பட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது?

”திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா?பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?”

நல்ல தலைப்பு,அதுவும் இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் வாதிட வேண்டிய தலைப்புன்னு தோணிச்சு அதான் நம்ம தோழியரிடமிருந்தும் நிறைய வாதங்கள் வருமென்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளேன்..

தலைப்பை தந்த தோழி சுபாவிற்கு மிக்க நன்றி.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

அப்பப்பா....காதலே போ...போ...என்று பாட்டே பாடுவார்கள் போல எதிர்க் கட்சியினர்

காதல் திருமணம் செய்பவர்கள் ஏதோ தினமும் சண்டை பிடித்துக் கொண்டு இருப்பதாக எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள்....முன்பே நான் சொன்னது போல இந்தக்கால இளைஞர்களும், இளைஞிகளும் எல்லாம் தெரிந்து, தாம் திருமணம் செய்யப்போகிறவரைப் பற்றி நன்கு அறிந்த பிறகே திருமணம் செய்ய முற்படுகின்றனர்...

'பருப்புப் பாயசம் என் மகனுக்கு செய்து போடாதே...அவனுக்கு பிடிக்காது' என்று மாமியார் சொல்வாராம்....மருமகள் கேட்டுக்கொள்ள வேணுமாம்....இது எந்த ஊர் நியாயம்? அப்போ அவளுக்கென்று ஆசைகளே இருக்கக் கூடாதா?(அதைக்கேட்க அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?) இது போன்ற பேச்சுக்கள்தான் திருமணம் தோற்பதற்கு காரணங்களாகிறது....காதல் திருமணத்திலோ இருவரும் காதலிக்கும்போதே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதால் இது போன்ற நிலைமை வர வாய்ப்பில்லை....

இன்றைய காதல் திருமணங்கள் பெற்றோர் அனுமதியுடன் அரேஞ்ச்ட் மேரேஜாக நடப்பதாக எதிரணியினர் சொல்கிறார்களே....மிகச் சரியான கூற்றுதான்...ஸோ பெற்றோர் அனுமதியைப் பெற்று திருமணம் செய்து கொள்கிறபோதே அந்தக் காதல் வெற்றி பெற்றுவிட்டதே?

நிச்சயமான திருமணத்தில் உறவினர்கள் சோகத்திலும், சுகத்திலும் உடன் இருப்பார்கள் என்றார் எதிர்க்கட்சி தோழி....காதலில் உறுதியாக இருக்கும் பெண், பிள்ளைகளின் பெற்றோரையும் சமாதானம் செய்து 'நம்ம பிள்ளாஇகள்தான....அவங்களுக்கு ஆதரவு கொடுக்க நம்மை விட்டா யார் இருக்கா?' என்று சொல்லி அதர்கு ஆதரவு தரும் உறவினர்களும் உண்டு நடுவரே....

அதையும் மீறி பாராமுகமாய் இருக்கும் பெற்றோர்களும் ஒரு குழந்தை பிறந்ததும் 'ஆஹா...நம்ம பேரன், நம்ம பேத்தி என்று பாசத்தில் ஒன்றாகி விடுவதும் காதல் திருமணத்தில் சகஜமே...
அனாதை....திசை தெரியாத வாழ்க்கை.....பிரிந்து போகும் காதல் வாழ்க்கை....தோல்வி என்று காதலையே மிக மோசமாக கூறியிருப்பதை படிக்க மிகவும் மனம் வருந்துகிறது....இந்தக் காலத்தில் 10 தம்பதிகளிடம் நீங்கள் கேட்டால் குறைந்தபட்சம் 6 தம்பதிகளாவது காதல் திருமணம் செய்திருப்பார்கள்..

என்னுடைய கடைசிகட்ட வாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்....எல்லவற்றையும் தீர ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது நீங்களே.....நன்றி...

பூங்காற்று:என்னடா ஆள காணோமேன்னு நினைச்சுக்கிட்டே இன்னைக்கு திறந்தா நேத்து நைட்டே பதிவ போட்டிருக்கீங்க...

