புறா-விபரம்

புறா

உயிரின வகைப்பாடு
திணை:(இராச்சியம்):விலங்கினம்
வகுப்பு : பறவைகள்
குடும்பம்:கொலம்பிடே (Columbidae)

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 300 வகை இனங்கள் உள்ளன. புறாக்கள் உலகெங்கிலும் உள்ளன என்றாலும், இந்தியா, மலேசியா, இந்தோனீசியா முதலிய தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.

இது தானிய வகைகளை மட்டும் உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது என்றும் சொல்லப்படுவதுண்டு. இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுபெரியவை.

மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்களே பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன

மேலும் சில பதிவுகள்