வீட்டுக்கு வீடு வாசப்படி..

எங்கே இந்த மாதிரி வாசகங்களை கொண்டு இந்த அரட்டையை தொடருங்க பார்ப்போம்..சப்ஜெக்ட்ல இந்த வாசகம் இருந்தாதான் பரிசு..ஒகேவா?
என்னப்பா எல்லாரும் மாமியார் புராணம் பாடி முடிச்சிட்டீங்களாப்பா?எங்கப்பா இந்த மாமியார் சங்கங்கள்?வாங்க..நீங்க வந்து இப்போ மருமகள் புராணம் பாடுங்க பார்ப்போம்...மருமகள்களே உஷார்!!மாமியார்களுக்கும் கம்புயூட்டர் ஆப்பரேட் பண்ண தெரிஞ்சுருக்கலாம்..

என்ன பா... அரட்டைக்கு ஏகப்பட்ட இழை ஆரம்பிசுருகீங்க எங்க அரட்டை அடிக்கனு ஒரே குழப்பமா இருக்கே... இங்க நீங்க... அங்க deepa... என்ன தா பண்றது...

அன்புடன் அபி

வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்...
எந்தப் பாட்டுக்கு பாட்டுக்கும் தாளகதி வேணும்..
ஹேய்....அஸ்வினி....எப்படி...நீ சொன்ன வரிகள் வெச்சு நான் அரட்டையை ஆரம்பிச்சாச்சு....எப்படியோ எனக்குதான ப்ரைஸ்? என்னன்னு சீக்கிரம் சொல்லிடு...ஆவலா காத்திண்டிருக்கேன்...

ஹாய் தோழிஸ் எல்லோரையும் இந்த புது அரட்டைக்கு வரவேற்கிறேன்....
எல்லோரும் எப்படி இருக்கீங்க.... யார் வீட்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..
எனக்கும் சொல்லுங்க பா..... தெரிந்து கொள்கிறேன்....

சரிப்பா. நான் கொஞ்சம் வேலை வந்திருச்சு. போறேன். டைம் கிடைச்சா வரேன். நாளைக்கு வீக் என்ட், வராவிட்டால் தேடாதீங்க. என்னப்பா இவளை கானும்னு வையாதீங்க. சும்மா ஜாலிக்கு சொன்னேன். பை தோழிகளே.

யாரெல்லாம் இருக்கீங்கப் பா உடம்பு என்னமோ பண்ணுது அதான் தூங்கிட்டேன் என்னவர் போன் வந்ததும் எழுந்து வந்து பார்த்தா அடுத்த இழைக்கு வந்துட்டீங்களா யாரெல்லாம் இருக்கீங்க இங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாங்க வாங்க..எல்லாரும் இங்க அரட்டையை தொடருங்க..
நசீம்:எல்லாரையும் வரவேற்த்துக்கிட்டு இருக்கேன்..நீ என்ன கிளம்பறேன்னு சொல்ற?
ராணி:கண்டுப்பிடிச்சிட்டீங்களா?வாங்க?

இதுவும் கடந்துப் போகும்.

இது மாமியார் இழையா என்னப்பா பழிவாங்குறீங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

என்ன பண்ணுது உடம்புக்கு..... உடல் நிலை சரி இல்லையா....
மதிய உணவு முடிந்து விட்டதா....
நானும் மற்ற தோழிகளை தான் தேடி கொண்டு இருக்கிறேன்...
எல்லோரும் இங்க வாங்க பா பேசலாம்....

ஹாய் தீப்ஸ், புரட்டாசியில் என்ன ஸ்பெஷல் செய்யமுடியும். முள்ளங்கி சாம்பார், கேரட் & பீன்ஸ் பொரியல். அவ்வளவுதான் எங்க வீட்டில். அதுவும் இன்றைக்கு வியாழகிழமை வேற. எல்லோரும் வந்து சொல்லுங்க. வித்தியாசமான சமையலாக இருந்தால் செய்முறை விளக்கம் தேவை.

எல்லோரும் போய்ட்டிங்களா? இந்தாங்க டீ குடிச்சிட்டு, வடை சாப்பிட்டுட்டு போங்க. தனியா டீ ஆத்துறதே நம்ம வேலைய போச்சி. பைபை.

மேலும் சில பதிவுகள்