குழந்தைகள் சாப்பிட மறுக்க காரணம்................

ஹாய்.ரொம்ப நாளா ஆரம்பிக்கனும் நினைத்த இழை.இப்பொ ஆரம்பிக்கிறேன். எங்கே பார்த்தாலும் என் குழந்தைகள் சாப்பிட மாட்டேங்கிறாங்க என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்னை பொறுத்த வரைக்கும் இது தான்.நாம் எல்லாம் என்ன செய்தோம். சின்ன பிள்ளையாக இருக்கும் போது எப்பொழுதுமே விளையாடுவோம். வெளியில் தான் இருப்போம். அதற்கு அப்புறம் அம்மா சாப்பிடக் கூப்பிடுவாங்க .நாமா வந்து சாப்பிடுவோம். அதுவும் நாமலே சாப்பிடுவோம். அது மட்டும் இல்லாமல் எல்லாம் சின்ன குழந்தைகளும் சேர்ந்து உட்கார்ந்து பாட்டி உருண்டைப் பிடித்து கொடுப்பாங்க நாமா சாப்பிடுவோம்.அதுவும் எனக்கு முதலா அப்படினு சண்டைப் போடுவோம். இப்ப அது எல்லாம் கிடையது. நாமா குழந்தைகளை வெளியில் விடுவதுக் கிடையது. அதனால் தான் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறாங்க. அது மட்டும் இல்லாமல் அந்த காலத்தில் பாட்டி நிறையக் கதைகள் சொல்லுவாங்க.பிள்ளைங்களும் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவார்கள்.பிரச்சனை இருக்காது. இப்ப எல்லாம் டி.வி தான் பார்க்கிறாங்க. அப்புறம் எப்படி குழந்தைகள் விளையாடுவாங்க.

உண்மைதான் நித்யா
எங்க வீட்டுலையும் தினமும் இததான் பேசுரோம்
ஏன் பிள்ளைகள் சாப்பிட மறுக்குராங்க என்று
நீங்க சொல்ற படி பர்த்தா இருக்கலாம் யோசனை பண்ணி பாத்தா சரியாத்தான் படுது
என் மகன் 3வயது அவனுக்கு சாப்பாடு கொண்டு வாறத பாத்தாலே எங்கே ஒழிவான்டே தெரியாது

பெரிய பிள்ளைகளும் அப்படித்தான் எந்த த்ட்டில் சாப்பாடு கம்மியா இருக்கு
பாத்துதான் எடுத்து சாப்புடுதுக
பால் ஊத்தி வச்சா அள்வு வச்சு பாத்து கொஞ்சமா உள்ளத எடுக்குதுக இதி சன்டை வேர என்க்கு மட்டும் நிரையாவா என்று

கிஸ்மிஸ் பாதால் குடுத்தா இரண்டை சாப்பிட்டுட்டு இரண்டை பக்கத்து வீட்டில் வீசி விடுராங்க்க வேர என்ன சொல்ரது சொல்லுங்க நித்யா

இதுக்கு வழிதான் என்ன

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

என் குழந்தைகளும் சாப்பிட மறுக்கிறாங்க. அப்பதான் என் கணவர் இத சொன்னாங்க. அதற்கு அப்புறம் தான் நான் யோசனைப் பண்ணினேன்.அப்புறம் என் பையனை விளையாட விட்டேன்.இப்ப அவனா சாப்பிடுறான்.அனால் அதுவும் உண்மைதான். எங்கள் வீட்டில் கூட்டுக்குடும்பம் தான்நாங்களும் நல்ல விளையாடுவோம்.மொத்தம் 8குழந்தைகள் இருந்தோம்.அதனால் எப்பவும் விளையாட்டுதான்.ஜாலியா இருக்கும்.ஏதவாது பிரச்சனைஎன்றால் விட்டுக் கொடுத்து விளையாடுவோம்.அதனால் தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்காள் வரும்.சரிப்ப .என்னால் அவ்ளொதான் உட்கார முடியும். நீங்கள் எல்லாம் பதிவுப் போடுங்க. அதற்கு அப்புறம் பார்க்கலாம்.கெஸ்ட் வாராங்க.

