மெகந்தி டிசைன் - 13

தேதி: September 17, 2011

4
Average: 3.8 (19 votes)

 

மெகந்தி கோன்

 

உள்ளங்கையின் கீழ் சாய்வாக ஒரு முக்கோணம் வரைந்து அதை கோடுகள், வளைவுகள் கொண்டு நிரப்பவும்.
அதனைத் தொடர்ந்து மேலே 3 வளைவுகள் வரைந்து அதன் நடுவே ஒரு கோடு போட்டு, வளைவுகளுக்குள் சிறு கோடுகள் வரையவும்.
மூன்று வளைவுகளில் நடுவில் உள்ள வளைவை மையமாகக் கொண்டு ஒரு மாங்காய் வடிவம் வரைந்து உள்ளே வளைவுகள், கோடுகள் போடவும். அதைச் சுற்றி மீண்டும் ஒரு மாங்காய் வடிவம் வரைந்து பறவையின் தலையும், மூக்கும் வரையவும், அதன் உள்ளே கோடுகள் போட்டு முடிக்கவும்.
இதே டிசைனை எதிர்ப்புறமாக இருப்பது போல் வரைந்து இடைவெளி தெரியும் இடத்தில் புள்ளிகள் வைக்கவும்.
உள்ளங்கையில் வரைந்த டிசைனை சுற்றி வளைவுகள் போட்டு முடிக்கவும்.
விரல்களை சேர்த்து வைத்துக் கொண்டு சுழி போல் போடவும். இவ்வாறு எல்லா விரல்களுக்கும் போட்டு முடிக்கவும்.
வளைவுகள் போட்ட இடத்தினுள் புள்ளிகள் வைக்கவும்.மருதாணி ஆரம்பித்த இடத்தில் முக்கோணத்தின் கீழே ஒரு கோடும் அதன் கீழே வளைவுகளும், சுழியும் போடவும்.
சுழி போட்ட பின் மேலே முக்கோணம் வரைந்ததைப் போலவே கீழேயும் மாற்று திசையில் ஒரு முக்கோணம் வரைந்து அதையும் நிரப்பவும்.
முக்கோணங்கள் முடிந்த இடத்தில் படத்தில் உள்ளது போல் சாய்வாக ஒரு அரை வட்ட பூ ஒன்று வரைந்து முடிக்கவும்.
சுலபமாக போடக்கூடிய மெகந்தி டிசைன் இது. ஒரு கிண்ணியில் கொஞ்சம் தண்ணீர் வைத்து அதில் சீனி, எலுமிச்சைச்சாறு கலந்து வைத்துக் கொண்டு மருதாணி காய காய அந்த தண்ணீரை தொட்டு மருதாணி மேல் வைக்கவும். அப்போதுதான் நல்ல சிகப்பு நிறம் கிடைக்கும், மருதாணியை பொருத்துதான் நல்ல நிறமும் கிடைக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டிசைன் சூபர்ங்க. அதுவும் விரல்களில் போட்டுக் காட்டி இருக்கிற டிசைன் அழகா இருக்கு.
இதுதான் உங்க முதல் கைவினைக் குறிப்பு இல்லையா? பாராட்டுக்கள். தொடர்ந்து நிறைய அனுப்புங்க.

‍- இமா க்றிஸ்

ரஸியா ரொம்ப நாள் கழிச்சு கைவினை பகுதிக்கு உங்க குறிப்பு அனுப்பி இருக்கீங்க. மெகந்தி டிசைன் வரைவதற்கு ஈஸியாவும், அழகாவும் இருக்கு. எனக்கும் கைவிரலில் வரைந்த டிசைன் பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்.

இமாம்மா ரஸியாவோட இது மூணாவது மெகந்தி டிசைன் மறந்துட்டீகளா பின்னோட்டம் எல்லாம் கொடுத்து இருக்கீங்களே.

அழகா இருக்கு.

ஹை! இமா மாட்டிக்கிட்டீங்களா? ஐ ஐ ஜாலிலோ...ஜிம்கானா....

முதல் ஆளா பதிவு போட்டுட்டீங்களேன்னு நினைச்சேன்...ஹ ஹ ஹ...

Very nice and beautiful

ரொம்ப அழகா இருக்கு ...

ரொம்ப ஈஸியா கிரேன்டா இருக்கு ரொம்ப thanks ராஸியா எப்படி இருக்கீங்க

-ரஸினா

உங்க முதல் பாராட்டுக்கு நன்றி இமா!இதற்கு முந்தைய என் கைவினைகளை பார்த்ததில்லையா?!இது என் 4வது குறிப்பு!

Eat healthy

பாராட்டுக்கு ரொம்ப நன்றி வினோஜா!மெஹந்தி எல்லாம் தீர்ந்து போச்சு,இப்பத்தான் ஊரிலிருந்து வந்தது,அதான் உடனே போட்டு அனுப்பிட்டேன்,
இமாக்கு ஞாபகம் காட்டியதற்கு நன்றி,ஆனால் இது என் 4வது குறிப்புப்பா!!!

Eat healthy

நன்றி தெரஸ்!அப்புறம் இமா மாட்டிகிட்டதுல உங்களுக்கு அப்படி என்ன குஷி!!!ஹாஹாஹா...

