தளிகா!!! குழந்தை பற்றிய சந்தேகம் உதவுங்கள்

டியர் தளிகா,
எப்படி இருக்கீங்க?நீங்க சொன்ன மாதிரி,என்னுடைய குழந்தையை,இரவு குளிப்பாட்டிவிட்டு,2 புறமும் தலையைணை வைத்து தூங்க வைத்தேன்,2 மணி நேரம் உறங்கினால்,பின்னர் 2 மணிநேரம் முழித்து இருந்தால்,அதன் பின்னர் மீண்டும் 2 மணி நேரம் உறங்கினால்,குழந்தைகள் நம்மைபோல்,நீண்ட நேரம் விழித்து இருக்காமல் உறங்க எத்தனை மாதங்கள் ஆகும்?

உங்கள் உதவிக்கு மிக மிக நன்றி,உங்களுக்கு குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட் பட்டமே வழங்கலாம்,அதேபோல் நீங்கள் சொன்னதுபோல் குழந்தை அடிக்கடி உடம்பை முறுக்குவது பற்றி டாக்டரிடம் கேட்டென்,குழந்தைக்கு,கேஸ் பிராப்ளம் இருப்பதாக சொன்னார்,அதற்கு கிரைப் வாட்டர் தினமும் இரவு குடுக்க சொன்னார்.
*****மிகப்பெரிய முக்கியமான இன்னொரு ஆலோசனையை எனக்கு நீங்கள் வழங்க வேண்டும்,நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்பது என்னுடைய மிகப்பெரிய நம்பிக்கை****
உங்களுக்கே தெரியும் என் குழந்தை கடந்த 1 மாதமாக இரவு உறங்கமாட்டாள்,அதனால் அவளை நான் இரவில் மடியில் வைத்தே இருப்பேன்,அப்போதுதான் அவள் இரவில் கத்தாமல் இருந்தாள்.
இப்பொழுது என்னுடைய பெரிய பிரச்சனை என்ன வென்றால் பகலில் அவள் முழித்திருக்கும் சமயத்தில் அவளை கீழே துணி விரித்து படுக்கவைத்தால்,5 நிமிடம் கூட படுக்கமாட்டேன் என்கிறாள்,அழுது கொண்டே இருக்கிறாள்,தூக்கினால் அழுகையை நிறுத்திவிடுகிறாள்.
நானும் 10நிமிடம் வரை தூக்காமல் இருந்தாலும் கூட மூச்சு முட்டும் அளவுக்கு அழுகிறாள்,அதன் பின்னர் என்னால் தூக்காமல் இருக்க முடியவில்லை,எனக்கு இது பெரிய பிரச்சனையாக உள்ளது,நான் இங்கு வெளிநாட்டில் தனியாக உள்ளேன்,யாரும் உதவிக்கு இல்லை,என் கணவருக்கும் ,அலுவலகத்தில் அதிக வேலை இருப்பதால் இரவு 8 மணிக்குதான் வருவார்,முதல் பைய்யன் வேறு இருக்கிறான்
இப்பொழுது பரவாயில்லை,அவள் பகலில் அதிகம் தூங்குவதால் வேலை செய்ய முடியும்,இன்னும் போக போக அவளுடைய தூக்கம் குறையும்,நான் எப்படி வேலை செய்ய முடியும் இப்படி அழுதுகொண்டே இருந்தால்,
நீங்கள் தான் 1 சகோதரியைபோல எனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

