தோழிகளே, எனக்கு பதில் சொல்லவும்.

தோழிகளே, எனக்கு பதில் சொல்லவும்.என் மாமியார் குழந்தையை பாத்துக்குறாங்க. ஆனால் மாமியார் எப்ப பாத்தாலும் அங்கே, இங்கே போறேன்னு சொல்லிட்டு போயிடுறாங்க.அடிக்கடி குழந்தையை அம்மா வீட்டுக்கு அழைத்து வர வேண்டியுள்ளது. இன்னைக்கு கூட குழந்தையை அம்மா வீட்டில் விட்டு தான் வந்து இருக்கேன்.இங்கேயே வீடு வந்துவிடாலாம் பார்த்தா தங்கை தான் அம்மா வீடு வந்த பார்த்து கொள்வாள். அவள் பிப்ரவரி மாதம் வீடு காலி பண்ணி வேறு இடத்திற்கு போக போறேன் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.நான் என்ன செய்வது என்றே புரியவில்லை.நான் மாமியார் வீட்டிலிருந்து என் அம்மா வீடு வர 1 மணி நேரம் ஆகும். அடிக்கடி இங்கு வருவதால் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகுது.வேலைக்கு போயே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன்,. மாமியார் வீடு வாடகை எல்லாம் சேர்த்து 3500 வந்து விடுகிறது. நாங்க மாதம் பாதி நாள் அம்மா வீட்டில் தான் இருக்கிறோம்.அதும் அங்கே குடிதண்ணீர் 1/4 அவர் சென்று தான் எடுத்து வரவேண்டும். ஒரு குடத்திற்கு 7 ரூபாய்.இங்கு அம்மா வீடு அடிக்கடிவரவும் அசிங்கமாக உள்ளது. அம்மா வேலைக்கு போறாங்க.இன்னைக்கு தான் அம்மா வீடு வ்ந்தேன். மாமியார் 1 1/2 மாதம் ஊருக்கு போவதாக சொல்லிவிட்டு போயிட்டாங்க. அப்பா கிடையாது. அம்மா சம்பாதியத்தில் சாப்பிட வருத்தமாக உள்ளது. அம்மா காசு கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க. என்ன செய்வதேன்றே புரியவில்லை

ஜீவிமா நீங்க அங்க வீடு காலி செய்துட்டு அம்மா வீட்டுக்கு பக்கமா வந்துடுங்க பா பாப்பாவ பாத்துக்க ஈஸியா இருக்கும் முடிஞ்சவரை உங்க தங்கையை இங்கேயே இருக்க சொல்லுங்கபா அப்டி அவங்க இல்லன நீங்களும் அவங்க எங்க வீடு பாத்து போறாங்களோ அங்கேயே போக முடியுமானு பாருங்க ஏன்னா அம்மா வீடு பக்கம் வந்தாலும் அம்மா குழந்தையை பாத்துக்க கஷ்டமா இருக்கு உங்க தங்கை பக்கத்தில இருந்தாலும் அவங்க பாத்துக்க முடியும் பா எனக்கு தெரிஞ்சி இப்டி செய்யலாம் பா ஏன்னா அம்மாவையும் கஷ்டபடுத்த வேணாம் பாப்பாவும் பாத்துக்கவும் ஈஸியா இருக்கும் இல்லனா அம்மாவ சமாதனப்படுத்தி உங்களோடவே வெச்சிக்கங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு, தங்கைக்கு குழந்தை இல்லை , அவ டீரிட்மெண்ட் எடுக்குற. அவ வேற வீடு போற காரணம். அவ வீடு பக்கத்தில் மருத்துவமனை இருக்கு.அப்புறம் அம்மா கூட அண்ணி இருக்காங்க. அவங்களுக்கு யார் இருக்கா. அண்ணா இறந்துட்டாங்க தெரியும்ல ரேணு. அண்ணி கூட விட்டில் இருந்த அண்ணா ஞாபகம் வருவதால் வேலைக்கு போக போறங்க. அது வேறு அவங்களுக்கு 2 பெண் குழந்தைகள். அவங்க ஸ்கூல் போயிடுவாங்க.தங்கை வீடு பக்கம் போக முடியாது ரேணு அவங்க வீட்டுக்கும் என் அலுவலகத்திற்கு 1 1/2 மணி நேரம் ஆகும். அவ அடிக்கடி மருத்துவமனை செல்வாள் என்ன பண்ண ரேணு.

