பாகற்காய் குழம்பு

தேதி: September 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (7 votes)

 

பாகற்காய் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாதூள் - ஒரு தேக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு சிறிய கப்
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
வெல்லம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு


 

முதலில் தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாகற்காயை வட்டமாக நறுக்கவும். ஊற வைத்த புளியை கரைத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும் தக்காளியைப் பொடிப்பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றில் வெங்காயம், தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்.
பொடி வகைகளை சேர்த்து கிளறவும்.
பச்சை வாசனை போனதும் பாகற்காயை சேர்க்கவும்.
புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்.
அதில் வெல்லம் மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
சுவையான பாகற்காய் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

I like bittergourd to eat. It is a healthy one. I will try this in my home. Ur bitter gourd is beautiful

super..i will try my home.healthy food nice

அடடா! இவ்வளவு சீக்கிரமா வந்துருச்சே! நன்றி அட்மின் அண்ணா மற்றும் குழுவினர்;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி..கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க;-)

Don't Worry Be Happy.

தேங்க்ஸ்மா... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க;-)

Don't Worry Be Happy.

கரம் மசாலா சேர்த்து பாகற்காய் குழம்பு செய்ததில்ல. இத ட்ரை பண்ணிட்டு சொல்றேன். இது உங்களோட முதல் விளக்கப்பட குறிப்புனு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்...

KEEP SMILING ALWAYS :-)

பாகற்காய் குழம்பு வித்யாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் ஜெய் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரான குழம்பு.. எனக்கு புளிக்குழம்பு அதுவும் பாவற்காய்னா ரொம்ப இஷ்டம்.
இதே முறையில் கொஞ்சம் மாற்றத்தோடு செய்வேன்
பாவற்காய் இருக்கு. இன்றூ உங்க முறையில் செய்துட்டு உடனே ஓடி வந்து சொல்றேன்
வாழ்த்துக்கள்..படங்கள் அருமை ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குழம்பு வெச்சு நாக்கு சப்ப கொட்ட சாப்பிட்டு ஏப்பமும் விட்டு பதிவு போடறேன். அருமையா இருந்தது.. :) வெல்லம் மட்டும் போடலை..ஏனா ரெண்டு பேருக்குமே பாவக்காய் கசப்பு பிடிக்கும் ;)

சூப்பர் குழம்புக்கு தேங்க்ஸ் டா..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருமையான பாகற்க்காய் குழம்பு அனுப்பிய ஜெயாவிற்க்கு எனது மனமார்ந்த் வாழ்த்துக்கள்.எங்க வீட்டில் பாகற்க்காயே என்னை தவிர யாருக்கும் பிடிக்காது.இந்த முறையில் செய்து குடுத்துப்பார்க்கிறேன்.

போட்டோவோட உள்ள முதல் குறிப்பு வாழ்த்துக்கள். பாகற்காய் குழம்பு நல்லா இருக்கு. கரம் மசாலா, வெல்லம் எல்லாம் சேர்த்து செய்தது புதுமையா இருக்கு. வீட்டுல எல்லோருக்கும் பாகற்காய் பிடிக்கும் சீக்கிரம் செய்துடறேன். வாழ்த்துக்கள்

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்;-)

ஆமாங்க... இது என்னோட முதல் விளக்கப்பட குறிப்புதான்..உங்கள் ஊக்கம் உற்சாகமளிக்குது
நன்றி;-)

Don't Worry Be Happy.

இது எங்க ஊரு ஃபேமஸ்தான்.. எண்ணெய் அதிகமா ஊத்தி குழம்பு வற்றும் வரை பாவக்காயை வேகவைப்பாங்க, கடைசில எண்ணெய் ஒரு அரை இஞ்சுக்கு மேல மிதங்கும்;) நான் குக்கரில் கொஞ்சமா எண்ணெய் சேர்த்து செய்திருக்கிறேன். கண்டிப்பா இந்த சுவை உங்களுக்கு பிடிக்கும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி;-)

Don't Worry Be Happy.

ஹே..........!

எனக்கு பயங்கர சந்தோஷமா இருக்குடா;) ரொம்ப தேங்க்ஸ்டா உடனுக்குடன் செஞ்சு பாத்தது என்னை மேலும் உற்சாகபடுத்துது;)

Don't Worry Be Happy.

எங்க வீட்டில குட்டீஸ்கூட இந்தக் குழம்ப விரும்பி சாப்பிடுவாங்க...உங்க வீட்டிலேயும் கண்டிப்பா பிடிக்கும் கட்டாயம் செய்து கொடுங்க;)

மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்;-)

Don't Worry Be Happy.

எங்கே இன்னும் காணோம்னு பார்த்தேன்;-) என்னை எல்லா இடத்திலேயும் ஊக்கப்படுத்தற நபர் நீங்க மிக்க நன்றி;)

வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி;) செய்து பார்த்து சொன்னா இன்னும் சந்தோஷப்படுவேன்;-) சீக்கிரமா செஞ்சு பாருங்க;-)

Don't Worry Be Happy.

