காய்ந்த இறால்!!

காய்ந்த இறால் அதாவது Dried Parwns-ஐக் கொண்டு என்ன உணவுகள் செய்யலாம்?

Dear Chitra!
காய்ந்த இரால் பற்றி என்னுடைய குறிப்பில் கொடுத்துள்ளேன். அதை மாசிக் கருவாடுபோல் சம்பல் செய்வோம். நன்றாக இருக்கும்.இதற்கு ஆற்று இரால்தான் சிறந்தது.
நீங்கள்கூட ஏற்கனவே கேட்டிருந்தீர்கள், மற்ற கருவாடு வகைகளில் சம்பல் செய்யமுடியுமா என்று! ஆனால் அப்போது இரால் கருவாட்டைப்பற்றி எனக்கு ஞாபகம் வரவில்லை.Sorry!

அரைக்காய்ச்சலாக காய்ந்த இராலாக இருந்தால், (தோல் நீக்காமல்)அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு புரட்டி, சிறிது எண்ணெய்விட்டு வறுவல் பண்ணினால் அருமையாக இருக்கும். இதற்கும் ஆற்று இரால்தான் சிறந்தது.

chitra!நீங்கள் செட்டிநாட்டுக்காரங்கதானே, செட்டிநாட்டு காரக்குழம்பு பற்றி கொஞ்சம் குறிப்பு தரமுடியுமா?Please!

டியர் அஸ்மா,
இரண்டு நாட்களாக அலுவலக வேலைகளில் மிக பிஸியாக இருந்ததால் உங்கள் குறிப்பை பார்க்க முடியவில்லை.
மிக்க நன்றி. இந்த சம்பலை பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளில் வரும் காய்ந்த இறாலில் செய்யலாம் அல்லவா?
நான் கொடுத்துள்ள குறிப்புகள் நான் பிறரிடம் கற்று பல முறை செய்து பார்த்தவை. ஆனால் கெட்டிக் குழம்பு எனக்கும் கூட நன்றாக செய்யத் தெரியாது!!!!. மாமியாரிடம் கேட்டு வாங்கி தருகிறேன்

Vazhga Tamil!!!

அன்புள்ள அஸ்மா!

உங்களுக்காக காரக்குழம்பின் சமையல் குறிப்பை இத்துடன் எழுதியுள்ளேன்.

காராமணி காரக்குழம்பு

காராமணி- கால் கப்
சிறிய வெங்காயம்-15[சிதைக்கவும்]
பொடியாக அரிந்த தக்காளி- அரை கப்
கடுகு- அரை ஸ்பூன்
சீரகம்- அரை ஸ்பூன்
வெந்தயம்- அரை ஸ்பூன்
சிறிய பூண்டு பற்கள்-4
புளி- பெரிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித்தூள்- 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 4 டேபிள்ஸ்பூன்
சிறிய வெங்காயம்-3
சோம்பு- 2 ஸ்பூன்
முருங்கைக்காய்-1
நல்லெண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
போதுமான உப்பு

காராமணிப்பருப்பை இரவு போதுமான நீரில் ஊறவைத்து பிறகு காலையில் வேக வைத்துக்கொள்ளவும். புளியை 2 கப் நீரில் ஊற வைத்து கெட்டியான சாறு எடுத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை சிறு துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நல்லெண்ணெயை ஊற்றி கடுகைப் போடவும். அது வெடித்ததும் சீரகம், வெந்தயத்தைப் போட்டு அவை சிவந்ததும் சிறிய வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும். புளிச்சாறு, சிறிது நீர் சேர்த்து முருங்கைக்காய், உப்பு சேர்த்து வேக வைக்கவும். காய் வெந்ததும் தேங்காய், சிறிய வெங்காயம், சோம்பு இவற்றை நன்கு அரைத்து தூள்களுடன் சேர்க்கவும். காராமணியையும் சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

நன்றி திருமதி. மனோ அவர்களே!!!
நானும் செய்து பார்க்கிறேன்.

Vazhga Tamil!!!

அன்புள்ள சித்ரா!

உலர்ந்த இறால் கொண்டு தயாரிக்கப்படும்’ ரால் சம்பந்தி’ என்ற கேரள முஸ்லிம் வகை சமையல் குறிப்பை நான் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். இந்த காய்ந்த இறாலுடன் வதக்கிய தேங்காய்த்துருவல், வறுத்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து ‘ரால் பொடி’ தயாரிக்கலாம். இது இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சுவையான பொடியாகும்.