“உயிராய்க் காதலித்தவர்களே என் உயிரை எடுக்கிறாய் என்று சொல்கின்றனர்”
“குழந்தை பிறந்த போது கூட அனாதையாகிவிட்ட உணர்வே மேல்லோங்கும். திசை தெரியா காட்டில் தன்னந்தனியா வாழ்ந்த்து யாருமின்றி பிரிந்து போகும் காதல் வாழ்க்கையில் தோல்வி தான் அதிகம்”

ஆனா ஒரு குழ்ந்தை பிறந்தா எல்லாரும் வந்து சேர்ந்துடுவாங்கன்னு எதிரணி சொல்றாங்களே..!!!!!!அப்படி சேரும் போது பெரிய ஆனந்தம் வேற இருக்கும்னு சொல்றாங்க...

ராதாபாலு: என்ன முடிச்சிட்டீங்க?இன்னும் வாதங்கள் இருக்கே..நான் இன்னைக்கு இரவுதான் தீர்ப்பு கூற போறேன்..அதுவரை நீங்கள் வாதிடலாம்..

“காதல் திருமணத்திலோ இருவரும் காதலிக்கும்போதே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதால் இது போன்ற நிலைமை வர வாய்ப்பில்லை....”

அப்படி தெரிந்துக்கொண்டால்,புரிந்துக்கொண்டால் காதலித்தோர் இடத்தில் பிரச்சனையே வரக்கூடாதே..!!!

வாங்கப்பா வந்து எதிரணி வாதாடுங்கள்..

தீபன்:எங்கே போனீங்க?பட்டியே முடியப்போகுது..வாங்க வந்து உங்கள் வாதத்திறமையை காட்டுங்கள்..

இதுவும் கடந்துப் போகும்.

