பட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது?

”திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா?பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?”

நல்ல தலைப்பு,அதுவும் இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் வாதிட வேண்டிய தலைப்புன்னு தோணிச்சு அதான் நம்ம தோழியரிடமிருந்தும் நிறைய வாதங்கள் வருமென்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளேன்..

தலைப்பை தந்த தோழி சுபாவிற்கு மிக்க நன்றி.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

நடுவரே!

நடுவரே நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் புரிந்துகொள்ள அவகாசம் இல்லை என்பது போல் எதிரணியினர் சித்தரிகின்றனர். காதல் திருமணத்தை விட நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலேயே கணவரைப் பற்றி மனைவியோ அல்லது மனைவி பற்றி கணவரோ அதிகளவில் புரிந்து கொள்ள முடிகிறது. நடுவரே திருமணம் முடிந்து அடுத்தடுத்து வரும் உறவினர் வீட்டு விருந்துகளே போதும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் புரிந்துகொள்ள;)

எந்த உணவு பிடிக்கும் எது பிடிக்காது என்பதில் இருந்து வீட்டிலும் வெளியிலும் உள்ள பழக்கவழக்கம், மற்றவரிடம் அணுகும்முறை என்பதிலிருந்து உறவினர்கள் அவருடன் எப்படி பழக வேண்டும் ,எப்படி ப்ரச்சனையான சமையத்தில் சுமூகமாக கையாள்வது என்பது பற்றி டெக்னிக்கூட சொல்லிக்கொடுப்பர்.

இதோ இவனுக்கு கோபம் மூக்குக்கு மேல வரும் அப்ப அமைதாயாதன் இருப்பான், அதப்பாத்து புரிஞ்சு நடந்துக்கோ. காரம் பிடிக்காது, பருப்பு பாயசம் வச்சு கொடுத்தராத அது சுத்தமா பிடிக்காது. இன்னும் எவ்வளவோ விசயங்களை ஆறு மாதம் கூட இருந்து புரிந்து கொள்ள வேண்டிய விசயத்தை ஒரே மாதத்தில் சொல்லிக்கொடுத்துருவாங்க. பத்தாதற்கு அவரிடம் மாற்றவேண்டிய குணங்கள் என்ன எனபதையும் சொல்லிக்கொடுது மெல்ல மெல்ல அந்த குணத்தில் இருந்து மாற்ற முயற்சி செய் என்பதுவரை பல தகவல்கள் கிடைச்சுடும்.

நடுவரே!

திருமணமான தம்பதிகள் மூணு மாதம் அல்லது ஆறுமாதம் வரை தன்னைவிட சிறந்த தம்பதியினர் உலகில் யாரும் இல்லை என்ற எண்ணெத்தில் மிதந்தால் கூட அதற்கும் மேல் நாட்கள் செல்லும்போதுதான் ஈர்ப்பு குறையும்போதுதான் பிறரிடம் உள்ள சிறு குறைகள்கூட பூதாகரமாக தலைதூக்கும்.அதுல ரொம்ப பெரிய ப்ரச்சனை ஒண்ணு சமையல். என்னதான் ஸ்டார் ஹோட்டல் சமையல் சமைத்தாலும் அது தன் அம்மா கைபக்குவம் போல இல்லை என்றால் அங்கே ப்ரச்சனைதான். இந்த தாளிதம் இப்படி வரக்கூடாது, இந்த மோர்குழம்பு என்ன இப்படி கெட்டியா இருக்கு, இந்த முட்டைக்கோஸ்ல என்ன கலர் இப்படி இருக்கு இந்த தயிர் என்னது.., இந்த காபி என்னதுன்னு ஒவ்வொன்னுக்கும் அம்மா ருசியே எதிர்பார்க்கும்.