நன்றி திருமதி. மனோ!திருமதி. அஸ்மா கொடுத்த குறிப்பையும் நீங்கள் கொடுத்துள்ள குறிப்பையும் பின்பற்றி செய்து பார்க்கிறேன். மேலும் காய்ந்த இறாலைக் கொண்டு செய்யும் குறிப்புகள் இருந்தாலும் எழுதுங்கள்.

Vazhga Tamil!!!

மிக்க நன்றி சித்ரா!செய்துபார்க்கிறேன். செட்டிநாட்டு ஹோட்டல்களில் வைக்கும் காரக்குழம்பில் காராமணிப்பருப்பு சேர்ப்பதுபோல் தெரியவில்லையே? கொஞ்சமாக காய்கறி இருக்கும், நல்ல காரமாக இருக்கும். காரக்குழம்பு என்று சொல்லி தருவார்கள். நீங்கள் சொல்வது வேறு குழம்பா? அல்லது அதுதானா? கொஞ்சம் சொல்லமுடியுமா?PLEASE!

அன்பு அஸ்மா,
குறிப்பைக் கொடுத்திருப்பது திருமதி.மனோ அவர்கள்.... நன்றியை அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன். மேலும் அவர்கள் காராமனிக் காரக்குழம்பிற்கு செய்முறை தந்துள்ளார்கள். அதை குறிப்பிட்டும் உள்ளார்கள். நீங்கள் கெட்டிக் குழம்பையும் செய்து பாருங்கள். அதைத்தான் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி....

Vazhga Tamil!!!

Dear CHITHRA!
நான் உங்களிடம் காரகுழம்புபற்றி கேட்டிருந்ததால், நீங்கள்தான் தந்துள்ளீர்கள் என்று நினைத்து கவனிக்காமல் பதில் உங்களுக்கு தந்துவிட்டேன். சுட்டிக்காடியமைக்கு நன்றிகள்! காரக்குழம்பில் பலவகை இருப்பது எனக்கு தெரியாது. அதனால்தான் சந்தேகம் வந்தது.
Dear MANO!
உங்களின் பெயரை கவனிக்க தவறியதற்கு முதலில் SORRY கேட்டுக்கொள்கிறேன். காராமணிக் காரக்குழம்பின் செய்முறை தந்ததற்கு உங்களுக்கு எனது நன்றிகள்! நாளையே செய்துபார்க்கிறேன்.காராமணி இல்லாமல் வைக்கும் காரகுழம்புபற்றி உங்களுக்கு தெரிந்தால் குறிப்பு தரமுடியுமா?
PLEASE!

அன்புள்ள அஸ்மா!

நான் எழுதியிருந்தது ஒரு வகை காரக்குழம்பு. காராமணி இல்லாமலும் செய்யலாம். இன்னொரு வகை காரக்குழம்பு உங்களுக்காக இங்கு எழுதுகிறேன்.

செட்டிநாட்டுக் காரக்குழம்பு:

தேவையானவை;

• பொடியாக அறிந்த சிறிய வெங்காயம்- 1 கப்
• உரித்த சிறிய வகைப் பூண்டு- கால் கப்
• பொடியாக நறுக்கிய தக்காளி- முக்கால் கப்
• மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
• புளி - எலுமிச்சம்பழ அளவு
• கறிவேப்பிலை- ஒரு கை
• பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்
• கடுகு- அரை ஸ்பூன்
• சீரகம்- அரை ஸ்பூன்
• வெந்தயம்- அரை ஸ்பூன்
• சோம்பு- 1 ஸ்பூன்
• மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
• கொத்தமல்லித்தூள்- 2 ஸ்பூன்
• நல்லெண்ணெய்- 5 டேபிள்ஸ்பூன்
• தேவையான உப்பு

செய்முறை:

• புளியை நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
• வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.
• கடுகு சேர்த்து அது வெடித்ததும் சீரகம், வெந்தயம், சோம்பு சேர்த்து சிறிது சிவக்க வதக்கவும்.
• வெங்காயம் சேர்த்து சிறிது சிவக்கும் வரை வதக்கவும்.
• பிறகு பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைந்து மேலே எண்ணெய் தெளியும்வரை வதக்கவும்.
• கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
• பிறகு புளி நீர், தூள்கள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

மேலும் சில பதிவுகள்