடும்பத்தார்க்கு ஆறுதலே சொல்ல முடியாது. மனம் விட்டு அழுதா தான் துயரத்தின் பாரம் கொஞ்சமாச்சும் குறையும். உங்க அண்ணா தெய்வமா இருந்து அந்த குடும்பத்தை வழி நடத்துவார்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

புன்னகை நாங்களும் அப்படி தான். அக்கா கல்யாணத்திற்கு முன்பே அப்பா இறந்து விட்டார்.அவர் இறந்து 13 வருடம் ஆகி விட்டது.நாங்க தான் வேதனைய அனுபவிக்கறோம் பார்த்த என் அண்ணா குழந்தைகளுக்கும் அதே நிலை.

ரொம்ப வருத்தமா இருக்கு பா....
32 வயதிலேயே அவர் ஆயுள் முடிந்து விட்டதே....
உங்கள் அண்ணியும் இரண்டு பெண் குழந்தையின் நிலையை நினைத்தால் வேதனையாக உள்ளது..... நீங்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.....
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.....

கல்பு அழுது அழுது கண்களில் இருக்கும் கண்ணீரே காணாமல் போய் விட்டது,அண்ணியின் முகத்தை பார்க்க முடியவில்லை. குழந்தைகள் அப்பா எங்க மல்லிகா அத்தை அப்பா ஏன் துங்குறாரு எழுப்புங்க அப்ப்டி இப்படி கேக்குற கேள்விக்கு பதில் சொல்லமுடியல

தீப்பு அவருக்கு ஏன் இந்த் தண்டனை. கடவுள் ஏன் இப்ப்டி நல்லவங்களை எல்லாம் தன்னுடன் சேர்த்து கொண்டு நம்மை இப்ப்டி சோதிக்கிறார்.

really sry.... may his soul rest in peace...

மேலும் சில பதிவுகள்