இப்படி மிகப்பெரிய ப்ரச்சனை ஆன இந்த சமையல் விசயத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மிகப்பெரிய சாதகமே இவங்க மாமியாரோட தொடர்பில் இருக்கிறதுதான். ஒன்னு கூட்டு குடித்தனமா இருந்தா குடும்பத்தோட சமையல்ல இரண்டு மாசத்திலேயே நல்லா கைதேர்ந்திடுவாங்க. இல்லைனாலும் பரவாயில்லை ஃபோன் போட்டாவது கேட்டு தெரிஞ்சுடுவாங்க. இன்னும் சொல்லப்போனா மாமியாரே முன்ன வந்து நீ இப்படி எல்லாம் சமைச்சிராத அவனுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு எங்க தன் மருமகள் மகனுக்கு பிடிக்காததை சமச்சிருவாங்களோன்னு பாத்து பாத்து சொல்லிக்கொடுப்பாங்க. இதைத்தான் எதிரணியினர் மாமியார்கொடுமைன்னு சொல்றாங்க;) இது மாமியார் கொடுமை இல்லைங்க. எல்லாம் மகன்மேல இருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. இந்தப்பாசம் மருமகளுக்கும் தன் மகன் மீது வரணும் என்கிற பாசம்.

நடுவரே!

பிரபலங்களின் காதல் திருமணத்தைப் பற்றி எதிரணியினர் சொல்றாங்க சூப்பர் ஸ்டார்., குப்புசாமி அப்புறம் தொலைக்காட்சி பிரபலங்களின் காதல் திருமணத்தப் பத்தி சொல்றாங்க. பொதுவா திரையில் நடிப்பவருக்கு பொண்ணக்கொடுக்கவே பலரும் யோசிப்பதால் அவங்களுக்கு வேறு வழியில்லாமல் தாமாகவே பார்த்து திருமணம் செய்து கொள்றாங்களே ஒழிய..எல்லாரும் காதல் திருமணமே சிறந்ததுன்னு செய்யலை.

சரி சூப்பர் ஸ்டார் பத்தி சொன்னிங்க அவர் ஃப்ரெண்ட் உலகநாயகன் கமல்பத்தியும் சொல்லியிருக்கலாமே.
திருமணத்திற்கு பிறகு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு? அதுவும் காதல் திருமணத்தில் இருக்கே.. பிரபு தேவாவும் ரம்லத்தும் காதல் திருமணம்தான் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவங்க...பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட இன்னொருவரைத் தேடி ஓட வில்லையா?

காதல் தினத்தன்று தவறாமல் பேட்டி காணப்படும் ஜோடி., திருமணவிழாக்களில் அதிகம் எதிர்பார்க்கபடும் ஜோடி பார்த்தீபன் சீதா பிரிஞ்சிடலையா?

நடுவரே!

நிச்சயித்த திருமணத்தில் பிரிவிணை வரும்போது எதிரணியினர் சொன்னதைப்போல் ப்ரச்சனையைப்பேச உறவினர்கள் என்ன தெரிஞ்சவஞ்ககூட வருவாங்க. ஆனா காதல் திருமணத்தில் பிரிவிணைவந்தால் நல்லதாப்போச்சுன்னு விடற உறவினர்கள் என்ன வீட்டாரே அப்படிதான் நினைப்பாங்க.

எனவே நடுவரே இப்போது காதல் திருமணங்கள் கூட லவ் கம் அரேஞ்சுடுன்னு சொல்ற என்னதான் தான் காதலித்திருந்தாலும் இதில் பெற்றோரின் அனுமதியோடுதான் திருமணம் நடந்தது என்பதை பெருமையாக சொல்வதைதான் இன்றய காதல் தம்பதியினர் எண்ணுகின்றார்கள். அத்தகைய அரேஞ்சுடு மேரேஜ்...நிச்சயிக்கப்பட்ட திருமணமே அதிக அளவில் ஜெயிக்கிறது என்பதை கூறிக்கொண்டு எதிரணியினரின் அடுத்த அம்புகளையும் மடக்கி அதை அவரிடேம் திருப்பி அனுப்ப தயாராக வருகிறோம்;-)

Don't Worry Be Happy.