அன்புடன் மஞ்சு

கொஞ்சம் பிசியாக இருக்கிறேன்..என் மேல் ரொம்பவே நம்பிக்கை வச்சிருக்கீங்க மஞ்சு..எனக்கு இரு குழந்தைகள் அவர்களை வளர்த்திய அனுபவம் மட்டுமே எனக்கு இருந்தாலும் என்னை நம்பி கேள்வி கேட்டிருக்கீங்க பட்டமும் தந்துடுவீங்க போல..பார்ப்போம் எதாவது செய்ய முடியுமா என்று.
குழந்தை நம்மை போல தூங்க எனக்கு தெரிந்து ஒன்று பெரிய கார்ணமாக இருக்கும்..எப தாய்ப்பால் நிறுத்துரோமோ அப்ப தான் ஒழுங்கா தூங்கும்..ஆனால் திட உணவு ஆரம்பித்தவுடன் கொஞ்சம் மாற்றம் தெரியும்..விரும்பினால் நாலு மாதத்தில் ஆரம்பிக்கலாம்.கொஞ்சம் வித்தியாசம் தெரியும்..பிறகு குப்புற கழிய,உக்கார,தவிழ என பல பல கட்டத்தில் அவர்களுக்கு உடலுக்கு பயிற்ச்சி கிடைப்பதாலும் தூங்க பழக ஆரம்பிப்பாங்க..அதுவரை நாள் போவதே தெரியாது..ஆனால் எனக்கும் இந்த தூக்க ப்ரச்சனை இருந்ததால் உங்க ப்ரச்சனை நல்லாவே புரியுது.
கேஸ் ட்ரபில் என்றால் குழந்தைக்கு க்ரைப் வாட்டரை விட ஹிமாலயாசின் போனிசன் சிரப் வாங்கி கொடுங்க அது நல்ல வித்யாசம் தெரியும்.நீங்களும் கடலை,பருப்பு,வேக வைத்த முட்டை உருளை போன்றவற்றை கம்மி பண்ணிக்குங்க.அல்லது ஓமம் காய்ச்சி குடிங்க..வித்யாசம் தெரியும்..குழந்தையை படுக்க வைத்து கால் பாதம் இரண்டையும் பிடித்து சைக்கில் ஓட்டுவது போல அடிக்கடி செய்து விடுங்க...
நல்ல தூக்கி பழகிட்டாங்க போல கொஞ்சம் சிரமப்பட்டு தான் மாத்தனும்.ஒரு சில சமயம் மேஜிக் போல இந்த வயிற்று உபாதைகள் நீங்கினால் கூட தூக்க ஆரம்பிச்சுடுவாங்க.
பால் குடித்ததும் முதுகில் போடுவீங்க தானே??சாதாரணமாக போடமல் குழந்தையின் வயிற்று பகுதி நம் தோள் கிட்ட வருமாறு கொஞ்சம் உயர்த்தி படுக்க வைத்து முதுகில் லேசாக தட்டி தட்டி விடுங்க..குழந்தை பர்ப் பண்ணினதும் படுக்க வைக்கலாம்.
குழந்தையின் வயிற்றில் தொப்புளில் இருந்து வலது புறமாக க்லாக் வைசில் வட்டவட்டமாக அழுத்தாமல் மசாஜ் பண்ணி விட்டு பாருங்க..இதெல்லாம் எனக்கு ஹாஸ்பிடலில் சொல்லி தந்தது..ஒரு நாளாவது கொஞ்சம் அதிகமாக தூங்கினால் அன்னைக்கு எது வித்யாசமாக செய்தீங்கன்னு யோசிங்க..ஒரு வேளை நீங்க சாப்பிட்ட எதாவது கூட காரணமாக இருக்கலாம்..ரொம்ப அதிகம் இல்லாமல் உணவில் கொஞ்சம் கீரை சேத்து பாருங்க.
பெரிய பிள்ளையை கவனிக்க முடியாமல் போகும் இப்ப..பாவம் குழந்தையை கைய்யில் வச்சுட்டாலும் அவரையும் கொஞ்சிகிட்டே இருங்க இந்த டென்ஷனில் பெரிய குழந்தையிடம் கோபப்பட வேண்டாம்..நான் பிறகு வரேன் மஞ்சு

மஞ்சு இத்துநூண்டு இருந்தாலும் இந்த குழந்தைகளுக்கு நல்லா டேக்டிக்ஸ் எல்லாம் தெரியும்..முடியும் எனும்போது தான் ரொம்ப செய்வாங்க இவங்க கண்டுக்க மாட்டாங்க என்றால் அதுக்கு தகுந்த மாதிரியும் இருந்துக்குவாங்க குழந்தைங்க..என் முதல் குழந்தைக்கு நான் ரொம்ப சென்டி யாக இருந்தேன்..இரண்டாவது அப்படியல்ல ப்ரேக்டிகலா கொஞ்சம் நடௌமுறைபடுத்தியதும் அதற்கான வித்த்யாசமும் பலனும் நல்லாவே தெரியுது..ரொம்ப மூச்சு முட்ட அழுக விடாமல் ஓரளவு அழுதாலும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு பாருங்க..பாட்டு போட்டு விடுங்க டிவி போட்டு விடுங்க ..அதை கேட்டால் நிறுத்துவாங்களா பாப்போம்.
பெட்டில் தானே படுக்க வைப்பீங்க?

உங்களுக்கு குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட் பட்டமே வழங்கலாம் 100%true

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

டியர் தளிகா,
நேரம் இல்லைனாலும்,எனக்காக வந்து பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி,நான் ஓமம் தண்ணீர் குடிச்சி பார்க்கிறேன்,நீங்க சொன்னத செஞ்சு பார்க்கிறேன்,தளிகா இந்த வயித்தவலி பிரச்சனை இப்ப டாக்டர் குடுத்த மருந்தால ஓரளவு சரி ஆயிடுசு.

