நானோ

நானோ டெக்னாலஜி பற்றியும் அதன் படிப்பு விவரங்களும் பற்றி அறிந்தவர்கள் சொல்லுங்கப்பா

அன்புள்ள அக்கா,

இதை பார்க்கவும்,

ta.m.wikipedia.org/wiki/நானோ_தொழில்நுட்பம்

தற்போது இது அண்ணா பல்கலையில் கூட உள்ளது, மிக சிறந்த எதிர்காலம் கொண்டது

Deepan

நன்றி gx deepan ஆனா நான் நானோவில் என்னபடிப்பு உள்ளது எங்கு உள்ளது என்பது பற்றி கேட்டேன்

இந்தியாவில் B.E, B.TECH, M.E, M.TECH, P.HD, அளவில் பொறியியல் துறையின் கீழ் உள்ளது, சில பல்கலையில் b.sc nanoscience என்னுமா பிரிவில் உள்ளது!...சென்னை அண்ணா பல்கலையில், எஸ்.ஆர்.எம் பல்கலையில், வி.ஜ.டி போன்ற பல்கலையில் சமீபத்தில் தொடங்கபட்டுள்ளது

Deepan

அம்மா நல்லா இருக்கீங்களா? என்னை நியாபகம் இருக்கா?....
இந்த விபரம் வலைதளத்துல எடுத்தேன். வேலைய முடிச்சுட்டு மறுபடியும் ட்ரை பண்றேன்.
*************************************************************************
மதுரை லேடிடோக் கல்லூரியில் எம்.எஸ்சி., நானோ அறிவியல் படிப்பு, வரும் கல்வியாண்டு முதல் துவங்குகிறது.
கல்லூரி முதல்வர் மெர்ஸி புஷ்பலதா கூறியது:
பல்கலை மானியக் குழு, 51 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இந்நிதி மூலம் ஐந்தாண்டுகளும், அதன்பின் கல்லூரியின் சார்பிலும் பாடத்திட்டம் நடத்தப்படும். நானோ துகள்களை கண்டறியும் "அட்டாமிக் போர்ஸ் மைக்ரோஸ்கோப்' கருவி 31 லட்ச ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. தற்போது அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் என்பதால், அறிவியலில் ஆர்வமுடைய மாணவிகள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் பயோ டெக் மாணவிகள் நானோ அறிவியல் படிப்புக்கு தகுதியுடையவர்கள். பொது நுழைவுத் தேர்வின் மூலம் மாணவிகள் சேர்க்கை நடைபெறும். ஏப்., 4 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.
அதிக விபரங்களுக்கு http://www.ladydoak.org/
**************************************************************************
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை நானோ அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு கால பட்ட மேற்படிப்பான இதில், உயிரியல் சூழல் சார்ந்த நானோ தொழில்நுட்பம், நானோ பொருள்கள் ஒருங்கிணைப்பு, நவீன மருந்து தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும். 4 பருவங்கள் கொண்ட இந்தப் படிப்பில், வகுப்பறைக் கல்வியைத் தவிர தொழில் துறைக்கு தேவைப்படும் அறிவியல் படைப்புகள் உருவாக்கம், ஆய்வு நெறிமுறைகள், மென்திறன் ,திட்டப்பணிகள் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ் தெரிவித்தார்.
இந்தப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலும், நந்தனத்தில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: 044-2266 2500-03.
http://www.velsuniv.ac.in/

KEEP SMILING ALWAYS :-)

மிகவும் நன்றி நாகா ராம் உங்களை மறக்கமுடியுமா டியூஷனுக்கு ஏற்கனவே சொன்னீர்கள் தானே யாரும் நானோ பற்றி படித்தவர்கள் தெரிந்தவர்கள் இருக்கிரார்களா நாகாராம் இதைப்பற்றி மேலும் அறிய விரும்புகின்றேன் அப்படி யாரும் படித்தவர்கல் இருந்தால் தெர்யப்படுத்தவும் டியூஷனுக்கும் யாரும் இருந்தால் தெரியப்படுத்துங்கள் எங்க ஏரியா பக்கம் வந்தால் அவசியம் வாங்க லேடி டோக் பெண்கள்கல்லூரி

Good information nagaram

Deepan

ஓ.. தம்பிக்கு கேட்டீங்களா? Boys/Co-Ed College தெரிஞ்சா சொல்றேன்

KEEP SMILING ALWAYS :-)

நன்றி தீபன்

KEEP SMILING ALWAYS :-)

நீங்களும் நானோ டெக் தான் படிக்கிறீங்களா?

Deepan

இல்ல தீபன்... IT...

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்