உதுவுங்கள் அன்னை போன்ற தோழிகளே ...............

டியர் ஆல், எனக்கும் என் கணவருக்கும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இறுதியில் பெரிதாகி விட்டது. நான் இப்பொழுது 6 மாத கர்ப்பமாக உள்ளேன். வசிப்பது ஓமன் நாட்டில். டெலிவரி கு என் அம்மா வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று எனது மாமியார் திட்டவட்டமாக கூறிவிட்டார். என் அம்மா இறந்து பல வருடங்கள் ஆகிறது. அப்பா மற்றும் தம்பி தான் இருக்கிறார்கள். இதை அறிந்த என் அப்பாவும் நானும் மிகுந்த வேதனைக்கு உள்ளானோம். என் அப்பாவின் சகோதரிகள் இரண்டு பேர் உள்ளனர். அவர்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீ வந்து விடு என்றனர், அப்பாவும் இந்த தகவலை என் புகுந்த வீட்டில் சொல்ல, எனது மாமியார் அதற்கும் தடை விதிக்கிறார். மேலும் என் அப்பாவையும் அவமான படுத்தி அனுப்பி இருக்கிறார்கள்.எனக்கு அம்மா இல்லை என்பதயும் எல்லா வற்றிற்கும் சொல்லி காட்டுகின்றனர்.
இதை நான் என் கணவரிடம் கேட்க, அவர்கள் செய்தது சரியே என்பது போல் பேசுகிறார். இதில் எனக்கு வருத்தம் என்னவெனில், குழந்தை பேரு இல்லாத பெண்களை தேடி பிடித்து அவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து டெலிவரி ஆகும் வரை கூடவே இருந்து கவனிக்கும் ஒரு வேலையை சேவையாக செய்து வருபவர் எனது மாமியார். அப்படி இருக்கையில் அவர்களது முதல் குடும்ப வாரிசை சுமக்கும் என்னை கவனிக்க இயலாதாம். தற்போது இனி என் அப்பாவின் உறவையும் துண்டிக்க சொல்லி வற்புறுத்தி, என்னிடம் சத்தியம் வாங்கி கொண்ட பிறகே பேசுகிறார்கள். என் கணவரும் இதற்கு சரி என்பது எனக்கு வேதனையாக உள்ளது. இதனால் எனக்குஉடல்
மற்றும் மன உளைச்சல், தூக்மின்மை உள்ளது. பொதுவாக இப்படி இருப்பது கருவில் இருக்கும் என் சிசுவிற்கும் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி சமாதான படுத்தி கொண்டாலும் எனக்கு வெறுமையாக இருக்கிறது.இறுதியில் எனக்கு எங்கே டெலிவரி என்பதே புரியாத நிலை. அப்படியே என் புகுந்த வீட்டிற்கு சென்றாலும் மாமியாரை நினைத்தால் பயமாக உள்ளது. நீ வா அப்புறம் உனக்கு தெரியும் நான் எப்படி பார்த்து கொள்கிறேன் என்று வில்லத்தனமாக என்னிடமே கூறுகிறார்.
இதில் இருந்து விடுபட நான் என்ன செய்வது, உதுவுங்கள்.

ஓமனில் கணவர் அருகில் இருங்கள்அல்லதுஉங்களது மாமியார் வசம் செல்வதே நல்லது உங்களது மமியார் மீதே நம்பிக்கை வையுங்கள் குற்றம் பாற்கின் சுற்றம் இல்லை மற்றும் தூக்கி எடுக்க வைக்க இருக்கும் போது நாளடைவில் பாசம் நேசம் வலுப்பெறும் தாயார் இல்லாத பட் சத்தில் கணவர் மாமியார் வசம் பொறுப்பை ஒப்படையுங்கள்

வாழக்கையின் அனுபவமும் ,முதிர்ச்சியும் உங்கள் பதிவில் தெரியுது ரபியத்துல் பசரியா.....மாமியாரா சொல்லிட்டாங்களா விட்ற கூடாது என்று தான் வரும் இளரத்தங்களின் பதில்

ஹாய் தோழி கவலை படாதீங்க எல்லாம் நல்லதுக்கு தான்
இப்போ மட்டும் உங்க வீட்டுகாறர் பேச்சை கேட்டுட்டீங்கன்டா [[[[ பிடிக்கலைன்டாலும்]]]]அப்பறம் குழந்தை பெத்த பிறகு எப்போதுமே உங்க வீட்டுக்காறர் உங்க பேச்சைத்தான் கேப்பார் இது முற்றிலும் உண்மை
மாமியார் பேசுரதை ஒரு விசயமாவே எடுத்துகிராதீங்க உங்க பொருமை அவுங்களூக்கு இழப்புதான் ஆக மொத்தத்தில் சகோதருயாவே நினைத்து சொல்ரேன் ரெம்ப ரெம்ப ரெம்ப பொருமையா இருங்க கோவத்தோடு எந்திரிக்கிரவன் தோல்வியோடுதான் உக்காருவான் இது ஒரு பழ மொழி எங்கே பிறசவம் பாக்கன்ம்ன்னு நீங்க் சொல்ரிங்களோ அங்கேயே பாப்போம் என்று சோல்லிருங்க

எல்லாம் நன்மைக்கே என்று மனதில் அடிக்கடி சொல்லிக்கங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அன்பு தோழி,, நலமா இந்த நேரத்தில் கணவரின் அன்பு மிக அவசியம். அவர்கள் போக்கிலேயே சென்று குடுப்ப பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ளவும். அதேநேரம் உங்கள் தந்தையிடமும் பேசிக்கொள்ளவும்

மேலும் சில பதிவுகள்