நடுவருக்கு காலை வணக்கங்கள்...
எனது பதிவுகளில் முந்தைய வாதங்கள் இருப்பின் மன்னிக்கவும்.,
எனக்கு தெரிந்த பெண்ணின் காதல் அனுபவத்தை சொல்கிறேன்...இருவரும் மனமார விரும்பி உருகி,வருடங் கடந்து திருமணம் முடித்தனர்.......குழந்தையும் பிறந்தது ஒரே பிரசவத்தில் இரட்டை பெண்பிள்ளைகள்....மாமியாருடன் பல மனஸ்தாபங்களில் கணவனிடம் தனியே போகலாமென கேட்டிருக்கிறார்...இன்னும் பிரச்சனையினைக்கிளப்பி தனியாக அனுப்பி விட்டனர் அவளையும்,பிஞ்சு குழந்தைகளையும் மட்டும் விப்வாகரத்து கொடுத்து.இங்கே அந்த ஆடவனின் முன்னால் காதல் என்னவானது???
இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அதிக அன்பே இவர்களின் கண்ணை மறைக்கிறது நடுவரே,
அதனால்தான் ஒருவர் செய்யும் பிழைகள் அல்லது ஒருவர்மீது ஒருவர்காட்டும் அதிக அக்கறையும் (கட்டலையாக )புரிந்து கொள்கின்றனர்.பின்,குறிகிய காலமோ அல்லது இடைப்பட்ட காலமோ அதற்குபின் சுயம் சுயவிருப்பம் என்று வரும்போது என்மீது ஏன் கட்டளையிடுகிறாய் என கோவமும் சண்டையும் வருகிறது.......
இருவரின் இடையில் சண்டை வலுக்கும்போது பேசி புரியவைத்து,வாழ்வின் யதார்த்தங்கைளை சொல்லிக்கொடுத்து வழ்நடத்தும் பெரியோர் இல்லையே இந்த காதல் திருமணத்தில்....இது பெரிய இழப்பு....
இன்றைய யுவதிகள் பெரும்பாலும் வேலை செய்கின்றனர்.அதுவும் ஐடி துறையில்,இதில் சிஃப்ட் மாறிவரும்,கணவரும் ஒரே இடத்தில் வேலைசெய்தால்கூட பார்த்து பேசமுடியாத கொடுமை.வேலை வேலை என்று பறாக்கும் உலகில் கம்பெனி எம்டி மனதையும்,போட்டி கம்பெனியின் நிலையையும் புரிந்து கொள்ள ஒதுக்கும் நேரம்கூட கணவன் மனைவிக்கு இடையில் ஒதுக்குவதில்லை...
ஒருவித கவர்ச்சியில்,ஈர்ப்பில் உண்டாண காதல், பயத்தினால் விரைவான திருமணத்தை நோக்கி தள்ளப்படுகிறது......புரிந்தும் புரியாமலும்,அறிந்தும் அறியாமலும்,சம்பளம் வேலை பற்றி தெரிந்தும் தெரியாமலும் நடந்தேறும் திருமணம்........பாதிவரை வருவதே அவர்கள் பெற்றோர் செய்த புண்ணியமாக இருக்கும்,சுமைதாங்காமல் குடைசாய்ந்துவிடுகிறது.....
பலர் சொல்வார்கள் யோசித்து, கணக்கு போட்டு வருவதல்ல காதல்ன்னு....ஒருவிதத்தில் அதை ஏற்றுக்கொண்டாலும் கல்யாணம் என்று வரும்போது அனைத்தையும் யோசிக்கனுமே,
காதலிக்கும்போது தகுதிபார்க்காமல் இருக்கலாம்,ஆனால் திருமணத்திற்காக தகுதியையும் தரத்தையும்,மதிப்பையும்,மெருகேற்றிக்கொள்ளும் அளவிற்கு பொறுமையில்லாத காதல், வாழ்வில் எங்கு சகிப்புத்தன்மை வேண்டும்,எங்கு சமாதானம் வேண்டும்,எங்கு கண்டிப்பு வேண்டும்,எப்போதும் எதற்கும் குறையாத பாசம் காட்ட வேண்டுமென்று புரிந்து கொள்ளாத திருமணங்கள் அதிகம் தோற்றுத்தான் போகின்றன........

ரேணு:இறுதியாக உங்கள் வாதத்தை பதிவு செய்தமைக்கு முதலில் நன்றிகள்..
“காதலிக்கும்போது தகுதிபார்க்காமல் இருக்கலாம்,ஆனால் திருமணத்திற்காக தகுதியையும் தரத்தையும்,மதிப்பையும்,மெருகேற்றிக்கொள்ளும் அளவிற்கு பொறுமையில்லாத காதல், வாழ்வில் எங்கு சகிப்புத்தன்மை வேண்டும்,எங்கு சமாதானம் வேண்டும்,எங்கு கண்டிப்பு வேண்டும்,எப்போதும் எதற்கும் குறையாத பாசம் காட்ட வேண்டுமென்று புரிந்து கொள்ளாத திருமணங்கள் அதிகம் தோற்றுத்தான் போகின்றன....”
உங்களின் இந்த பாயிண்ட் என்னை மிகவும் யோசனைக்கு உள்ளாக்கியுள்ளது..வெகு விரைவில் தீர்ப்புடன் வருகிறேன்..

அதற்குள் யாரேணும் வாதத்தை பதிவிட வேண்டுமென்றால் பதிவிடலாம்...வாதங்கள் பதிவாகி உள்ளதா என்று பார்த்துவிட்டு தீர்ப்பு வழங்குகிறேன்..நன்றி..வணக்கம்

இதுவும் கடந்துப் போகும்.

