பட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது?

”திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா?பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?”

நல்ல தலைப்பு,அதுவும் இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் வாதிட வேண்டிய தலைப்புன்னு தோணிச்சு அதான் நம்ம தோழியரிடமிருந்தும் நிறைய வாதங்கள் வருமென்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளேன்..

தலைப்பை தந்த தோழி சுபாவிற்கு மிக்க நன்றி.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

வணக்கம் அஸ்வினி நான் காதல் திருமணமே தோற்றுபோதுனு பேச வந்திருக்கேன் பா தோழிகள் சொன்னது போல காதலிக்கும் போது ஒருவரோட குறை மத்தவங்களுக்கு தெரியாது தெரிந்தாலும் காதலுக்காக விட்டுகொடுப்பார்கள் ஆனால் அதுவே திருமணத்திற்கு பிறகு அந்த குறை தெரிந்தால் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே வேலையில்லை போட்டி மனப்பான்மையே மேலோங்குகிறது அந்த காரணத்தால் அதாவது போட்டிமனப்பான்மையில் பிரிந்த குடும்பமும் அதிகம் நடுவரே அதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன் நிறைய வாதத்துடன் வருகிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பட்டியின் நடுவர் அஸ்வினிக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் பட்டியில் வாதிடுவது இதுவே முதல் முறை.
கருத்து வேருபாடு என்பது எல்லோருக்கும் வரும் வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் நீயே தேர்ந்தெடுத்த வாழ்க்கையாச்சே இப்போ என்ன குறை சொல்கிறாய் என்ற பல கேள்விகள் எழும் என்பதால் காதல் திருமனம் முடித்தவர்கள் தங்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அதை தங்களுக்குள்ளாகவே முடித்துக் கொள்வார்கள் இதனால் அவர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகம் வளருகிறது ஆனால் நிச்சயித்த திருமனத்தில் சின்ன பிரச்சனைக்கெல்லாம் கோவித்து கொண்டு அம்மா வீட்டிற்கு செல்லும் பெண்களையும், ஏதாவது தவரு செய்யும் போது மாமியார் மருமகளை மகனிடம் குறை சொல்லும் போது நீ பார்த்த பெண் தானே என்று சண்டை போட்டுக்கொள்வதும் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது இங்கிருந்தே அவர்களது தாம்பத்யத்தில் விரிசல் ஆரம்பிக்கிறது.........
எனவே அதிகம் தோற்பது நிச்சயித்த திருமனம் தான் என்று கூரி இந்த விவாதத்தை முடிக்கிறேன் இன்னும் தொடரும்....

காதலித்து திருமணம் செய்பவர்கள், எல்லாமே அவசர அவசரமாகவே தான் செய்கிறார்கள்... பெற்றோரை எதிர்த்து அவசரமாகவும் ஆசையாகவும் கல்யாணம் முடித்து பிறகு அவர்களுக்குள் கருத்து வீர்பாடு வரும்போது புத்திமதி சொல்ல்வதற்கும் ஆறுதல் சொளுவதற்கும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கும் அறிவுரை சொல்வதற்கும் பெற்றோர் வருவதில்லை... ரெண்டு பேருக்கும் இடையில் ஈகோ தான் முத்தி போகும் இறுதியில் திருமண வாழ்க்கை கசந்து விடுகிறது....தொடரும்...

அன்புடன் அபி

காதலித்து திருமணம் செய்பவர்கள், எல்லாமே அவசர அவசரமாகவே தான் செய்கிறார்கள்... பெற்றோரை எதிர்த்து அவசரமாகவும் ஆசையாகவும் கல்யாணம் முடித்து பிறகு அவர்களுக்குள் கருத்து வீர்பாடு வரும்போது புத்திமதி சொல்ல்வதற்கும் ஆறுதல் சொளுவதற்கும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கும் அறிவுரை சொல்வதற்கும் பெற்றோர் வருவதில்லை... ரெண்டு பேருக்கும் இடையில் ஈகோ தான் முத்தி போகும் இறுதியில் திருமண வாழ்க்கை கசந்து விடுகிறது....தொடரும்...

