யாழ், கிண்ணியா, நுவர எலிய ஜாலி ட்ரிப்

ஹாய் தோழிஸ் நோன்பு பெருநாள் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம், ஒரு ட்ரிப் போலாம்னு முடிவு செஞ்ச்சோம், எங்க ஹஸ்பண்ட அண்ணா குடும்பம், தங்கை அக்கா இன்னொரு அண்ணாட பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து 4ம்திகதி காலை 7மணிக்கு எமது பயணத்தை தொடர்ந்தோம்.முதலில் யாழ்ப்பாணம் செல்வதே எமது திட்டம், எமது ஊரிலிருந்து 10மணிநேரம் பயணம். அழகாய் குழந்தைகளின் ஆரவாரங்களுஅடன் எமது வண்டி சென்று கொண்டிருந்தது....4மணிநேரப் பயணத்தின் பின் திடீரென வண்டி இயங்க மறுத்தது...எங்கள் மனதில் திக்,, திக்க் ஏனென்றால் முன்பின் அறிமுகமில்லா ஊரில் எங்கே செல்வது .. பக்கத்தில ஒரு செட் இருந்தது(எமது நல்ல நேரம்)..எங்களை அங்கே இறக்கி விட்டு என் ஹஸ்பண்டும் அவரது அண்ணாவும் செட்டுக்கு வண்டிய எடுத்துட்டு போயிட்டாங்க ,,எங்களுக்கெல்லாம் மனசு சோர்ந்து போச்... கால் கடுக்க பசங்களஒயும் வச்சிட்டு பாதையோரத்தில நின்னுட்டு இருந்தோம், பசங்களால இருக்க முடியல்ல . கொஞ்ச நேரத்தில் அங்க வந்த ஒருவர் என்ன பிரச்சின என்று கேட்டுட்டு .பக்கத்தில இருந்த சில்ரன் பார்க்கைகாட்டி இது என்னோட நர்சரி இங்க வந்து இருங்கன்னு சொன்னார், ம்ம்ம் அப்பதான் கொஞ்சம் நிம்மதிப் பெரு மூச்சு வந்தது ,அப்புறம் என்ன பசங்க ஜாலியாகிட்டாங்க, அப்படியே ஒருமணிநேரம் கழிந்தது, வண்டிய ரிப்பேர் பண்ணிட்டு வந்தாங்க , எமக்கு உதவிய அந்த சகோதரருக்கு நன்றி கூறி எமது பயணத்தை தொடர்ந்தோம்,(எமக்கு உதவியது ஒரு மாற்றுமத சகோதரர்) நாம் யாழ்ப்பாணத்தை சென்றடையும் போது நேரம் நள்ளிரவடைத்தாண்டி விட்டது, ...அங்கே என்ன நடந்தது....{தொடரும்}

யாழ் ஜாலி ட்ரிப்பா.... கலக்குறீங்க பூங்காற்று..... உங்க புண்ணியத்தில் நானும் யாழ்பானம் பார்க்க போறேன்..... :))
ம்ம்.... கதைய தொடுருங்க படிக்க ரொம்ப ஆவலா இருக்கோம்....

இமாம்மா நீங்கள் சொல்லுவது போல கன்னியா வெந்நீரூற்று ராவணனால் தன் தாயாரின் இறுதி கிரியைகளுக்காக கட்டப்பட்டது என்றுதான் சொல்லுவார்கள் .....

ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு உங்க பயணக் கட்டுரை. நல்லா எழுதுறீங்க பூங்காற்று. தொடர்ந்து எழுதுங்க உங்க கூட நானும் நம்ம அறுசுவை தோழிகளும் ஒரு சுற்றுலா வரோம்.

அழகிய தென்றலே....உன் யாழ்ப்பாணப் பயணக் கதையும் அருமை...தொடரு...உன் கதையை நாங்களும் தொடர்கிறோம்...