நடுவரே கொஞ்சம் பிள்ளைக்கு உடல் சரியில்லை அதனால் பதிவு சரியா போட முடில இன்று தீர்ப்புனு சொன்னதால் விரைந்து வந்து இந்த பதிவை போடுகிறேன்
எதிரனி தோழி சொன்னார் .//.கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவதாக ஒரு நபர் வருவதால் திருமணம் தோற்கிறது என்று.அந்த நபர் மாமியாராக இருந்தால்,பிரச்சனைகள் வருமே தவிர அந்த திருமணம் உடையாது.
ஆனால்,அந்த நபர் வேறொரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்தான் அந்த திருமணம் தோற்கிறது.//என்று இது வேடிக்கையாக இருக்கு கனவன் மனைவிக்கு இடையே மாமியார் தலையிட்டு எத்தனை குடும்பங்கள் பிரிந்திருக்கு என்பது அனைவரும் அறிந்ததே..வேறொரு பெண் என்பது காதல் திருமனத்தில் வாய்ப்பே இல்லை அவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த பெண்ணையே திருமனம் செய்கிறார்கள். இது போன்ற நிகழ்வு நிச்சயித்த திருமனத்தில் தான் நடக்கிறது தான் எதிர்பார்த்தது போல் மனைவி அமையாத போது அது மட்டுமல்ல ஒரு தோழி சொன்னார் நிச்சயித்த திரும்னத்தில் எதிர்பார்ப்பு இல்லை என்று…………….எந்த ஒரு மனிதருக்கும் தன் கனவனை பற்றியும் மனைவியை பற்றியும் கனவு இல்லாமல் இருக்காது அப்படி இல்லை என்று தெரியும் போதே அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள்
சகிப்புத்தன்மை இல்லாமல் போகிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து காதலிக்கும் போதே அவர்களுக்குள் பல விஷயங்கள் வேருபடுகின்றன அதை சகித்துக் கொள்வதால் தான் அந்த காதல் திருமனம் வரை வருகிறது இல்லையென்றால் அது பாதியிலேயே முறிந்து விடும் காத்லிக்கும் போதே பல விஷயங்களையும் பற்றி புரிந்து கொள்வதால் திருமனத்திற்கு பிறகு அந்த பிரச்சனைக்கே இடமில்லை
சமையலை பிரச்சனையாக சொல்கிறார்கள் அதுக்கு தான் தோழிக்கு தோழியாய் அன்னைக்கு அன்னையாய் “நம் அறுசுவை”இருக்கிறதே..!
//லவ் கம் அரேன்ஞ் மேரேஜ்//என்று சொல்வதி தான் பெருமையடைகிறோம் என்று சொன்னார் எதிரனி தோழி. நடுவரே முதலில் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் காதலித்து ஓடிபோய் திருமனம் செய்யனும் என்பது எங்கள் நோக்கம் அல்ல நம்மை வளர்த்த பெற்றோறின் உன்னதமான் அன்பையும் மீறி ஒருவர் மீது மட்டும் ஏற்படும் காத்ல் பெற்றோறின் அனுமதியோடு திருமனத்தில் முடியும் போதே அந்த காத்ல் வெற்றி அடைகிறது.
எதிரணி தோழிகள் இன்னும் எந்த காலத்தில் இருக்கிறார்கள் இப்போது உள்ள தலைமுறையினர் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் அப்படி பட்டவர்கள் தன் வாழ்க்கை துனையை தேர்ந்தெடுக்கும் போது எந்த அளவுக்கு யோசிப்பார்கள்
நிச்சயித்த திருமனத்தில் எத்தனையோ தம்பதிகள் மனம் ஒத்துப் போகாமல் ஏதோ வாழ்கிறோம்…………என்று சலிப்புடன் சொல்பவர்களை பார்க்கிறோம் அப்படி ஒரு பொய்யான வாழ்க்கை தேவையா தோழிகளே கொஞ்சம் சிந்தியுங்கள் ஒரு தோழியை போலவும் தோழனை போலவும் நம் கருத்துக்களுக்கும் நம் உணர்வுக்கும் மறியாதை கிடைக்கும் நிகழ்வு காதல் திருமனத்தில் மட்டுமே நடக்கிறது
விளம்பரம் தான் காரணம் நடுவரே யாரேனும் ஒருவர் காதலித்து திருமனம் முடித்தால் இந்த உலகம் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறது அதில் ஒரு சில் தோல்விகள் ஏற்பட்டால் நம் மக்கள் அதையே வருடக்கணக்காக பேசி கொண்டிருப்பதால் அதிகம் தோற்பது காதல் திருமனம் போல் தோன்றினாலும் விவாகரத்து ஆகவில்லையென்றாலும் மனதில் சலிப்போடும் வேதனையோடும் வாழும் நிச்சயிக்கப்பட்ட திருமனமே அதிகம் தோற்கிறது
கடைசியாக ஒரு வேண்டுதலுடன் என் வாதத்தை முடிக்கிறேன் ஒரு சில காதல் திருமனம் தோற்பதை வைத்து தோழிகளே வருங்கால தலைமறையினரின் கனவுகளையும் ஆசைகளையும் களைத்து விடாதீர்கள் அவர்கள் வாழ்க்கை துனையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களிடமே கொடுங்கள் அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை தரும் யாரையும் சார்ந்திராமல் சொந்த காலில் நிற்க கூடிய தைரியத்தை தரும் என்று கூறி நல்ல தீர்ப்பை எதிர்பாத்து காத்திருக்கிறோம்…………..
அருசுவையில் வாதிடுவது இதுவே முதல் முறை வாய்ப்பளித்த அறுசுவைக்கு நன்றி யார் மனதையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
நடுநிலையாக நின்று தீர்ப்பு வழங்கப்போகும் நடுவருக்கும் நன்றி கூறி விடைபெருகிறேன்