நடுவரே 4 நாளா உடல் சரியில்லாத காரனத்தால் பதிவிட முடில,அடேங்கப்பா........அதுக்குள்ள பார்த்தா இத்தனை பதிவு நாங்க எங்கயும் போகவில்லைனு கொஞ்சம் எதிரனியிடம் சொல்லுங்க நடுவரே.............
புலி பதுங்குவது பாய்வதற்கு தான்........
நடுவரே இவர்க்லெல்லாம் ஒரு விஷயத்தையே சுத்தி வருவதை பார்த்தா மிகவும் வேடிக்கையாக் இருக்கு பெற்றவர்கள் பெற்றவர்கள் என்று இதையே தான் சொல்கிறார்கள் முதலில் சுயமாக யோசியுங்கள் தோழிகளே
“என் வாதத்தை துவங்குகிறேன்”இதோ உங்க அனைத்து கேள்விகளுக்கும் என் பதில்......!
*விவாகரத்து என்பதில் மட்டும் ஒரு திருமனம் தோற்பதில்லை எப்போ கனவன் மனைவிக்கிடையே மூன்றாவதாக ஒரு நபர் வருகிறாரோ அப்போதே அந்த திருமனம் தோற்கிரது அது பெற்றோர்களாகவே இருந்தாலும் சரி.(அது எப்படி பா சண்டைனா உடனே அம்மா வீட்டுக்கு போவாங்களா உடனே அவங்க சமாதான படுத்துவாங்களா அப்புறம் சரியாயிடுமா இதென்ன பா விளையாட்டா)எத்தனையோ நிச்சயித்த தம்பதிகள் ஊருக்காகவும் கவுரவத்திற்காகவும்,பிள்ளைகளுக்காகவும்,மனம் ஒத்து போகாமல் ஏதோ இந்த பிள்ளைகளுக்காக் தான் பார்க்கிறேன் இல்லன்னா?ஏதோ ஊருக்காக தான் பார்க்கிறேன் இல்லன்னா? இவள எப்பவோ....? என்று அலுத்துக் கொண்டும் மனம் நொந்தும் சொல்லும் எத்தனையோ பேரை பார்க்கிறோம் பார்த்து கொண்டிருக்கிறோம்............
*இன்னொரு தோழி சொன்னார்கள் // நம்ம அப்பா அம்மா பெரியவங்க பார்த்து வச்சு தானே கல்யாணம் பண்ணிட்டாங்க. அதே மாதிரி தாத்தா - பாட்டி, கொள்ளு பாட்டி - தாத்தா இப்படி தலைமுறை தலைமுறையா பெரியவங்க பார்த்து வச்சு தான் மணம் முடிச்சிருக்காங்க.// இன்னும் கொஞ்சம் பின்னாடி போங்கப்பா காதல் தெய்வீகமானது “முருகர் வள்ளியை திருமனம் முடித்ததும்,கண்ணன் ராதையை செய்ததும் “காதல் திருமனம்” மன்னிக்கவும் எனக்கு இன்னும் உங்க கடவுள் பெயர் தெரியாததால் விட்டுப் போன தெய்வங்களை நீங்களே நினைத்துப் பாருங்கள்
அது மட்டுமல்ல முஸ்லிம்களும் கிருஸ்தவர்களும் சொல்லும் முதல் மனிதர்கள் ஆதாம் ஏவால் இருவருக்கும் ஏற்பட்டது காதல் தான் அது ஏற்படவில்லையென்றால் இன்று நாமெல்லாம் வந்திருக்கவே முடியாது காதல் தான் இறைவனால் ஏற்படுத்தப் பட்டது நிச்சயம் என்பது மனிதர்களால் தினிக்கப்பட்டது.எது சிறந்ததென்று நீங்களே முடிவு செய்யுங்கள் காதல் என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தை என்று நினைக்கிறார்கள் எதிரனியினர் அப்போ தெய்வங்கள் செய்த்ததையே தவரு என்கிறார்களா……………???????????????????
இன்னும் வாதங்களுடன் வருகிறேன் குரு இடைவேளைக்கு பிறகு