அன்புடன் அபி

இப்பத்தான் களை கட்டியிருக்கு போல..பேஷ்..பேஷ்..

ப்ரியா:அதிகம் தோற்பது காதல் திருமணம்னு சொல்றீங்க..இன்னும் வாதங்களுடன் வரவும்...

வசந்த்:வாங்க...பட்டிக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்..
”இதனால் வாழ்க்கையில் பிரச்சனை தோற்றுவிக்கப்படுகிறது.”
பிரச்சனை எல்லா திருமணங்களிலும் தானே இருக்கிறது-அப்படின்னு எதிரணி கேக்கறாங்கப்பா...பதில் சொல்லுங்க...

அபி:வாங்க..ரொம்ப தாங்க்ஸ் (எல்லாரையும் பட்டிக்கு கூப்பிட்டதுக்கு)..
“திருமணதிற்கு பிறகு இதே பொயை சலிப்பாகவும் வெறுப்பாகவும் தான் எடுத்துகொள்கிறார்கள்...”
அதை ரொம்ப சலிப்பா சொல்றீங்க போல..எப்படி இப்படி எல்லாம்?

இதுவும் கடந்துப் போகும்.

பார்த்திருக்கலாம் அங்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிகம் காணப்படும் குறையவே குறையாது அப்படி இருந்தால் மட்டுமே நம் முந்தைய தலைமுறையில் அதிகளவில் கூட்டுகுடும்பங்களும் இருந்தன பல தனிக்குடும்ப தம்பதிகளும் பிரியாமல் வாழ்ந்தனர் இதை மறுப்பதற்கு யாராலும் முடியாது ஆனால் இன்று வளர்ந்து வரும் காதல் திருமணங்கள் பலவும் 6 மாதமோ 1 வருடமோ மட்டுமே நிலைக்கிறது அதிகபட்சம் 5, 6 வருடங்களே நீடிக்கும் காதல் திருமணத்தில் கவர்ச்சிக்கே முக்கியத்துவம் அதிகம் தரப்படுவதாக தெரிகிறது என் காதலி காதலன் அழகானவன் என்ற காரணத்தில் மட்டுமே திருமணம் செய்கின்றனர் எதிரணியினர் கேட்கலாம் இதே கருத்தை நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் அழகை பார்ப்பதில்லையா என அழகையும் பார்கிறார்கள் ஆனால் அழகை மட்டும் பார்த்து திருமணங்கள் செய்வதில்லை தன் மனைவி அழகானவலில்லை என்ற காரணத்தால் அந்த திருமணம் நிலைக்கமால் போவதும் இல்லை ஆனால் காதல் திருமணத்தில் சிறிம பிரச்சனை வந்தாலும் அது பெரிதாகி விவகாரத்து வரை போகிறது ஏனெனில் அங்கு கவர்ச்சியே மேலோங்குகிறது அன்பு பாசம் பணிவு விட்டுகொடுத்தல் இன்னும் பல குணங்கள் மேலோங்கி வர வாய்ப்பே கிடைப்பதில்லை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு:வாங்க வாங்க..நீங்களும் பட்டியில் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி..
“விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே வேலையில்லை போட்டி மனப்பான்மையே மேலோங்குகிறது ”
ரொம்ப தீர்மானமா இருக்காங்க போல விட்டுக்கொடுக்க கூடாதுன்னு..

மெர்சானா:வாங்க..சேம் பின்ச்..எனக்கு நடுவரா முத்ல் முறை உங்களுக்கு வாதியா முதல்முறை...
“இதனால் அவர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகம் வளருகிறது”
ஆனா எதிரணி போட்டிமனப்பான்மைதான் வளருதுன்னு சொல்றாங்க..வாங்க வாங்க வந்து விளக்கம் சொல்லுங்க

அபி:ரெண்டு தடவை பதிவு போட்டாலும் நான் ரொம்ப ஸ்ட்ராங்..ஆலோசிச்சுதான் முடிவு சொல்லுவேன்..சொல்லிட்டேன்..
”ரெண்டு பேருக்கும் இடையில் ஈகோ தான் முத்தி போகும்”
விட்டுக்கொடுத்தல் மட்டும்தான் இருக்கும்னு சொல்றாங்கப்பா...என்னன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க.