நடுவரே

முதலில் எதிரணிக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்........

தலைப்பு புரியாமல் யாரும் இங்கே வாதாட வரவில்லை. தலைப்பை புரிந்து எதைப்பற்றியது என்று தீர ஆராய்ந்த பிறகே இங்கே வாதாட வந்திருக்கின்றோம்.
ஆனால் எதிரணிக்குதான் அது புரியவில்லை போலும்.....

தலைப்பு காதல் திருமணத்தை பற்றியே அன்றி காதலைப் பற்றியது அல்ல. காதலுக்கு நாங்கள் எதிரியா இல்லை ஆதரவாளர்களா என்பதைப் பற்றி ஆராயாமல் தலைப்புக்கு ஏற்ற வாதத்தை மட்டும் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நடுவரே...

மாமியார் கொடுமையை நான் கொண்டு வரலைங்க....அத ஏற்கனவே எதிரணி குறிப்பிட்டு பேசியதாலேயே நாங்கள் மறுத்து பேசினோம். அதுவும் மாமியாரின் பாசமான எதிர்பார்ப்பை மாமியார் கொடுமைன்னு தவறா புரிஞ்சுக்கறாங்கன்னுதான் எடுத்து சொன்னோம்.
//சினிமா உலகில் விவாகரத்தான் “சிலரை” சுட்டிக் காட்டினார்கள் ஜெயித்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்ரை நான் சொல்லவா சொல்ல ஆரம்பித்தால் இந்த பட்டியே போதாது//

நீங்க சிலரை சுட்டிக்காட்டி அவங்க காதல் ஜெயிச்சதுன்னு சொன்னீங்க நானும் சிலரை சுட்டிக்காட்டி இவங்க காதல் தோத்ததுன்னு சொன்னேன். சரி பரவாயில்லை ஜெயித்த காதலை பட்டியல் போடுங்க நானும் அதே அளவு தோல்வியுற்ற காதல் திருமணத்தை பட்டியல் போடறேன்.