*நடுவரே இங்கு விவாகரத்து ஆன காதல் தம்பதிகளை சுட்டிக் காட்டினார்கள் எந்த விசயமாக இருந்தாலும் விளம்பரம் தான் ஒரு சின்ன விசயத்தை பெரிதாக கட்டுகிறது அது போல் ஒருவர் காதல் திருமனம் செய்து கொண்டால் இந்த உலகம் எப்போது அவர்களையே கவனித்து கொண்டும் அவர்களை பற்றியே பேசிக்கொண்டும் இருப்பதால் ஒரு சிலர் பிரிந்து செல்வதை பார்த்து விட்டு அதையே வருடக்கனக்காக பேசிக்கொண்டிருப்பதால் அதிகம் தோற்பது காதல் திருமனம் போல் தெரியும்.சினிமா உலகில் விவாகரத்தான் “சிலரை” சுட்டிக் காட்டினார்கள் ஜெயித்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்ரை நான் சொல்லவா சொல்ல ஆரம்பித்தால் இந்த பட்டியே போதாது
//இப்படி மிகப்பெரிய ப்ரச்சனை ஆன இந்த சமையல் விசயத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மிகப்பெரிய சாதகமே இவங்க மாமியாரோட தொடர்பில் இருக்கிறதுதான்.// என்னப்பா அபத்தமா இருக்கு அது தான் பா பிரச்சனைக்கே ஆரம்பம் மருமகள் எது செய்தாலும் குறை கூரி பிரச்சனையை அங்கேயே ஆரம்பித்து வைக்கிறார்கள்
எனக்கென்னவோ இவர்கள் தலைப்பை சரியாக் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது மாமியார் பிரச்சனையில் கொண்டுவந்து விட்டுட்டாங்க பா
*எதிரனியினர் சொன்னார் காதல் திருமனம் முடித்து தனியே இருப்பதால் ஆன்களுக்கு அதுவே சாதகமாக ஆகிவிடுவதால் கேட்க ஆள் இல்லை என்பதால் கொடுமை படுத்துகிறான் என்று அது தவறு பா “ தன் சொந்தம் பந்தம் வசதி அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு தனக்காக வருகிறாள் என்றதும் அவளை கண்னுக்குள் இமையாக வைத்து பார்த்து கொள்கிறான். தனித்து யாருடைய உதவியும் இன்றி வாழ்வில் வெற்றி பெருகிறான் “கடைகண் பார்வை தனில்.........................மன்னில் மாந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”
*இங்கு எத்தனை பேர் மாமியாரை புரிந்து கொள்கிறார்கள் காதல் திருமனம் முடித்து தனியா இருப்பவர்களுக்கு தான் உறவின் மதிப்பு தெரியும் ஒரு குழந்தை பிறந்த பிறகோ சில காலம் கழிந்த பிறகோ அந்த உறவுகள் வ்ந்து சேரும் போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் அதற்கு அவர்கள் செய்யும் மறியாதையும் அளவற்றது..........
*காதலை திரைப்படங்களில் கானும் போது ரசிக்கும் இவர்கள் தன் கண் முன் நடக்கும் போது அது தோற்று விடும் என்ற எண்ணத்தையே கொண்டுள்ளனர் இன்னும் எத்தனை படம் வந்தாலும் இவர்க்ள் மன்ம் மாருமோ என்பது சந்தேகமே......!
*இன்னும் எதிரனியின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தகுந்த பதிலடியுடன் வாதங்கள்.............தொடரும்............

நடுவரே!
எதிரணிதோழி சொன்னார்...கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவதாக ஒரு நபர் வருவதால் திருமணம் தோற்கிறது என்று.அந்த நபர் மாமியாராக இருந்தால்,பிரச்சனைகள் வருமே தவிர அந்த திருமணம் உடையாது.