எமது அடுத்தகட்டப் பயணம் கிண்ணியாவில் மார்பல் பீச் போவதாகும், பசங்க ரொம்ப ஆவலா குளிக்க ரெடியாகி வந்தாங்க? அலைகளில்லாத குறிப்பிட்ட தூரம்வரை ஆழமில்லாத அழகான கடல். தண்ணீர் பல பல வென்று ஜொலித்துக் கொண்டிருந்தது. இந்த அழகிற்காக மார்பல்பீச் என்று பெயர் பெற்றதோ தெரியவில்லை. பச்ங்க ரொம்ப ஹெப்பியா குளிச்சாங்க, கடலில் கால் நனைக்கும் எனது நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது. கடலில் சற்று தொலைவில் அழகாய் சிறியதோர் தீவு காட்சியளித்தது, பசங்கள எல்லாம் மிக சிரமப்பட்டு கரையேற்றினோம் அவங்களுக்கு வரவே விருப்பம் இல்லை, பின் பக்கத்தில் இருந்த பாத்ரூமில் குளிக்க வைத்து , அருகில் இருந்த ரெஸ்டூரன்யில் கூல்ட்ரின்க் குடித்து விட்டு திருகோணமலை நோக்கிப் பயணித்தோம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப்பார்வையிடச்சென்றோம் அங்கே” இராவணாவெட்டு” காணப்படுகிறது. இம்மலையை இராவணன் கோபம் கொண்டு வெட்டியதாகவும் அதனால் மலையில் பிளவு ஏற்பட்டதாகவும் அதனாலேயே இராவணன் வெட்டு அழைக்கப்படுவதாகவும் அங்கே குறிப்பிட பட்டிர்ந்தது அத்தோடு இராவணது தாயார் இக்கோயிலில் சிவலிங்க பூசை செய்வது வழக்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ந்தது.(இது பற்றி மேலதிக தகவல் தெரிந்தவர்கள் இங்கே பதிவிட்டால் நன்றாயிருக்கும்) அதன் பின் அங்கே யிருந்து திர்ம்பி வர்ம்போது (குளக்கோட்டந்தோப்பு”) என்ற சிறுவர் பூங்க ஒன்று இர்ந்தது பிள்ளைகளை அதற்குள் அழைத்துச் சென்றோம்/ (இந்த தோப்பு அமெரிக்க மக்களின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டதாக அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது) சூரியன் கடலில் குளிக்க ஆயத்தமாகும் மாலை நேரம் நெருங்கவே நாம் எமது இருப்பிடத்தை நோக்கிப் பயணித்தோம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மறுநாள் காலை எனது ஹஸ்பனின் அக்காவுக்கு தெரிந்த ஒரு ஆசிரியரின் வீட்டில் எங்களை காலைச்சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்கள், அவர்களுக்கு கிப்ட் வாங்கிக்கொண்டு அங்கே போனோம் ,அவர்களது வீட்டுச்சூழல் மிக அழகாக இருந்தது வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரத்தில் காய்கள் மண்ணைத்தொட்டுக்கொண்டிருந்தன. கத்தரிச்செடிகளை இப்போதுதான் .பயிரிட்டிருக்கிறார்கள்/ பனங்காய்களை மண்ணில் புதைது வைத்திருந்தார்கள் அப்படி செய்துதான் பனங்கிழங்கு பெறுவார்களாம். அவர்களது அன்பான உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு நாம் விடை பெற்றோம் , நுவர எலிய செல்வதே அடுத்த திட்டம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