நடுவரே
எதிரணிதான் ரொம்ப குழம்பி போயிருக்காங்க போல இருக்கு;)

தெய்வங்களின் காதலை எல்லாம் சாட்சிக்கு அழைத்து தத்துவம் பேசுகிறார்கள். நடுவரே நாங்களும் அதே ’சில’ தெய்வீக, கண்ணியமான காதல்கள் மட்டும்தான் ஜெயிக்கின்றது மற்ற ஏனைய காதல் திருமணங்கள் தோற்கின்றது என்கின்றோம். ஏனைய பிற காதல்கள் என்னன்னு கேட்டா ஒரு சிலக் காதல் மட்டும் சொல்றேன் மற்றக் காதல் எல்லாம் எது எதுன்னு அவங்களே புரிஞ்சுப்பாங்க. படகு மறைவு காதல், பூங்கா புதர் காதல், மேஜையடியில் காலை வருடும் காதல், தியேட்டரில் .......நடுவரே இத்தகைய காதல்களுக்கு எது தேவையோ அது நிறைவேறும் வரையில் மட்டும்தான் அந்தக்காதல் ஜெயிக்கும் நிறைவேறிய பின் என்னாகும்னு உங்கலுக்கும் தெரியும் எதிரணிக்கும் நன்கு தெரிந்திருக்கும்னு நம்புவோம்.

//'பருப்புப் பாயசம் என் மகனுக்கு செய்து போடாதே...அவனுக்கு பிடிக்காது' என்று மாமியார் சொல்வாராம்....மருமகள் கேட்டுக்கொள்ள வேணுமாம்....இது எந்த ஊர் நியாயம்? அப்போ அவளுக்கென்று ஆசைகளே இருக்கக் கூடாதா?(அதைக்கேட்க அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?) இது போன்ற பேச்சுக்கள்தான் திருமணம் தோற்பதற்கு காரணங்களாகிறது....காதல் திருமணத்திலோ இருவரும் காதலிக்கும்போதே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதால் இது போன்ற நிலைமை வர வாய்ப்பில்லை...//.

இதுதாங்க நிச்சயித்த திருமணத்தில் ஒருவரைப்பற்றி புரிந்து கொண்டதும் அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து தனது விருப்பத்தைக்கூட தியாகம் செய்து ஒருவருக்காக ஒருவரை அர்பணித்து இனிமையாக இல்லறத்தை நடத்துவர். ஆனால் இந்த காதல் திருமணத்தில்தான் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்று நன்கு புரிந்து கொண்டும் எனக்கு சேமியா பாயாசம்தான் புடிக்கும்னு சொல்லி அதையே வச்சி ஏட்டிக்கு போட்டியாகவே என்னுடைய இஷ்டம் என்னுடைய கஷ்டம்னு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுக்காம முடிவில் அத்திருமணத்தை ரத்து செய்யவே வாய்ப்பாக்கிக்கறாங்க.

//அனாதை....திசை தெரியாத வாழ்க்கை.....பிரிந்து போகும் காதல் வாழ்க்கை....தோல்வி என்று காதலையே மிக மோசமாக கூறியிருப்பதை படிக்க மிகவும் மனம் வருந்துகிறது....இந்தக் காலத்தில் 10 தம்பதிகளிடம் நீங்கள் கேட்டால் குறைந்தபட்சம் 6 தம்பதிகளாவது காதல் திருமணம் செய்திருப்பார்கள்//

எதையெதையோ காதல் என்று எண்ணி தோற்றுப்போகும் அறியாப்பருவத்தில் இருக்கும் நம் சகதோழிகள் ஏமாறக் கூடாது என்பதாலேயே அதன் விளைவுகளையும் உண்மைநிலைகளையும் விளக்கிக் கூறி அவர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோமோ அன்றி கண்ணியக் காதலுக்கு நாங்கள் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கின்றோம்.(சல்யூட்).

நடுவரே..
இங்கே நாம் பேசுவது எந்த திருமணம் ’அதிக’ தோல்வியைத் தழுவிகின்றது என்பதைப் பற்றிதான் என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி .....திருமமணங்கலில் அதிக தோல்வியைத் தழுவுவது காதல் திருமணமே என்று இறுதிக் கட்ட வாதத்தை முடித்துக்கொள்கிறேன்.

Don't Worry Be Happy.