அப்ப நீங்க அம்மா வீடு பக்கம் வந்துடுங்க பா அண்ணி பசங்க என்ன பண்றாங்க அவங்க வீட்ல இருக்குறாங்கனா நீங்க பாப்பாவ அவங்கள்ட விட்டு போகலாம்பா அப்டி எதும் சரிவரலனா அண்ணன்ட சொல்லி உங்க அத்தையை பாப்பாவ பாத்துக்க சொல்லி சொல்லுங்க அதும் முடிலனா அண்ணி இல்லனா நீங்க தான் வேலைக்கு போறத விடணும் பா பாப்பாவ ஏதாவது க்ரீச்ல விடமுடியும்னா அதையும் ட்ரை பண்ணுங்க இல்லனா உங்க ப்ரெண்ட்ஸ் ரிலேஷன்ஸ் யாராவது இருக்கற பக்கம் போகலாம் இல்லனா எங்க வீட்டு பக்கம் வந்துடுங்க பா நா பாத்துக்குறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு, நீ சொன்னதே சந்தோஷம் டா. எதாவது கிராஷ் -ல தான் விடணும்.அம்மா வீடு பக்கம் எல்லாம் விலை குறைவு. மோட்டார் தண்ணிர், குடி தண்ணீர் எல்லாம் வீட்டில் வரும் வாடகை கூட 2000 /- இ.பி.100/- தான் வரும் . அங்கு என்றால் எல்லாம் சேர்த்து 3500 வரும்.காசு மிச்சம். 1 1/2 வருடம் கிராஷ் - ல் விட்டுட்டு கூட அப்புறம் ஆபிஸ் பக்கம் ஸ்கூல் சேர்த்து விட வேண்டியது தான்.

நல்ல முடிவு பாப்பாக்கு அடிக்கடி இடம் மாறினாலும் உடம்பு கெட்டிடும் சீக்கிரம் செட் ஆகாது அதனால பாத்து செய்யுங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

hi this is esthar, ennaku marriage aagi one year mudiyapoguthu, but nan innum pregnant aagala, but my periods are not regular,my periods date is last8th mudichiduchi.... enaku ippan oru varama thala suthara mathiri eruku sapta pidigala adi vairu appo appo valikuthu ethu ethunala ippaadi eruku. ennoda husband vera eduthula workla erugaru masathuku 2nal than en koota eruparu ethunla na pregnant agarathula prachana varuma. ennaku romba kastama irruku please help me friends

ரொம்ப நன்றி ரேணு,

உங்களுக்கு ரொம்ப நம்பிக்கையான யாராவது உங்கள் உறவுகாரவங்களை கூட்டி வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாமே ஜீவி. நீங்க மாலை வர வரை ஜீவியை பார்த்துக் கொள்ளவது போல ஆள் யாரையாவது அமர்த்தலாமே.
அண்ணிய கொஞ்சம் நாட்களுக்கு உங்கள் வீட்டில் வந்து இருக்க முடியுமானு கேட்டு பாருங்களேன் ஜீவி அவங்களுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் மனசுக்கு.
தொடர்ந்து இருக்க முடியலைனாலும் ஒரு முடிவு எடுக்கும் வரையிலாவது வ்ந்து இருக்கும்படி கேட்கலாமே ஜீவிமா.

அப்படி யாரும் உறவுகாரங்க இல்ல யாழி, ஆள் அமர்த்தினால் அவங்க குழந்தையை சரிவர பார்க்க மாட்டாங்க. அலுவலகத்தில் வேலை ஓடாது.அண்ணி மன ஆறுதலுக்காக வேலை போறாங்க. அப்புறம் 2 பெண் குழந்தைகள் வேறு, அவர்களின் எதிகாலமும் அவசியம் தானே யாழி. அண்ணா இருந்தவரை பரவாயில்லை. அம்மா ஒருவரின் சம்பளம் என்ன பண்ண முடியும். நாங்க காசு கொடுத்தா கூட வாங்க மாட்டாங்க.

சரிதான் ஜீவிமா வேலைக்கு போகும் வரை இங்கே வந்து இருக்க சொல்லலாமேனு சொன்னேன்மா. க்ரீச்ல தான் விட போறீங்கனு முடிவாகிட்டா, ஏன் ஜீவி நீங்க வேலைக்கு செல்லும் இடத்திற்கு பக்கத்திலேயே ஏதாவது க்ரீச்ல ஜீவிய விடலாமே. மதிய லன்ச் நேரத்தில் கூட போய் பார்த்துக்கலாம்லபா. அப்படி செய்ய வாய்ப்பு இருக்கா ஜீவி.

நம்ம அறுசுவைல நிறைய அனுபவசாலிகள் இருக்காங்க. நிச்சயம் வந்து உங்களுக்கு பதில் சொல்வாங்க காத்திருங்கள்.

மேலும் சில பதிவுகள்