கரம் மசாலா போட்டு செய்த பாகற்காய் குழம்பு அருமையா இருக்குங்க ஜெயா! வீட்டில பசங்களுக்கும் பிடிக்கும்னுவேற சொல்லிட்டிங்க! நான் அடுத்தமுறை பாகற்காய் வாங்கும்போது கட்டாயம் இப்படி செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஜெயா,

அவசியம் செய்து பார்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எப்படி இருக்கீங்க சுபஸ்ரீ..பளவுஸ் பத்தி அரட்டையில கேட்டிருந்தீங்களே.. ஒரு வழியா எந்தக்கைன்னு டிசைட் பண்ணி தைச்சுட்டீங்களா..ஊர்ல எல்லாரும் நலமா?;-)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிபா கட்டாயம் செய்து பாருங்க;-)

Don't Worry Be Happy.

பேசி ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கிறேன்;-) இனி அடிக்கடி இங்க மீட் பண்ணலாம்;)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி;-)கட்டாயம் செய்து பாருங்க;)

Don't Worry Be Happy.

ஜெய்,நம்ம அறுசுவைக்கு தகுந்த மாதிரி ஒரு குறிப்பை தந்திருக்கீங்க. கசப்பு,இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் எல்லாம் கலந்து. என்ன ஒண்ணு துவர்ப்பு தான் மிஸ்ஸிங் ;) நீங்க குறிப்பை அனுப்பும் போதே எனக்கு வாசனை இங்கே வந்துடிச்சே.. ஆனா பாகற்காய் தான் இல்ல ;( அதனால செய்ய முடியல. பாகற்காயை வெறும் வறுவல், பொரியல் மாதிரி தான் செய்திருக்கேன் ஜெய். உங்களோட இந்த குறிப்பு புது முறையில் இருக்கு. நிச்சயம் செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் பா :) தொடர்ந்து வாங்க குறிப்பு தர.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சூப்பர்!!! கசப்பான பாகற்காய் கூட நீங்க செய்திருக்குறதை பார்த்தா சுவையா இருக்கு!!! அருமையான குறிப்பு. அவசியம் செய்துட்டு சொல்றேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெய்,
எப்படி இருக்கீங்க?தேங்காய்,கரம் மசாலா எல்லாம் போட்டு பாகற்காய் குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு.அடுத்தமுறை பாகற்காய் வாங்கும்போது உங்க குழம்பு தான் செய்யணும்.தொடர்ந்து படங்களுடன் குறிப்புகள் அனுப்பி,இதுபோன்ற நல்ல குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்,ஜெய்.

துவர்ப்புதான் மிஸ்ஸிங்கா... கவலைய விடுங்க நாளைக்கே புளியங்கொட்டையில ஒரு துவையல் பண்ணி காங்கோக்கு பார்சல் பண்ணிடறேன்..ஓகேவா;-))

பாராட்டுக்கு நன்றி ;) நிச்சயம் செய்து பாருங்க;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி வனி;) அவசியம் செய்துட்டு சொல்லுங்க;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி அன்பு;) உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகம் தருது;) முடிஞ்சவரைக்கும் நல்ல குறிப்பா தர முயற்சிக்கிறேன்;)) வாழ்த்துக்களுக்கு நன்றி;-)

Don't Worry Be Happy.

ஜெயா வாழ்த்துகள் பா நாங்க புளி வெல்லம் சேர்த்து செய்யமாட்டோம் பா தொக்கு தான் வைப்போம் இல்லனா நல்லா சுருள ப்ரை பண்ணுவோம் பா இதும் நல்லாயிருக்கும்னு நம்புறேன் ட்ரை பண்ணி பாக்கறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிமா;) நம்பிக்கை கை விடாது...நல்லாவேஇருக்கும் அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க;-))

Don't Worry Be Happy.

குழம்பு சூப்பர் பா எனக்கு பாகற்காய் பிடிக்கும் செய்துட்டு பதிவு பொடுறேன் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?குறிப்பை தொடர்புக்கு என்ற பகுதியில் அனுப்பினீங்களா?எனக்கு அட்மின் அண்ணாவோட மைல் ஐடி தர முடியுமா?

மிக்க நன்றிபா;-)

யாரும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்பறதா இருந்தா குறிப்புகள் எழுதி படங்களோட அட்மினுக்கு மெயில் பண்ணுங்க.

இல்லை குறிப்பு மட்டும் வழங்குவதா இருந்தா இரண்டு மூணு ரெசிப்பி மட்டும் எழுதி மெயில் பண்ணுங்க போதும். பிறகு அவங்க உங்க பக்கத்திற்கு அதாவது., விருப்பமான குறிப்பு, விளக்கப்படகுறிப்புகள் இருக்குல்லையா அங்க குறிப்பு சேர்க்கன்னு இன்னொன்னும் சேர்த்து வரும் அதில நாமளே சேர்த்திக்கலாம்.

அட்மின் மெயில் ஐடி: arusuvaiadmin@gmail.com

வேறு எதாவது தகவல் வேணும்னாலும் கேளுங்கபா தெரிஞ்சா சொல்றேன்பா;-)

Don't Worry Be Happy.

எனக்கு பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி பா வேர எதும் இல்ல இருந்தா கண்டிப்பா கேட்கிறேன்

Naan arusuvaiku puthiya varugai. Ungal paagarkai kulambu indru seithen en kanavar Kerala kulambu pole ullathu endru solli virumbi sappitar. Ungalin intha kuripirku nanri!!!!!

Hi,you gave nice recepie.i like this so much.congrats.

பாகற்க்காய் குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது. மிகவும் பிடித்திருந்தது. நன்றி தோழி

Dreams Come True..