மெர்சானா:வாங்க..பரவாயில்லைப்பா..ஆனாலும் கடைசி நேரத்திலும் உங்க அணியை விட்டுக்கொடுக்காம வாதாடி இருக்கீங்க..சபாஷ்
ஜெயா:என்னப்பா விடமாட்டேன்னு வாதாடறீங்க போல..பேஷ்..பேஷ்..

பட்டிதீர்ப்பு அடுத்த பதிவில் போடுகிறேன்ப்பா..எல்லோரும் வெயிட்டிங்கா?சாரி..

இதுவும் கடந்துப் போகும்.

எல்லோருக்கும் வணக்கம்.பட்டியை வெற்றிகரமாக நடத்த உறுதுனை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்,எனக்கு இந்த வாய்ப்பு அளித்தமைக்கும் என் நன்றிகள்.

இப்படி ஒரு தலைப்பை எடுத்துள்ளோமே எப்படி தீர்ப்பு சொல்ல போகிறோம் என்ற ஒருவிதமான அச்சம் இருந்துக்கொண்டே இருந்தது,ஆனால் நம் தோழிகளின் வாதங்களில் ஆங்காங்கே குழம்பினாலும் ஒருவித தெளிவு பிறந்து உள்ளது...அப்பப்பா எல்லாரும் என்ன வாதாடறீங்க!!!எல்லா அண்ணாக்களுக்கும் ஒரு சலாம் போட்டுட்டு ஒரு ”ஓ” போடணும்போல இருக்கு..ஆல் அண்ணாஸ் ஆர் கிரேட்...

சரி தீர்ப்புக்கு வருவோம்..
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாக நாம் அனைவரும் நம்புகிறோம்.அத்தகைய திருமணங்கள் தோற்காமல் இருக்கவே அனைவரும் முயற்ச்சிப்போம்..

காதல் கல்யாணம் ஆனாலும்,நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனாலும் அங்கு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொண்டால்தான்,விட்டுக்கொடுத்தால்தான் அதில் விரிசல்வராமல் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை..
அப்பா,அம்மா,மாமனார்,மாமியார்,உறவுகள்,நண்பர்கள் இப்படி யார் என்ன கூறினாலும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது அந்த பிரச்சனைக்குரிய கணவன்,மனைவிதான்..அந்த தீர்வுக்கு வர பல விதத்தில்,பல நேரத்தில் அணுபவம்மிக்க பல நல்ல உள்ளங்களின் ஆலோசனைகள் மிக மிக அவசியம். அப்படிப்பட்ட ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவமும்,சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு அந்நியோன்யமும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் கிடைக்கும்..

அந்த புரிந்துக்கொள்ளுதலும்,விட்டுக்கொடுத்தலும் எத்தனையோ நிச்சயக்கப்பட்ட திருமணங்களில்தான் உள்ளது..அப்பா,அம்மா நல்ல துனையைதான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் என்றும்,மாமியார்,மாமனார் சொல்வதில் ஒரளவேணும் நல்லது இருக்கும் என்றும்,கணவனின் கூற்றில் நியாயம் இருக்கக்கூடும் என்றும்,பிள்ளைகளை மனதில் கொண்டு தவறான முடிவை எடுக்கக்கூடாது என்றும்,ஊர்,உலகம் நாளை நம்மை பற்றியோ நம் குடும்பத்தை பற்றியோ தவறாக பேசக்கூடாது என்றும்,ஒருவரை ஒருவர் சிலசமயம் கசந்துக்கொண்டாலும், பல யோசனைகளால்லேணும் நாம் ஒரு நல்ல முடிவை எடுக்க முனைவார்கள்.

