காப்பர்-டி அல்லது மாத்திரை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் please

எனக்கு 1 வயது மகன் இருக்கின்றான். நான் அடுத்த குழந்தை பிறப்பை தள்ளி போட மருத்துவர் அலோசனை படி ovulac-ld கருதடை மாத்திரை போடுகிரென், ஆனால் போட்ட உடன் வயறு வலிக்கிறது,இதனால் ஏதும் பக்கவிளைவு ஏற்படுமா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் please.

இல்லை எனில் காப்பர்-டி போடலாமா, ஆனால் நான் துபாய்-ல் இருக்கின்றேன் இங்கு போட முடியுமா என தெரிந்தவர்கள் சொல்லுங்கள் please.

யாரவது பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களென் தோழிகளே please.
help me ....

hai, i dont know tablet.but copper-t is the best, but copper-t not compfort all person,so please consult Dr.

அங்க போட மாட்டாங்கன்னு நினைக்கிரேன் இங்கு மல்டிலோட் காப்பர் டி போட்டால் 3 அல்லது 5 வருடம் பிரச்சனை இல்லை அனால் நான் சொல்வது என்னன்னா அடுத்தடுது குழந்தை பெற்றுக்கொள்வது நலம் மாத்திரை சைட் எபெக்ட் ஏதும் இருக்கலாம்

தோழி உங்க பெயர் சரியா?

மாத்திரை:

1. நிச்சயம் நீண்ட பயன்பாட்டில் உடலுக்கு கெடுதல் தரும்.

2. ஹார்மோன் பிரெச்சனை ஏற்படும், கூடவே அடுத்த குழந்தை உண்டாகும் போது பாதிப்புகள் ஏற்படலாம்.

3. கூடவே வலி இருக்குன்னு சொல்றீங்க... அதை உங்க மருத்துவரிடம் சொல்லுங்க. மருந்தை மாற்றலாம் அல்லது நிறுத்திவிட்டு வேறு வழி பார்க்கலாம்.

காப்பர் - டி:

1. பல விதமா இருக்கு. 3 வருடம், 5 வருடம், 10 வருடம் கூட மாற்றாம பயன்படுத்த கூடிய வகைகள் உண்டு.

2. ஆனா இவை எல்லார் உடலுக்கும் ஒத்துவராது.

3. சில நேரம் இதை பயன்படுத்தும் போது அந்த நாட்களில் ஓவர் ப்லீடிங் ஏற்படலாம்.

4. சிலருக்கு ப்லீடிங் நிக்காம போகவும், வயிற்றில் வலி ஏற்படவும் செய்யலாம்.

5. சிலருக்கு தொந்தரவே இல்லாத நல்ல கருத்தடை சாதனமாவும் இருக்கும். அப்படி உங்க உடலுக்கு ஒத்துகிட்டா இது ரொம்ப சேஃப்... சைடெஃபெக்ட்ஸ் இல்லாதது.

6. 1 அல்லது 2 வருடம் தள்ளி போட நினைச்சா 3 அல்லது 5 வருடம் வரை மாற்றாம இருக்க கூடிய வகையை போட்டு 1 வருடம் முன்பாகவே எடுத்துவிடுவது நலம். காரணம் இவை 5 வருடம் மாற்ற தேவை இல்லை என்று சொல்லும் வகை கூட 3 வருடத்துக்கு மேல் சில சின்ன சின்ன பிரெச்சனைகளை கொடுக்கும் என சொல்கிறார்கள். சற்று முன்பாகவே மாற்றி விடுவது சரி.

இது எனக்கு முதல் குழந்தை பிறந்த போது மருத்துவர்கள் சொன்னது... மற்றபடி எனக்கு இதை பற்றி வேறு தகவல் தெரியாது. எதுவாக இருந்தாலும் உங்க மருத்துவர் ஆலோசனைபடி செய்யுங்க. காரணம் அவங்களூக்கு உங்க தேவையும், உங்க உடல் நிலையும் தெரியும். எதுவா இருந்தாலும் உங்க உடம்புக்கு ஏற்றபடி ஒரு வழியை தேர்வு செய்யுங்க... அடுத்தடுத்து குழந்தை நின்னா, அது உங்க ஆரோக்கியத்துக்கும் நல்லதில்லை, பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி giriamu நானும் காப்பர்-டி தான் best என நினைக்கிறேன். அடுத்த முறை இந்தியா போகும் போதுதான் doctor-ஐ consult பன்னனும்.

நன்றி Rabiathul Basariya.அடுத்தடுது குழந்தை பெற்றுக்கொள்வது நலம் தான் ஆனால் உதவிக்கு யாரும் இல்லை மாமியார் உடல் நலம் சரில்லாதவர். எங்கள் வீட்டில் அன்னி இப்பொழுதுதான் கர்ப்பமாக உள்ளார் அதனால் அம்மாவால் வர இயலாது அதனால் தான் atleast 2 years pospond பன்ன முடிவெடுத்தேன். அடுத்த முறை இந்தியா போகும் போதுதான் காப்பர் டி போட doctor-ஐ consult பன்னனும்.

என் பெயர் சரி தான் வனிதா அக்கா

எனக்கும் மாத்திரை சாப்பிட ரொம்ப பயமாகதான் இருக்கு

நானும் மருந்தை நிறுத்திவிட்டு காப்பர் டி போடலாம் என நினைக்கிறேன்.

அடுத்த முறை இந்தியா போகும் போதுதான் காப்பர் டி போட doctor-ஐ consult பன்னனும்.

அப்படி போட்டால் அது எனக்கு ஒத்துக்கொல்லுமா எனவும் அப்படி ஒத்துக்கொல்ல வில்லை என்றால் இங்கு(dubai) check பன்னமுடியுமா என குழப்பமாக உள்ளது.

அப்படி என்னக்கு எதாவது உடல் நிலை சரில்லை என்றால் உதவ கூட குழந்தை-ஐ பார்த்து கொள்ள கூட இங்கு யரும் இல்லை அக்கா, அதனால் தான் இவ்வல்லவு பயம்.

தோழி நானும் துபாய்ல தான் இருக்கேன் இங்கயே போடலாம்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

உண்மையாகவா ரிஸானா , நீங்கள் அளித்த பதிலை பார்த்த பின் தான் நிம்மதியாக உள்ளது.
நான் குழந்தை பிறப்பை தள்ளி போடும் கட்டாயத்தில் உள்ளேன்.
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
மேலும் விவரம் தெரிந்தால் சொல்லுங்லேன் please.
நான் sharjah-ல் உள்ளேன் நீங்கள் எங்கு உள்ளீர்கள்.

நான் dubai international city laஇருக்கிறேன் எனக்கும் 8 மாத குழந்தை உள்ளது டாக்டரிடம் கன்ஸல்ட் பன்னினப்ப gynocologist சென்று போடலாம் என்று சொன்னார் இன்னும் போடவில்லை

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மேலும் சில பதிவுகள்