இன்று வேளையை இன்றை முடிப்பது

பல்கிஸ் நான் அப்புறம் வந்து பதிவு போடுறேன். அதற்கும் ஒரு பதில் இருக்கு

இன்று வேளையை இன்றை முடிப்பது

ஆமாம் பல்கீஸ்...நீங்க சொல்வது ரொம்ப சரி...இந்தக்கால குழந்தைகள் சாப்பிடுவது ரொம்ப மோசம்ப்பா...என் பேரன், பேத்திகளும் இப்படித்தான் இருக்காங்க...என் பிள்ளைகளை வளர்க்கும்போது இவ்வளவு சாப்பிட சிரமப் பட்டதில்லை...அந்தக்காலத்தில் டிவி இல்லை...கம்ப்யூட்டர் இல்லை...நிறைய விளையாட்டு...மாலை வந்ததால் எல்லா குழந்தைகளும் வாசலில் விளையாடப் போய் விடுவார்கள்...இப்போ அதெல்லாம் இல்லை காலம் மாறிப் போச்சு...

இந்த விஷயம் எனக்கு ரொம்பவும் வருத்தம்..எங்கள் வீட்டிலும் இதே கதை தான் என் மகள் சாப்பிடுவாள் தான் ஆனால் புதியதாக எதுவும் தலைகீழாக நின்னாலும் ட்ரை பண்ண மாட்டாள்...அதே சாம்பார் சாதம்,ரசம் அப்பளம் என தான் சாப்பிடுவாள்..காய்கறி பழங்கள் அல்லது மற்ற புதிய உணவுகள் எல்லாம் நாங்கள் இருவர் மட்டும் தான்.சின்னவரும் ஏறக்குறைய அதே நிலை தான்..
எனது சிறுவயதினை யோசித்து பார்த்தேன்..அன்று இப்படியெல்லாம் கொஞ்சிகொண்டிருக்க ஆளில்லை பணமுமில்லை...ஒரு பெரிய கூட்டுக் குடும்பம்..பிள்ளைகள் மொட்டைமாடியில் விளையாடி விளையாடி பசித்து குடலெல்லாம் கரியும்போது தான் சாப்பிட வாங்க என்று அழைப்பு வரும்..முந்திக் கொண்டு ஓடி போய் உக்காருவோம்..எதுன்னாலும் அளவாத் தான்..சாதம் குழம்பை மட்டும் தான் கேக்க கேக்க தருவாங்க மீன் கறி எல்லாம் அளவு தான்..ஏன்ன்னா வீட்டில் சாதாரணமாக 20 பேர் இருப்போம்.பெரிய பெரிய ஆம்பிளைகள் நிறைய இருக்கும் வீடு..எது சாப்பிடவும் ஒரு இன்டெரெஸ்ட் இருந்தது..அமைதியாக சாப்பிட்டு எழுந்து போய்விடுவோம்...மாலை விளையாடையில் அழைப்பு வரும் போய் பார்த்தால் சர்க்கரை வள்ளி கிழங்கு,மரவள்ளி கிழங்கு,கடலை உருண்டை,1 பாத்திரத்தில் மிக்ஸ்சர் அல்லது ஸ்னேக்ஸ் இருக்கும்...அதிகமா கேக்க முடியாது போட்டதை சாப்பிட்டு எழுந்து போய் விடுவோம்.குடிக்க காம்ப்லேன் பூஸ்ட் எல்லாம் இல்லை தண்ணி போல ஒரு டீ தான்..இப்ப பூஸ்டை காம்ப்லேனை திணிக்க படும் பாடு என்ன?..இப்படி வளர்ந்ததால் அதற்கான வித்தியாசம் எங்களிடத்தில் நிறைய இருந்தது..நான் எதையுமே வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.எதையுமே விரும்பி சாப்பிடுவேன்..ஆனாஅல் எனக்கு எதிர்மறையாக வந்தார்கள் என் கணவரும் குழந்தைகளும்...இதில் அது அதில் இது என்று எதாவது காரணம் சொல்லி இன்னதை தான் சபபிடுவேன் என்று எழுதிவைத்து விட்டார்கள்..என் கணவரும் ரொம்ப வசதியாக வளர்ந்தவர் தான்...எனக்கெல்லாம் மாலையில் எப்படா டீ டைம் என்று இருப்பேன் ஒரு பாக்கெட் பிஸ்கட் அல்லது எதாவது ஸ்னாக்ஸ் கிடைக்க..வீட்டில் புது வாசனை வந்தால் என்னம்மா சமைக்கிறீஇங்க என்று ஆசையாக கேட்பேன்..
இன்று என் பிள்ளைகளுக்கும் சரி கணவருக்கும் சரி இனி பிரியாணியே ஆகட்டும் ஊஹூம் ஒரு ஈடுபாடே இல்லை..பக்கோடா பஜ்ஜி அது இது என என்ன செய்தாலும் அவங்களுக்கு வேண்டியது நக்கெட்ஸ்,சாக்கலேட் மட்டுமே..அதை தவிற உலகத்தில் எதை கண்டாலும் பிடிப்பதில்லை..நான் ரொம்ப ஆசைப்படுகிறேன் நான் வளர்ந்ததை போல எல்லாம் சாப்பிட்டு என் பிள்ளைகளும் வளர வேண்டுமே என்று..கடவுள் புன்னியத்தால் மூவருக்கும் நான் வெஜ்ஜில் பெரிசா விருப்பம் இல்லை..என் குடும்பத்தில் எல்லாம் நான் வெஜ் பைத்தியங்கள்..அந்த விஷயத்தில் தப்பிச்சேன்.
இன்றைய வசதி கூட ஒரு காரணமோ என்று நினைக்கிறேன்...இல்லை இல்லை என்னும்பொழுது தான் இன்னும் இன்னும் என்ற ஆரவம் எழுமோ என்று சந்தேகம்...இப்பவும் பாருங்க கூலி வேலை பாக்குறவங்க பிள்ளைக சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா என்று...ஒரு வயது தான் இருக்கும் குட்டி கைகளால் எவ்வளவு அழகாக சாப்பிடும்.எங்கள் வீட்டு வேலைக்கார பெண் சொல்வாண்க்க அவரது 1.5 வயது குழந்தை காலையில் காத்திருக்குமாம் வீட்டிலிருந்து கொடுத்துவிடும் காலை உணவை சாப்பிட...ஒரு நாளாவது கேட்டிருப்பாங்களா எனக்கு பசிக்குதுன்னு...
என் கணவரிடம் இந்த காரணத்தை நானா புலம்புவேன் அவர் மறுப்பார்..என் கணவரும் பிள்ளைக்ளும் ஸ்பெஷலா தான் சாப்பிடுவோம் என்றும் சொல்ல மாட்டாங்க சாம்பார்,பருப்பு,ரசம்,இட்லி தோசை இருந்தா போதும்..ஆனா எனக்கோ புதுசுபுதுசா சமைத்து சாப்பிட வைக்கனும் என்று ஆசை