இது என் வாழ்க்கை நான் இவரைதான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்,என்று அப்பா,அம்மாவை தூக்கி எரிந்து பேசும் இடத்திலேயே அவர்களின் விட்டுக்கொடுத்தல் மறைந்துவிடுகிறுது..அதேப்போல் அப்பா,அம்மாவை புரிந்துக்கொள்ளாமல் தன் சுயநலத்திற்காக அவர்களை மாற்றும் பொழுதும் அவர்களின் புரிந்துக்கொள்ளாதனம் வெளிப்படுகிறது..இப்படி இவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொழுதே இப்படி வாழ்க்கைக்கு தேவையான இரு தூன்களை ஒதுக்கிவிட்டால் அவர்கள் வாழ்வில் எப்படி வெற்றிக்காண்பார்கள்?இப்படி நான்,எனக்கு,என்னுடையது என்ற எண்ணம் வந்தால் அங்கு மனிதன் வாழ முடியாது என்பது உறுதி. அப்படி எடுக்கும் முடிவு எப்படி இருக்க்க்கூடும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இருந்தாலும் காதலித்து கல்யாணம் செய்துக்கொண்டவர்கள் எத்தனையோ பேர் கணவணுக்காக தம் உணவு பழக்கங்களில் இருந்து,மதம் மாறி,இனம் மாறி,மொழி மாறி,பழக்க வழக்கங்கள் மாறி எத்தனையோ மாறுதல்களை செய்தாலும் உனக்காகத்தானே செய்தேன்” என்றுதான் கூறுகிறார்கள் அங்கு நம் காதலுக்காக மாறினதாக யாரும் இதுவரை சொல்லவில்லை..அதனால் அங்கே காதல் பொய்க்கிறது,தியாகம் செய்ததாக மனம் நினைக்கிறது.. நிம்மதி தொலைகிறது,பிரிவு ஏற்பட ஏதுவாய் உள்ளது.

காதல் திருமணங்கள் செய்தவர்கள் எல்லாம் தோற்கிறார்கள் என்றும்,நிச்சயித்த திருமணம் செய்தவர்கள் தோற்க்கவில்லை என்றும் கூறவில்லை..ஆனால் அதிகம் தோற்பதற்கான காரணம் மிகவும் எளிதாக காதல் திருமணங்களில் இருக்கிறது என்பதே என் தீர்ப்பு.

ஆகையால் நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொண்டு,விட்டுக்கொடுத்து வாழ பழகிக்கொள்ளவேண்டும்.இதை பின்பற்றினால் திருமணங்கள் மட்டுமல்ல எந்தவிதமான உறவுகளிலும் பிரிவில்லை என்பதை உளமாற நம்புவோம்,அதன்படி நடப்போம்.

உங்களை எல்லாம் குழப்பி இருந்தாலும் நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.விடைப்பெறுகிறேன்.நன்றி,வணக்கம்.

இதுவும் கடந்துப் போகும்.

நடுவரின் தீர்ப்பு,
அஸ் முதல் பட்டியாக இருந்தாலும் நல்லமுறையில் நடத்தி தெளிவாக தீர்ப்பை கொடுத்துள்ளீர்.
எவ்வித திருமணமாக இருந்தாலும் மனம் ஒன்றி பிரியாமல் வாழவே அனைவரும் விரும்புவர்.இருந்தாலும் சூழ்நிலைகள் அத்துமீற வைக்கின்றன.நீங்கள் கூறியுள்ள தூண்கள் அதை காக்கின்றன.மதிக்காமலோ,ஒதுக்கிவிட்டோ செய்யும் திருமணங்களில் தாங்கிப்பிடிக்க தூண்கள் இல்லாதது வேதனைதானே.....
நன்றிகள்.....

சரியான தீர்ப்பு அஸ் மொபைல் சர்வர் ப்ராப்ளம் உடல்நிலை சரியில்லாமையால் பட்டியில் அதற்கு மேல பங்கெடுக்கமுடியாமைக்கு வருந்துகிறேன் இரண்டு திருமணத்திலுமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் பிரிவேதும் நேராது திருமணமும் தோற்காது அதை அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும் அதில் சந்தேகமே இல்லை சரிதானே தோழிகளே தவறனால் மன்னிக்கவும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்