ஆனால்,அந்த நபர் வேறொரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்தான் அந்த திருமணம் தோற்கிறது.அது காதல் திருமணமானாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் சரி.இந்த மாதிரி விஷயங்கள் அதிகம் நடப்பது காதல் திருமணங்களில்தான் நடுவரே.தன்னை காதலித்து மணந்து,இப்போ வேறொரு பெண்ணை தேடி செல்கிறானே என்று அந்த மனைவியும் மனமொடிந்து விடுகிறாள்.அவர்களின் மணவாழ்க்கையும் ஒடிந்து விடுகிறது.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இதுமாதிரி நடப்பது குறைவுதான்.எதிரணியினர் சொன்னது போல் ஊருக்காகவாவது ஒற்றுமையாக இருப்பார்கள்.

நடுவரே,
”பட்டியின் விதிமுறைகளில் மதம் சார்ந்த வாதங்கள் கூடாது” என்பதை எதிரணிதோழி கவனிக்கவில்லை போலும்.

நடுவரே!
எதிரணி தோழி கூறினார்...//இன்னும் எத்தனை படம் வந்தாலும் இவர்க்ள் மன்ம் மாருமோ என்பது சந்தேகமே......!//
பல சினிமாக்களில் காதலித்து திருமணம் செய்யும்வரை தான் காட்டுவார்கள்.அதன்பின்னர் அவர்கள் அந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை யாரும் சினிமாவாக எடுப்பதில்லை. இன்றைய இளைஞர்களின் மனதில் சினிமாதான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.சினிமாவைப்பார்த்து காதலிப்பவர்கள்...காதலில் வெற்றியடைந்த பின்னர் அந்த மண வாழ்க்கையை வாழத் தெரியாமல் உடைத்துவிடுகிறார்கள்... நடுவரே!

எங்களணியினர் யாரும் காதல் தப்பு என்று சொல்லவில்லை.அது திருமணத்துக்கு பின் வந்தால்தான் திருமண வாழ்க்கை சொர்க்கமாகும் என்றுதான் கூறுகிறோம்.

ஆனால் காதல் மணம் செய்தவர்கள் பெரும்பாலும் திருமணம் வரை உருகி உருகி காதலிப்பார்கள்.காதலி / காதலன் தான் எல்லாம் என்பார்கள்.திருமணம் ஆனதும் இவள் இனி இங்கு தானே இருக்க போகிறாள்...என்ற அலட்சிய போக்கு வருகிறது.அவர்களின் காதல் குறைகிறது என்று சொல்லவில்லை.அதை வெளிப்படுத்துவது குறைகிறது.இதுவே இவர்களிடம் ஒரு இடைவெளியை உண்டாக்கி,பிளவை ஏற்படுத்தும்.

ஆனால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எந்த எதிர்ப்பார்ப்பும் கிடையாது.கணவனும்,மனைவியும் குறை,நிறைகளுடன் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால் அங்கு ஏமாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை.

அதனால் அதிகம் தோற்பது காதல் திருமணங்களே என்று கூறி இரண்டாம் கட்ட வாதத்தை நிறைவு செய்கிறேன்.

//இன்னும் கொஞ்சம் பின்னாடி போங்கப்பா காதல் தெய்வீகமானது “முருகர் வள்ளியை திருமனம் முடித்ததும்,கண்ணன் ராதையை செய்ததும் “காதல் திருமனம்” மன்னிக்கவும் எனக்கு இன்னும் உங்க கடவுள் பெயர் தெரியாததால் விட்டுப் போன தெய்வங்களை நீங்களே நினைத்துப் பாருங்கள்//

நடுவரே, இந்த தோழி சொல்வதெல்லாம் தெய்வீக காதல்,காவியக்காதல். நாங்கள் சொன்னவை நிதர்சனத்தில் வெற்றிகரமாக குடும்ப வாழ்க்கையை முடித்து தெய்வமாகி போனவர்களை பற்றி. வித்தியாசத்தை பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவர் அஸ்வினிக்கு எனது வாழ்த்துக்கள்...
தோற்றுப்போகும் நிலை இரண்டிலும் இருப்பது சங்கடப்பட வேண்டியது.ஆனால் "அதிகம் தோற்பது காதல் திருமணத்தில் என்பது வேதனைப்பட வேண்டியது......."