Eat healthy

thank u so much gowthami

Eat healthy

பாராட்டியதோடு இல்லாமல் போட்டும் பாருங்கபா!!!நன்றி

Eat healthy

ரொம்ப நன்றி ரஸினா!!!!அல்ஹம்துலில்லாஹ் நான் நலம் நீங்க நலமா?என் பேர் ராஸியா இல்ல,உங்க பேரில் ஒரு எழுத்து மட்டும் மாற்றினால் என் பேர் வரும் "ரஸினா-ரஸியா"

Eat healthy

மெஹந்தி டிசைன் அழகா இருக்கு! அதிலும் அந்த விரல்களுக்கு போட்ட கொடி போன்ற டிசைன் அருமை!. வாழ்த்துக்கள் ரஸியா!

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நன்றி சுஸ்ரீ!உங்களுக்கு அந்த டிசைன் பிடிச்சிருக்கா!!!நேரில் வந்தா நானே உங்களுக்கு போட்டுவிடுறேன்!

Eat healthy

ரசியா மெஹந்தி டிசைன் சூப்பர். அழகா இருக்குப்பா. இதைப்பார்த்தவுடனே மெஹந்தி போட ஆசை வந்திருச்ச்சு. போங்க.எவ்ளோ அழகா க்ரான்டா போட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

ரொம்ப அழகா அடர்த்தியா போட்டு இருக்கிங்க..
எனக்கும் இது போல ரொம்ப பிடிக்கும்..
இங்கே கிடைத்தால் வாங்கி போட ட்ரை பண்றேன் ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரஸியா,
டிசைன் சூப்பரா இருக்கு.ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க.விளக்கமும் அருமை.வாழ்த்துக்கள்.

மெகந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு.

இதுவும் கடந்து போகும்.

நான் போட்டுவிடுறேன் நஜீம்.சீக்கிரம் வாங்க!

Eat healthy

எனக்கும் கை நிறைய அடர்த்தியா போட்டாத்தான் பிடிக்கும்.நன்றி ரமி

Eat healthy

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஹர்ஷா!

Eat healthy

ரொம்ப நன்றி லக்ஷ்மி.

Eat healthy

//ஹை! இமா மாட்டிக்கிட்டீங்களா? ஐ ஐ ஜாலிலோ...ஜிம்கானா....// க்ர்ர் க்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;)
இமாவுக்கு ஞாபகசக்தி கொஞ்சம் ஜாஸ்திங்க. ;)))
பரவால்ல.. இப்பிடியாச்சும் சிலபேர் என் மேல கொலைவெறில இருக்காங்க என்கிறது தெரிஞ்சுது. ;)))

‍- இமா க்றிஸ்

ரஸியா நல்லாயிருக்கு பா அழகா ஈஸியா போடலாம் போல இருக்கு கண்டிப்பா தீபாவளிக்கு இந்த டிசைன் தான் பா போட்டுட்டு சொல்றேன் பா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரஸியா நல்லாயிருக்கு பா அழகா ஈஸியா போடலாம் போல இருக்கு கண்டிப்பா தீபாவளிக்கு இந்த டிசைன் தான் பா போட்டுட்டு சொல்றேன் பா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரஸியா நல்லாயிருக்கு பா அழகா ஈஸியா போடலாம் போல இருக்கு கண்டிப்பா தீபாவளிக்கு இந்த டிசைன் தான் பா போட்டுட்டு சொல்றேன் பா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

"நல்லாயிருக்கு பா;டிசைன் தான் பா;சொல்றேன் பா" எத்தனை பா?!எப்போ தீபாவளி?அப்போ நிறைய பலகாரங்களை அருசுவை மூலம் சுவைக்கலாம்னு சொல்லுங்க!!நான் ரெடி பா!

Eat healthy

ரசியா டிசைன் சூப்பர்
அருமையோ அருமை. கையில் நல்ல சிகப்பா பத்தி இருக்கு

Jaleelakamal

பாராட்டுக்கு ரொம்ப நன்றி!!ஆமாம் இது சவூதி மருதாணி,அதான் நல்ல கலர் உடனே சிவந்தது.

Eat healthy

சூப்பரான டிசைன், அருமையான விளக்கம். நீங்கள் இங்கே பாவித்திருப்பது எந்த வகையான மருதாணி? வேறு நிறமாக தெரிகிறதே அது தான் கேட்டேன். எதாவது பிராண்ட் பெயர் இருந்தால் சொல்லுங்களேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி vr scorp!பொதுவாக நான் இந்தியாவிலிருந்துதான் மருதாணி வாங்கி வந்து உபயோகிப்பேன்,இந்த முறை என் மாமி சவூதியிலிருந்து வாங்கிவந்து கொடுத்தார்கள்,இந்தியா மருதாணி பெயர்"singh" ,சவூதி மருதாணி ப்ரௌன் கலரில் இருந்தது,அதுவும் போட்ட உடனே நல்ல சிகப்பு,சீக்கிரம் காயவே இல்லை,குழந்தைகளுக்காக 1மணி நேரத்தில் எடுத்துவிட்டேன்.அதன் பெயர்"Rani".

Eat healthy

its vry nice to see; simply super.

உங்க டிசைனை போட்டேன் பா எனக்கு ஏத்த மாதிரி மாத்தி போட்டுகிட்டேன் சூப்பர்னு என்னவர் சொல்லிட்டார் எல்லோரும் சொன்னாங்க நன்றி பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Tnx for ur comment

Eat healthy