நீங்க சொல்வது ரொம்ப சரி தளிகா...நாள் கிழமை சமயம் வீட்டில் வடை, பாயசம்,போளி,இனிப்புகள் என்று ஏகப்பட்ட வெரைட்டி பண்ணுவேன்...ஆனால் அதெல்லாமே நாங்கள்தான் சாப்பிடுவோம்...தவறிக்கூட என் பேரன், பேத்திகள் அதைத் தொட மாட்டார்கள்...மேகியையும், குர்குரேயையும்தான் சாப்பிட ஆசைப் படுவார்கள்...அதற்கு இந்தக்கால பெற்றோரும் காரணம் என்பது என் அபிப்ராயம்..குழந்தைகள் இஷ்டப்படி அவர்களை வளர்க்க வேண்டும் என்ற அவர்களின் கொள்கை எனக்கு சரியில்லை என்று தோன்றும்..சாப்பிடுவது ,உடை அணிவது, தூங்குவது என்று அத்தனையும் அவர்கள் இஷ்டப்படி செய்ய பெற்றோரின் வழிகாட்டுதல் தேவையே இல்லயே?இது என் அபிப்ராயம்..நீங்களெல்லாம் இந்தக் கால பெற்றோர்...தவறாக நினைக்க வேண்டாம்
சரி...நீங்கள் எஙு இருக்கிறீர்கள்?எத்தனை குழந்தைகள்?நான் இப்போதான் உங்களோடு பேசுகிறேன்..