இப்ப என்னுடைய பெரிய பிரச்சனை குழந்தை கீழ போட்டா அழுவுரதுதான்.
நைட்டு டைம் குழந்தை முழிச்சிட்டு இருக்கும்போது கையில் வச்சிருக்காம நான் என்ன செய்யணும் குழந்தை அழுதால்,நான் குழந்தையை என்னுடைய பெட்ரூமில் என் அருகில் தான் தூங்க வைப்பேன்,பெட்ரூமில் தொட்டில் இல்லை லிவ்விங் ரூமில்தான் தொட்டில் கட்டி இருக்கிறோம். நைட்டு கையில் வைத்து இருக்காமல் தொட்டிலில் அல்லது Baby Trollyயில் வைக்கலாமா?

என்னுடைய பெரிய பயம்,இந்த கையில் வைத்து இருக்கும் பழக்கம் இனி மாறாது என்று சில பேர் கூறுகிறார்கள்,இனி இந்த பழக்கத்தை மாற்ற முடியாதா?ஏதாவது 1 வழி இருந்தால் தயவு செய்து யாரிடமாவது விசாரித்தாவது கூறவும்.எனக்கு இது நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.நான் நீங்க சொல்லுறதுக்கு முன்னடியே பாட்டு,டிவி எல்லாம் போடு பார்த்து விட்டேன் எதற்கும் அசைய மாட்டேங்குறாள்,ஆனால் அவள் எங்கள் வீட்டு கர்டெயின்,சோபாவை பார்த்து கொண்டே இருப்பள் சில நேரங்களில்

hai thalika ,ur suggestions r really good,,my baby 11months old..she is always crying...what i do?appothum thookiye vaikka solhiral...plz help me

ஹாய் தளிகா என் குழந்தைக்கு இன்றுடன் 8 மாதம் முடிகிறது.......அவனுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் கொங்ஞம் சொல்லுங்களன் பருப்பு,சோறு,காய்கள் வேகவைத்தது.செரிலக் கொடுக்கிறேன் அவன் ஜூஸ் குடிக்கிரானே இல்லை எப்படி கொடுக்கலாம்?ஈரல் ,இறைச்சி,கோழி கொடுக்கலாமா?அவனுக்கு எப்படி சூப் செய்வது தயவு செய்து கொஞ்ஞம் விளக்கமா சொல்லுங்க

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

assalamu alaikkum...dont give mutton..மற்றவை குடுக்கலாம்..நடக்கும் போது ஹெவி உணவு குடுக்கலாம்..செரிமானம் எளிதாக irukkum

ஒருமுறை எங்கோ படித்தேன்..குழந்தைக்கு operation பன்னும் போது டாக்ட்ரின் கையை பிடித்ததாக ,,அப்போது நான் பார்க்க முடில,இப்போ வேனும்,உதவுங்கலேன்..thalikka,than aluthurndhaanga...

hi,
my daughter has same issue. in medical term they said unsettling baby, here (Australia) we got advice from counselling . they said try different positions as tummy sleep,if she start to cry don't lift her. don't lift her above 10 minis.

we found she sleep well when we travelled in car. she was comfortable that position. so we use the same car seat at home. once she comfortable and feel good no matter how she sleep. so you need the first break point so try different ways find the way which is suitable for ur kid.

hopefully it will fix in future.

இப்ப குழந்தைவளக்கிறவங்க பன்ற பெரிய தப்பு பிள்ளைகளை தரையில் விட்டு பழக்காததுதான் ஒரு துனி அல்லது மேட் விரித்து பிள்ளைகளைஆரம்பத்தில் இருந்தே போட்டுப்பழக்கனும் அப்போதான் கை கால் உதைத்து விளையாடும் அதுதான் அதற்கு எக்சர்சைஸ் நம் கை சூடும் தாக்காது தூங்கும் போது அருகில் தலையணை வைப்பதுடன் நெஞ்சில் ஒரு துணியும் போட்டு வைக்கவும் அப்போதான் அடிக்கடி குழந்தை எழாது ஒரு அணைப்பான சுகம் வேணும் குழந்தை தூக்கி வைக்க சொன்னால் முதலில் பிள்ளையை தூக்கிக்கொண்டு நீங்கள் தரையில் அமர்ந்து கொண்டு விடுங்கள் பிள்ளை உங்களை விட்டு இறங்கிவிடும் நீங்களுட்கார்ந்து பிள்ளையை மடியில் வைத்தால் அதுக்கு பிடிக்காது அது விளையாட இறங்கி விடும்சிறிது நேரம் சென்று நீங்கள் நகருங்கள்
நாளடைவில் மாறும்

மேலும் சில பதிவுகள்