இதுவும் கடந்துப் போகும்.

பார்த்திருக்கலாம் அங்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிகம் காணப்படும் குறையவே குறையாது அப்படி இருந்தால் மட்டுமே நம் முந்தைய தலைமுறையில் அதிகளவில் கூட்டுகுடும்பங்களும் இருந்தன பல தனிக்குடும்ப தம்பதிகளும் பிரியாமல் வாழ்ந்தனர் இதை மறுப்பதற்கு யாராலும் முடியாது ஆனால் இன்று வளர்ந்து வரும் காதல் திருமணங்கள் பலவும் 6 மாதமோ 1 வருடமோ மட்டுமே நிலைக்கிறது அதிகபட்சம் 5, 6 வருடங்களே நீடிக்கும் காதல் திருமணத்தில் கவர்ச்சிக்கே முக்கியத்துவம் அதிகம் தரப்படுவதாக தெரிகிறது என் காதலி காதலன் அழகானவன் என்ற காரணத்தில் மட்டுமே திருமணம் செய்கின்றனர் எதிரணியினர் கேட்கலாம் இதே கருத்தை நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் அழகை பார்ப்பதில்லையா என அழகையும் பார்கிறார்கள் ஆனால் அழகை மட்டும் பார்த்து திருமணங்கள் செய்வதில்லை தன் மனைவி அழகானவலில்லை என்ற காரணத்தால் அந்த திருமணம் நிலைக்கமால் போவதும் இல்லை ஆனால் காதல் திருமணத்தில் சிறிம பிரச்சனை வந்தாலும் அது பெரிதாகி விவகாரத்து வரை போகிறது ஏனெனில் அங்கு கவர்ச்சியே மேலோங்குகிறது அன்பு பாசம் பணிவு விட்டுகொடுத்தல் இன்னும் பல குணங்கள் மேலோங்கி வர வாய்ப்பே கிடைப்பதில்லை அங்கும் ஈகோ பிரச்சனையே தலைதூக்குகிறது இதே இன்றைய நிலை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மெர்சானா...வா...என் பக்கம் ஆள் இல்லையேனு நினைத்தேன்...நீ வந்து விட்டாய்...காதல் திருமணத்தில் ஒருவருக்கொருவர் தாமே திருமணம் செய்து கொண்டதால் விட்டுக்கொடுத்து வாழ முயற்சிக்கின்றனர்.... ஆனால் நிச்சயித்த திருமணங்களில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை...ஆண் திமிராக 'நீ இல்லாவிட்டால் இன்னொருத்தி' என்ற எண்ணமும், பெண்ணுக்கோ 'எனக்கு என் பிறந்த வீடு இருக்கிறது, நான் சம்பாதிக்கிறேன்...நான் எதற்கு உனக்கு அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்'என்ற எண்ணமும் இருப்பதால் விவாகரத்திற்கு தயாராகி விடுகின்றனர்...
ஒரு பக்கம் நிச்சயித்த திருமணங்கள் பெரியோர்கள் தலையீட்டால் தோற்றுப்போகின்றன...அடுத்த பக்கம் கணவன், மனைவிக்குள் என்ன ப்ரச்னை என்பதே வெளியில் தெரியாததால் ஏற்படும் பிரிவினை....தம்பதிகளுக்குள்ளேயே ஈகோ, விட்டுக்கொடுக்காமை, தன் இஷ்டப்படி நடந்துகொள்ளும் மனோபாவம் இவற்றால் இருவருக்குள்ளும் வரும் கருத்துவேறுபாடு பூதாகாரமாகி கடைசியில் யார் சொல்வதையும் கேட்காமல் பிரிவினை....இவை நடப்பது அரேஞ்ச்ட் மேரேஜ்களில் மட்டுமே...

என்ன பேச்சே காணோம்...
நீங்க எதாவது சொன்ன தானா பா... நாங்களும் யோசிப்போம்... எவ்ளோ நேரம் ஒரே அணியினர் பேசிட்டு இருக்குறது...

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்