தலைவலி,கண்வலி .

எனக்கு 5 வருடமாக கண் வலி இருக்கிறது.Dr-கிட்ட காண்பித்தேன் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

கண்வலி வந்த பிறகு தலைவலி வருகிறது. தலைவலி மாத்திரை சாப்பிடால் தான் போகிறது.

வெயிலில் சுற்றிவிட்டு வந்தால் உடனே தலைவலி,கண்வலி வருகிறது.
ஒரு கண்ணில் வலி வந்தால் ஒற்றை தலைவலி வருகிறது.

என் வலியை போக்க உதவுகள் தோழிகள் ple.

அன்புடன்
உங்கள் தோழி

சாந்தாகுணா.

abudhabiயில் எங்க இருக்கீங்க.இல்ல சும்மா தான் கேட்டேன்.ஏன்னா 5 வருஷமா இருக்குனா எதுக்கும் இன்னொரு முறை ஸ்பெஸ்ஷலிஸ்டா பார்த்து காண்பிங்கக்கா.ஏன்னா எனக்கும் தலைவலியோட சேர்த்து கண்வலியும் இருந்துச்சு.கன் செக் பண்ணி கண்ணாடி எழுதி குடுத்தாங்க. நீங்க கண்ணாடி எதும் போட்டிருக்கீங்கலா. பிரச்சனை எதும் இல்ல சாதாரண வலி என்றால் என்னனு எனக்கு தெரியலக்கா.கொஞ்சம் வெயிட் பன்னுங்க .தோழிகள் யாரவது வந்து பதில் சொல்லுவாங்க. அபுதாபியில் இருக்கீங்கனு தெரிஞ்சவுடன் சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு வந்தேன். தப்பா இருந்தா சாரிக்கா.

வணக்கம் Nazeem தோழி.
நான் Ruwais இருக்கேன் . நான் தழில்நாட்ல perambalur dt.
neengka enna ur.

Anbudan

shanthaguna.

வணக்கம்பா நான் ஹம்தான் ல இருக்கேன். .தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம்.

ஹாய் ஷாந்தகுணா.... எனக்கு தலைவலி வரும் போது நான் செய்யும் வைத்தியம் இது...
சுடுதண்ணீர் கொதிக்கும் நிலையில் அதில் வேப்ப இலையை போட்டு பாத்திரத்தை மூடி விட வேண்டும் ஒரு 5 நிமிடத்தில் மூடி திறந்தால் இலையின் நிறம் மாறி இருக்கும்... அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆவி பிடிக்க வேண்டும்.... ஆவி பிடிக்கும் போது கண்களை மூடாமல் இருக்க வேண்டும்.... நெற்றி, காது மடல், தொண்டை இவற்றில் எல்லாம் ஆவி படுமாறு பிடியுங்கள்....
தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.....
வெயிலில் செல்லும் போது மறக்காமல் கண்களுக்கு குளிர் கண்ணாடியும்,
கையில் குடையும் எடுத்து செல்லுங்கள்.........

அதிக வெயிலில் வெளியே செல்லாதீர்கள்

ஏற்கன்வே மன்றத்தில் இதை பற்றி நிறைய குறிப்புகள் சொல்லி இருக்கேன்

அத இங்கு தோழிகள் சொல்லி இருக்காங்க
பாருஙக்

ஒத்த தலைவலி வந்தால் வாமிட் வரமாதிரி இருக்கும் சினன்சத்தம் கூட எரிச்சலை தரும், சில பேருக்கு இறைச்சல் ,அதிக சுட்டெரிக்கும் வெயில் எல்லாம் ஒத்துக்காது

பல கவலையும் நினைத்து யோசித்து வெளியே சொல்லமுடியாம மண்டையிலேயே போட்டு வைப்பது இது போல் தலை வலி வரும்,

நீங்க தான் உங்க வாழ்க்கை முறைய மாற்றிக்கனும்.

1. முதல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுஙக்.

2. வெண்ணீர் கொதிக்க விட்டு சுக்கு தூள் சேர்த்து ஆவி பிடிங்க

3. இல்லை இரண்டு துண்டு இஞ்சியை தட்டி அதை அப்படியே இரண்டு புருவத்துக்கு மேல் பத்து போடுங்க.

4. இஞ்சி சாறு கொஞ்சம் உப்பு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம் பித்தம் வந்திக்கு கேட்கும்

5. மைக்ரேன் டேப்லட் கிடைக்கும் அதை வாங்கி ஒருவேளை போட்டால் சரியாகும்.
6.வெளியில் சென்றால் கண்டிப்பாக கொடையோடு போங்க, கூலிங் கிலாஸாஉம் போட்டுக்கங்க,. ஓரளவுக்கு தவிர்கலாம்

முடிந்த வரை வெயிலில் போகாதீங்க

சின்ன சின்ன விஷியத்துக்கெல்லாம் டென்சன் ஆன கண்டிப்பா இந்த தலைவலி கண் வலிய சரி பண்ன வே முடியாது.
கண் வலிக்குது என்றால் ஐஸ் வாட்டர் ஒத்தடம் கொடுங்க
அதிக நேரம் கம்பியுட்ட்டரில் உட்காராதீங்க..

Jaleelakamal

தலைக்கு குளிச்ச்சா ஈரமில்லாம நல்ல துடையுங்க

ரொம்ப குளுமையான் புளிப்பு ஐட்டங்கள் சாப்பிடாதீங்க

வாரம் ஒரு முறை இஞ்சி சாறு தலை தேய்த்து குளிக்கலாம்

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்