யாழ், கிண்ணியா, நுவர எலிய ஜாலி ட்ரிப்

ஹாய் தோழிஸ் நோன்பு பெருநாள் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம், ஒரு ட்ரிப் போலாம்னு முடிவு செஞ்ச்சோம், எங்க ஹஸ்பண்ட அண்ணா குடும்பம், தங்கை அக்கா இன்னொரு அண்ணாட பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து 4ம்திகதி காலை 7மணிக்கு எமது பயணத்தை தொடர்ந்தோம்.முதலில் யாழ்ப்பாணம் செல்வதே எமது திட்டம், எமது ஊரிலிருந்து 10மணிநேரம் பயணம். அழகாய் குழந்தைகளின் ஆரவாரங்களுஅடன் எமது வண்டி சென்று கொண்டிருந்தது....4மணிநேரப் பயணத்தின் பின் திடீரென வண்டி இயங்க மறுத்தது...எங்கள் மனதில் திக்,, திக்க் ஏனென்றால் முன்பின் அறிமுகமில்லா ஊரில் எங்கே செல்வது .. பக்கத்தில ஒரு செட் இருந்தது(எமது நல்ல நேரம்)..எங்களை அங்கே இறக்கி விட்டு என் ஹஸ்பண்டும் அவரது அண்ணாவும் செட்டுக்கு வண்டிய எடுத்துட்டு போயிட்டாங்க ,,எங்களுக்கெல்லாம் மனசு சோர்ந்து போச்... கால் கடுக்க பசங்களஒயும் வச்சிட்டு பாதையோரத்தில நின்னுட்டு இருந்தோம், பசங்களால இருக்க முடியல்ல . கொஞ்ச நேரத்தில் அங்க வந்த ஒருவர் என்ன பிரச்சின என்று கேட்டுட்டு .பக்கத்தில இருந்த சில்ரன் பார்க்கைகாட்டி இது என்னோட நர்சரி இங்க வந்து இருங்கன்னு சொன்னார், ம்ம்ம் அப்பதான் கொஞ்சம் நிம்மதிப் பெரு மூச்சு வந்தது ,அப்புறம் என்ன பசங்க ஜாலியாகிட்டாங்க, அப்படியே ஒருமணிநேரம் கழிந்தது, வண்டிய ரிப்பேர் பண்ணிட்டு வந்தாங்க , எமக்கு உதவிய அந்த சகோதரருக்கு நன்றி கூறி எமது பயணத்தை தொடர்ந்தோம்,(எமக்கு உதவியது ஒரு மாற்றுமத சகோதரர்) நாம் யாழ்ப்பாணத்தை சென்றடையும் போது நேரம் நள்ளிரவடைத்தாண்டி விட்டது, ...அங்கே என்ன நடந்தது....{தொடரும்}

பூங்காற்று அருமையான இடத்துக்கு எங்களையும் கூட்டி போயிருக்கீங்க கண்கொள்ளாகாட்சி என்ன இப்படி கொதிக்குது /( google search)/ அந்தக்காலத்தில் வேக வைக்கும் பொருட்களை மூட்டைகட்டி ஊற்றில் கயிறால் கட்டிவைத்து வேகவும் சாப்பிடுவாங்களாம்

//அந்தக்காலத்தில் வேக வைக்கும் பொருட்களை மூட்டைகட்டி ஊற்றில் கயிறால் கட்டிவைத்து வேகவும் சாப்பிடுவாங்களாம்// ;) அது கன்னியா பற்றிய கதை அல்ல.

நியூசிலாந்தில் முன்பு இப்படி சமைக்கும் பழக்கம் இருந்தது. Māori மக்கள் சமையல் முறை அது.

கன்னியாவில் ஓர் கிணற்றில் முன்னர் எப்பொழுதோ ஊரார் சொல்லவும் கேட்காமல் ஒரு ஐரோப்பிய வெளிநாட்டுப் பயணி முட்டையை அவிக்க முயன்றதாகவும் அதன் காரணமாக கிணற்றுநீரின் வெப்பநிலை குறைந்து போனதாகவும் ஆதாரமில்லாத ஒரு கதை சொல்வார்கள்.

எல்லாச் சுற்றுலாத்தலங்களையும் போல் கன்னியாவும் அதன் தனித்துவம் இழந்து கிடக்கிறது. கட்டிடங்கள் எழுகிறபோது இயற்கைச் சிறப்புக் குறைந்துவிடுகிறது.

‍- இமா க்றிஸ்

பயண கற்றுரையே இவ்வளவு சீக்கிரம் முடுச்சுட்டீங்க பர்ஹானா
நீங்க சொன்ன விதம் நல்லா இருந்தது
இங்கே மலேசியாவில் கோலாலம்பூரில் ஆயீர் பானாஸ்ஸில் [[ஆயீர் தண்ணீர்... பனாஸ் சூடு...சுடுதண்ணீர் ]]]
இப்படி ஒரு சுடுதண்ணீர் குளம் இருக்கு நான் இருக்கும் இடத்தில் இருந்து நடந்து போரதூரம் தான் ஆனா இரண்டு வாட்டிதான் அதில் குளுச்சு இருக்கேன் 1வெள்ளிதான் காசு
குளீயல் அரை நிறைய கட்டி வச்சுருக்காங்க அந்த ஊத்தில் ஆவி பரக்கும் ஆணா அள்ளி ஊத்தி குளிக்க குளிக்க சூடு தெரியாது நல்லாருக்கும் பிள்ளைகளே குளிக்க வய்ப்பதற்க்காக வெளியே சின்ன தொட்டில் இருக்கும்
அதில் குளிக்க வய்க்களாம் பெரியவங்க குளியல் அரையில்தான் குளிக்கனும்
அதுகிட்டேயே ஒரு பத்து அடுக்கு மாடி கட்டடம் இருக்கு ஆணா........ என்ன காறனம்ன்னு தெரியலை அவ்வளவா குட்டம் இருக்காது அந்த இடத்தை நல்லா டீசன்டாவும் கட்டியமைக்காம இருக்கு

யாரும் மலேசியா வந்தால் அங்கே வந்து குளிங்க
பூங்காற்றுவுடைய பயணத்தை படிக்கவும் இதை சொல்லலாம் என்று தோனுச்சு அதான் சொன்னேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்