ஆம் நடுவரே, இப்படிப்பட்ட திருமணங்கள் தோற்க நான் முதலில் கூறும் ஒரு காரணம் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அதிகபட்சமான அன்பையே காரணமாக்குவேன். அடுத்தது அவர்களின் புரிதல் இல்லாதன்மையும்,விட்டுக் கொடுக்காத மனப்பான்மையும்.........
இன்னும் விரிவான வாதங்களுடன் பிறகுவருகிறேன்......

அனைவருக்கும் வணக்கம்...தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்..
நேற்று என் தோழிக்கு திடிரென்று பிரசவ வலி(பொய் வலி) எடுத்ததால்,நான் மருத்துவமனைக்கு அவளுடன் செல்ல வேண்டிய கட்டாயம் ஆதலால் என்னால் பதிவிட முடியவில்லை..இன்றுதான் அவள் பெற்றோர் இந்தியாவிலிருந்து உதவிக்கு வந்துள்ளனர்..அனைவரின் வாதங்களையும் படித்துவிட்டு வருகிறேன்...
ரேணுகா ராஜசேகரன்:வாங்க..ரொம்ப நாளா ஆளே காணும்..நீங்கள் பட்டியில் கலந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது?
மீண்டும் வருகிறேன்..

இதுவும் கடந்துப் போகும்.

ஒரு நாள் இந்த பக்கம் வரலை அதுக்குள்ள எல்லாரும் சும்மா பூந்து விளையாடிட்டிங்க போல...ஜமாய்க்கறீங்க...

ராதா பாலு:”எங்கள் உறவினர் போய் 'உங்களுக்குள் என்ன பிரச்சனை...இந்த விவாகரத்து வேண்டாமே" எனக்கேட்க,”

இங்கயாவது அவங்க அம்மா சொல்லி இன்னொருத்தர் போய் கேட்க முடியுதே..ஆனால் காதல் திருமணங்களில்..???

கவலைப்படாதீங்க மெர்சானா கூட வந்திருக்காங்க...

ஹர்ஷா:வாங்க,வருகைக்கு நன்றி,வாழ்த்துக்களுக்கும் நன்றி...

“பெற்றோரை பற்றிய ஏக்கம் டிப்ரஷனயும்,வெறுப்பையும் ஏற்படுத்தும்.ஒரு கட்டத்தில்,’அவசரப்பட்டு தவறு செய்துட்டோமோ’என்று எண்ணி,தான் விரும்பி ஏற்ற மண வாழ்வையே சுமையாக பார்ப்பவர்கள்தான் காதல் திருமணம் செய்தவர்களில் அதிகம்.”

கரெக்டான பாயிண்ட்..இதை மனதளவிலாவது நினைக்காதவர்கள் இருக்க முடியாது..அப்புறம் எங்கே நிம்மதி?எல்லாம் போயே போச்சு,இட்ஸ் கான்..

“காதலில் வெற்றியடைந்த பின்னர் அந்த மண வாழ்க்கையை வாழத் தெரியாமல் உடைத்துவிடுகிறார்கள்... ”

காதல் என்பது எது வரை?கல்யாண காலம் வரும் வரை...அப்புறம் காதல் எல்லாம் காணாம போயிடும் போலப்பா...

கல்ப்ஸ்:”இந்த தோழி சொல்வதெல்லாம் தெய்வீக காதல்,காவியக்காதல். நாங்கள் சொன்னவை நிதர்சனத்தில் வெற்றிகரமாக குடும்ப வாழ்க்கையை முடித்து தெய்வமாகி போனவர்களை பற்றி. வித்தியாசத்தை பாருங்கள்”

சும்மா ஒரே ஒரு பாயிண்ட சும்மா நச்சுனு அடிச்சிட்டு போயிட்டீங்க..எல்லாரும் நோட் பண்ணிக்கிங்கப்பா..வாழ்ந்து தெய்வமானவங்களை பத்தியாம்..

இதுவும் கடந்துப் போகும்.