காலையிலே எழுந்து பகல் சாப்பாட்டையும் தயார்செய்து பார்சல் கட்டி நுவர எலிய நோக்கிப் பயணமானோம். நுவர எலிய மத்திய மலைநாடு பாதையின் இருமருங்கிலும் அழகாய் தேயிலைச்செடிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைக்கம்பளம் விரித்தாற்போன்ற அழகிய மலைத்தொடர்,நெளிந்து வளைந்து செல்லும் வங்குப்பாதை மலை ஏற ஏற குளிர் கூடிக்கொண்டிருந்தது, கன்னம் தொட்ட குளிர்காற்றில் மேனி ஜில்லென்றது. எங்கும் பசுமை கண் கொள்ளாக் காட்சிஅது, ரசிக்கத்தக்கதோர் பிரதேசம், உடல் நடுங்கச்செய்யும் குளிருடன் எமக்காக ஏற்கனவே புக் பண்ணியிருந்த வீட்டை நோக்கி செல்லும் போது ந்ஃள்ளிரவு 12மணி தாண்டிவிட்டது, சாப்பிட்டுவிட்டு தூங்கப் போனோம். தூங்கி சிறிது நேரத்தில் என்னுடைய 3வயதுப் பையன் ; அம்மா என்னோட கையெல்லாம் ஐஸ்கட்டியாகிவிட்டது என்கிறான், அந்ந்தள்வு குளிர்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நுவரஎலியவில் அம்பேவல பாலுற்பத்தி நிலையத்தை பார்வையிடச் சென்றோம். அங்கே அழகிய பசுந்தரையும் ஜில்லென்ற காற்றும் ரம்மியமான சூழலும் மெய்மறக்கச்செய்கின்றது, அப்புறம் “நானு ஓயா” எனப்படும் அழகிய நீர்வீழ்ச்சி நோக்கி பயணித்தோம் அங்கே குளிப்பதே பசங்களின் ஆசை , பக்கத்தில் இருந்த ஒருவரிடம் இங்கே “அட்டை”இருக்குமா என்ரு விசாரித்துக்கொண்டோம் . சில நேரம் இருக்கலாம் எதற்கும் கவனமாக இருங்கள் . என்று கூறிச்சென்றார். நாமும் அவதானமாகவே சென்றோம் சிலர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்க சிலர் பக்கத்தில் சும்மா இருந்து கொண்டிருந்தோம், சிறிது நேரத்தில் எனது ஹஸ்பனின் தங்கை அட்டை அட்டை என்று கத்தவே ஓடிப்போய் பார்த்தோம் அவரது காலில் அட்டை ஓட்டிக் கொண்டிருந்தது. மிக கஷ்டப்பட்டு அதை அப்புறப்ப்டுத்தினோம். பின்பும் அவரது காலில் இருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது, குளித்தது போதும் என்று அந்த இடத்தி லிருந்து கிளம்பினோம். திரும்பி வரும் வழியில் “ஸ்டோர்பரி தோட்டம்” இருந்தது அதை பார்வையிடச்சென்றோம். அங்கேயும் ஓப் சீசன் எனவே ஒன்றிரண்டு ஸ்டோர்பரிகளிஅத்தான் காண முடிந்தது, அந்த செய்கை பற்றி அங்கிருந்த ஒரு ஊழியர் தெளிவாக விளக்கினார் அது எமக்கு பிரயோசனமாக அமைந்தது, “ஸ்டோர்பரி தோட்டம்”பார்க்க சென்ற போது வீசிய பனிக்காற்றில் நாம் நனைந்துவிட்டோம் பற்கள் அடித்துக் கொண்டன, நாம் சென்ற நேரம் நுவரஎலியவில் மழை எனவே இன்னும் அங்கே தங்குவதில் பிரயோசனமில்லை வெளியே செல்வது சிரமம் சின்னப் பசங்களுக்கு சளி பிடிதுவிட்டால் தொல்லையாகிவ்பிடும் என்று எமது பயணத்தை நிறைவு செய்து வீடு திரும்பினோம். இப்படி சொதப்பி விட்டதற்கு மன்னிக்கவும். நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது, கன்னியா நீரூற்றை பார்வையிட விரும்புபவர்கள் கூகுளில் கன்னியா வெந்நீரூற்று என டைப் பண்ணீ பார்க்க வும். நன்றி

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று.அருமை.இதைப்படிக்கும் பொழுது அதையெல்லாம் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது..

மேலும் சில பதிவுகள்