பட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது?

”திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா?பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?”

நல்ல தலைப்பு,அதுவும் இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் வாதிட வேண்டிய தலைப்புன்னு தோணிச்சு அதான் நம்ம தோழியரிடமிருந்தும் நிறைய வாதங்கள் வருமென்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளேன்..

தலைப்பை தந்த தோழி சுபாவிற்கு மிக்க நன்றி.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

முதன் முறையாக நான் பட்டியை நடத்த திட்டமிட்டுள்ளேன்..அனைவரும் கலந்துக்கொண்டு பட்டியை சிறப்பாக நடத்த உதவவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..அதேபோல்...எதேணும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுமாறும்,பொருத்தருள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

வாங்க லேட்டா வந்தாலும் வெயிட்டான தலைப்போடு வந்திருக்கேன்..எல்லோரும் வந்து கலக்குங்க..

இதுவும் கடந்துப் போகும்.

இதில் ஆண்கள் கலந்து கொள்ளலாமா?

Deepan

ஆஹா நம்ம தோழிகள் எல்லாரும் சேர்ந்து ? சண்டைபோட சரியான தலைப்புதான்;-)

அஸ்வினி தலைப்பு கொடுத்தவங்க பேரு சுபா நீங்க அவங்க ஐடி பேரைக் கொடுத்திருக்கீங்க..மாத்திருங்க

அருமையான தலைப்பு கொடுத்த சுபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்;)
பட்டியைத் திறம்பட நடத்த நடுவருக்கும் வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

இது என்ன கேள்வி?நீங்கள் தாராளமாக கலந்துக்கொள்ளலாம்..
இங்கு அறுசுவையில் ஆண்கள்,பெண்கள் என்று எந்த பாகுப்பாடும் கிடையாது அனைவரும் சகோதர,சகோதிரிகளாகவும் நல்ல நண்பர்களாகவும் ஒரே குடும்பத்தில் பழகிகொண்டிருக்கிறோம்...
உங்கள் வாதங்களை எதிர்பார்க்கிறேன்...

இதுவும் கடந்துப் போகும்.

ரொம்ப நன்றி ஜெயா..

பேரை மாத்திட்டேன்..ரொம்ப தாங்க்ஸ்..

உங்கள் வாதங்களை எதிர்ப்பார்க்கிறேன்..

இதுவும் கடந்துப் போகும்.

Ladies first. . .

Deepan

நடுவர் அவர்களே, கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று பெரியவங்க சொல்லுவாங்க. அதனால் திருமணங்கள் தோற்க்ககூடாது என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும். இருந்தாலும் வாதம் என்று வந்தபின்னே இரண்டு திருமணங்களையும் அலசி ஆராய்ந்து பார்த்ததில் காதல் திருமணங்களே அதிகம் தோற்றுபோகின்றன என்பதே என் வாதம். நன்றி.

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்..முதலில் வந்ததற்கு பாராட்டுக்கள்..மீண்டும் வாதங்களுடன் வருவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்..

இதுவும் கடந்துப் போகும்.

ஹலோ நடுவர் அஸ்வினி அவர்களுக்கு வணக்கம்...நல்ல தலைப்பு...திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பார்கள்...காதல் திருமணங்களை விட நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே சமீப காலங்களில் அதிகமாக தோல்வி அடைவதாக என் எண்ணம்....இந்த தலைப்பில் வாதாட தகுந்த வாதங்களுடன் விரைவில் வருகிறேன்...

நடுவர் அவர்களே! இந்த நூற்றாண்டில்
காதல் திருமணங்களை விட, நிச்சயக்கபட்ட திருமணங்களே அதிகம் முறிவு பெறுகின்றன என்பது என் கருத்து.... இருவரும் மணதலவில் ஒன்றாகி, காதல் என்னும் உன்னதமான உணர்வில் ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுகொடுத்து வாழும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அரவணைப்பும் மேலோங்கி நிற்கும், இவையெல்லாம் நிச்சயக்கபட்ட திருமணத்தில் இல்லை என்று சொல்லவில்லை, குறைவு என்பதே என் வாதம்,

Deepan

மேலும் சில பதிவுகள்