ஹாய் பல்கிஸ். இப்பதான் எனக்கு ஒய்வுக் கிடைத்தது. நீங்க குழந்தைகளிடம் சொல்லி வளருங்க.ஏன்னா இது என் அனுபவம். ஒரு பொருளொட மதிப்ப பத்தி சொல்லுங்க. எங்க அம்மா சொல்லுவாங்க நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது குடிக்க தாய் பாலும் கிடையது. ஏதுவும் கிடையாது. வெறும் தண்ணீர்தான் என்று. அதற்கு அப்புறம் எங்க அப்பா நல்ல வந்துட்டாங்க.ஆனா நான் எதுவும் சரியாச் சாப்பிட மாட்டேன். நிறைய வாங்கி வருவாங்க. ஆனால் நான் தூக்கிப் போட்டு விடுவேன். பழம் ,ஸ்னாக்ஸ் எல்லாம் தான். ஏன் சாப்பாட்டேயே சாப்பிட மாட்டேன்.ஆனால் அதற்கு தண்டனைக் கிடைத்தது.ஒரு நாள் ஏதாவதுக் கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்தேன்.ரொம்ப கஷ்டப்பட்டேன். என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா. சரி விஷயத்துக்கு வருவோம். நீங்கள் சொல்லி வளருங்கள். இப்ப நாமாத் தூக்கி போட்டால் பின்னால் நமக்கு கிடைக்காது.ஏதேனும் கற்பனைப் பன்னி கதை சொல்லுங்க. தூக்கி போடுறத மெயினா வைச்சு.அல்லா நாம சாப்பாடு தூக்கிப் போட்டால் நமக்கு சாப்பாடு குடுக்க மட்டார் என்று சொல்லுங்கள். நாம் வளர்க்கிறதில் தான் பிள்ளைகள் உள்ளனர்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

ஹாய் ஆன்ட்டி நீங்க சொன்னது ரொம்ப உண்மை தான்.அவர்களுக்கு என்ன தெரியும் நம்ம தான் சொல்லனும்.அவர்களுக்கு மேகினால் என்ன ப்ராப்ளம் வரும் என்று தெரியாது. ஏன் kurekureவே சாப்பிடக்கூடாதுஆதனால் என்ன தீமை என்று சொல்லி வளருங்கள்..அவர்களுக்கு சாப்பிட எல்லாம் கொடுத்துநான் என் பையனிடம் இது தான் சொல்லுவேன். என்னவென்றால் நீ பெரிய பையன் ஆனவுடன் நிறைய இடத்திற்கு போவாய். அப்ப அங்க என்னக் கிடைக்கிறதோ அது தான் நீ சாப்பிடனும். இப்ப பழகிக் கொள் என்று. அது மட்டும் இல்லாமல் அவனுக்கு கதை சொல்லுவேன்.என்ன என்றால் உன்னோட வயிறு இப்ப பெருசா இருக்கும்.நீ சாப்பிடாமால் இருந்தால் அது சுருங்கி விடும் என்று என் கை அசைவில் சொல்லுவேன். பின் நீ பெரிய பையன் ஆனவுடன் நீ எந்த சாப்பாடு சாப்பிட்டாலும் உன்னோட வயிறு எடுத்துக்காது என்று சொல்லுவேன்

இன்று வேளையை இன்றை முடிப்பது

ஆமா நித்யா மனசுக்கு கஸ்டமாத்தான் இருக்கு நீங்க சொல்ரது போல் நானும் சொல்லத்தான் செய்ரேன்
அம்மாவுக்குன்டு நான் ஏதாவது செய்துக்கிரனா உங்களுக்குதானை எல்லாமே செய்றேன் வாங்குரேன் கஸ்ட்ட படுறேன் எனறுலாம் சொல்றேன்
ஆணா;;;;;;;;; பேசயிலையே டென்ஸன் ஆகிரது நித்யா

விட்டம்மின் மாத்திரையே நேத்து வீடு பெருக்கும் போது கண்டு பிடிச்சேன்
வாசிங் மிசினில் பாதாம் முந்திரி கிஸ்மிஸ் எல்லாம் இருக்கும் புத்தி சொல்லேல சரிமா சரிமா என்று தான் சொல்லுராங்க ஆனா கடை பிடிக்கிராங்கல்ல

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் பல்கிஸ்.கேட்ட தப்ப நினைக்க வேண்டாம்.நீங்க எங்க இருக்கீங்க தெரிஞ்சுக்கலாமா.ஏன் என்றால் என் பையனிடம் நான் காண்பிப்பேன். பழனியில் நிறையப் பேர் ரோட்டில் தான் இருப்பாங்க.அத தான் நான் கண்பிப்பேன். பாரு அவங்க படிக்கால அதனால் தான் இப்படி இருக்காங்க என்று சொல்லுவேன். அதுமட்டும் இல்லாமல் அவங்க சின்னப்பிள்ளையில் சாப்பாட்டாக் கீழேக் கொட்டி இருப்பாங்க அதனால் தான் சாப்பாடு கஷ்டப்படுறாங்க என்று சொல்லுவேன்.நீங்க உங்க பிள்ளைகளிடம் சொல்லுங்க அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் இஷ்டத்துக்கு நாமா போகக்கூடாது. அவர்களுக்கு தெரியாது.உங்கள் குழந்தையின் வயது என்ன?அவர்கள் பெயர் என்ன?

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்