ஜெயா:”எந்த உணவு பிடிக்கும் எது பிடிக்காது என்பதில் இருந்து வீட்டிலும் வெளியிலும் உள்ள பழக்கவழக்கம், மற்றவரிடம் அணுகும்முறை என்பதிலிருந்து உறவினர்கள் அவருடன் எப்படி பழக வேண்டும் ,எப்படி ப்ரச்சனையான சமையத்தில் சுமூகமாக கையாள்வது என்பது பற்றி டெக்னிக்கூட சொல்லிக்கொடுப்பர்.”
“இப்போது காதல் திருமணங்கள் கூட லவ் கம் அரேஞ்சுடுன்னு சொல்ற என்னதான் தான் காதலித்திருந்தாலும் இதில் பெற்றோரின் அனுமதியோடுதான் திருமணம் நடந்தது என்பதை பெருமையாக சொல்வதைதான் இன்றய காதல் தம்பதியினர் எண்ணுகின்றார்கள்.”

சபாஷ்..சபாஷ்..என்ன ஒரு அருமையான திங்கிங்..வெரி குட்..

மெர்சானா:”புலி பதுங்குவது பாய்வதற்கு தான்.....”
”விவாகரத்து என்பதில் மட்டும் ஒரு திருமனம் தோற்பதில்லை எப்போ கனவன் மனைவிக்கிடையே மூன்றாவதாக ஒரு நபர் வருகிறாரோ அப்போதே அந்த திருமனம் தோற்கிரது அது பெற்றோர்களாகவே இருந்தாலும் சரி”
”காதல் தான் இறைவனால் ஏற்படுத்தப் பட்டது நிச்சயம் என்பது மனிதர்களால் தினிக்கப்பட்டது.”
“தன் சொந்தம் பந்தம் வசதி அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு தனக்காக வருகிறாள் என்றதும் அவளை கண்னுக்குள் இமையாக வைத்து பார்த்து கொள்கிறான். தனித்து யாருடைய உதவியும் இன்றி வாழ்வில் வெற்றி பெருகிறான்”

பாய்ஞ்சிட்டீங்க போல..சபாஷ்..புதிய பரிமாணத்தை தந்ததற்கு நன்றி...என்னை ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க..

என்னப்பா...எல்லாரும் உங்க கடைசி கட்ட வாதத்தை பதிவு செய்யுங்கப்பா..நான் நாளை இரவு பட்டி தீர்ப்பு அறிவிக்க உள்ளேன்...

இதுவும் கடந்துப் போகும்.

நட்வரே சும்மா காதல் இல்லன வாழ்க்கை இல்லைங்கிறது எல்லாம் பேச்சுக்கு சரி . காதலிக்கும் போது நிகழ்ந்த சிறு தவறுகளைக்கூட திருமணத்துன் பின் சுட்டிக்காட்டி ப்ரச்சினைபடும் தம்பதியிர் அதிகமாகவேஉள்ளனர்.உயிராய்க் காதலித்தவர்களே என் உயிரை எடுக்கிறாய் என்று சொல்கின்றனர், ஒரு பிரச்சினையின் போது அதை சமாளிக்கத்தெரியாமல் பக்கத்து வீட்டினரிடம் உதவி கோர்ரும் காதல் தம்பதிகள் ஏராளம். ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் சோகத்தை சொல்லியழவும் இன்பத்தில் இதழ் விரிக்கவும் இருபக்க உறவுகளும் உண்டு, ஒரு குழந்தை பிறந்த சந்தோஷ்ம் இரட்டிப்பாவதே சொந்தங்கள் சேர்ந்த்து பெயர் சூட்டிடும் போதுதான். காதல் திருமணத்தில் குழந்தை பிறந்த போது கூட அனாதையாகிவிட்ட உணர்வே மேல்லோங்கும். திசை தெரியா காட்டில் தன்னந்தனியா வாழ்ந்த்து யாருமின்றி பிரிந்து போகும் காதல் வாழ்க்கையில் தோல்வி தான் அதிகம்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்