பட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது?

”திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா?பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?”

நல்ல தலைப்பு,அதுவும் இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் வாதிட வேண்டிய தலைப்புன்னு தோணிச்சு அதான் நம்ம தோழியரிடமிருந்தும் நிறைய வாதங்கள் வருமென்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளேன்..

தலைப்பை தந்த தோழி சுபாவிற்கு மிக்க நன்றி.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

அஸ்வினி... நல்ல தீர்ப்பு.காதல் திருமணங்கள் ஏன் தோற்கின்றன என்பதற்கு கொடுத்துள்ள காரணங்கள் அருமை.

//இருந்தாலும் காதலித்து கல்யாணம் செய்துக்கொண்டவர்கள் எத்தனையோ பேர் கணவணுக்காக தம் உணவு பழக்கங்களில் இருந்து,மதம் மாறி,இனம் மாறி,மொழி மாறி,பழக்க வழக்கங்கள் மாறி எத்தனையோ மாறுதல்களை செய்தாலும் உனக்காகத்தானே செய்தேன்” என்றுதான் கூறுகிறார்கள் அங்கு நம் காதலுக்காக மாறினதாக யாரும் இதுவரை சொல்லவில்லை..அதனால் அங்கே காதல் பொய்க்கிறது,தியாகம் செய்ததாக மனம் நினைக்கிறது.. நிம்மதி தொலைகிறது,பிரிவு ஏற்பட ஏதுவாய் உள்ளது.//

இந்த வரிகள் சூப்பர்.

முதன் முறையாக பட்டிக்கு நடுவராக வந்து,அழகான விளக்கங்களுடன் தீர்ப்பு கொடுத்து இருக்கீங்க.பாராட்டுக்கள்.

வெற்றிப்பெற்ற எமதணித்தோழிகளுக்கு வாழ்த்துக்கள்.அனைவரின் வாதங்களும் அருமை.

பட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மெர்சானா முதன் முறை கலந்து கொண்டாலும் நல்ல வாதங்களுடன் உங்க அணிக்கு பலம் சேர்த்தீங்க.பாராட்டுக்கள்.

வழக்கம்போல பட்டிக்கு பல தலைகளைக் காணோம்னாலும் பல புது தலைகள் வந்து கலக்கியது இப்பட்டிக்கு சிறப்பைத் தேடித்தந்தது;-)

என் திருமணம்தான் பெஸ்ட்டு உன் திருமணம்தான் பெஸ்ட்டுன்னு சண்டை போடாம எப்படியோ லாவகமா வாதாடி பட்டிய முடிச்சாச்சு;-)

//இது என் வாழ்க்கை நான் இவரைதான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்,என்று அப்பா,அம்மாவை தூக்கி எரிந்து பேசும் இடத்திலேயே அவர்களின் விட்டுக்கொடுத்தல் மறைந்துவிடுகிறுது..அதேப்போல் அப்பா,அம்மாவை புரிந்துக்கொள்ளாமல் தன் சுயநலத்திற்காக அவர்களை மாற்றும் பொழுதும் அவர்களின் புரிந்துக்கொள்ளாதனம் வெளிப்படுகிறது..இப்படி இவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொழுதே இப்படி வாழ்க்கைக்கு தேவையான இரு தூன்களை ஒதுக்கிவிட்டால் அவர்கள் வாழ்வில் எப்படி வெற்றிக்காண்பார்கள்?இப்படி நான்,எனக்கு,என்னுடையது என்ற எண்ணம் வந்தால் அங்கு மனிதன் வாழ முடியாது என்பது உறுதி. அப்படி எடுக்கும் முடிவு எப்படி இருக்க்க்கூடும் என்பதும் அனைவரும் அறிந்ததே.//

அஸ்வினி இதே கருத்தை நான் சொல்ல நினைத்தேன்...ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியாம விட்டுட்டேன் ...நீங்க சொல்லியிருக்கிற விதத்திலேயே சிறந்த நடுவர்னு நிருபிச்சீட்டீங்க ...பாராட்டுக்கள்;) இனி அடிக்கடி உங்கள பட்டி நடுவரா காணாலாம் சரிதானே;)

Don't Worry Be Happy.

உங்கள் பாரட்டுக்களுக்கு தலைவணங்குகிறேன்.நான் கொடுத்த விளக்கங்களில் ஏதேணும் தவறு இருந்துவிடுமோ என்ற அச்சத்துடன் தான் இன்று முதல் வேலையாக இங்கு வந்தேன்..ஆனால் நீங்கள் பாரட்டியுள்ள விதம் என் அச்சத்தை போக்கி உள்ளது.ஏதேணும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்,அடுத்த முறை சரிசெய்து கொள்கிறேன்.எனக்கு பக்கபலமாய் இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் நடுவராக வருவதைப் பற்றி இப்பொழுது எந்த அபிப்ராயமும் இல்லை,ஏனெனில் ஒரு பெரிய கடமை முடிந்த மாதிரி இருக்கு,அதான்.

இதுவும் கடந்துப் போகும்.

ரொம்ப அருமையா தீர்ப்பு கொடுத்துட்டீங்க!!! நான் பட்டியில் கலந்துக்க ரொம்ப ஆசைப்பட்டேன்... பாதியில் வந்ததால் முடியாமல் போனது... அதன் பின்னும் நெட் பிரெச்சனை கடந்த 4 நாட்களாக வர முடியாமல் சதி செய்து விட்டது. நல்ல ஒரு தலைப்பில் வாதிடும் வாய்ப்பை இழந்தது வருத்தமே. முதன் முதலாக நடுவர் பொறுப்பை ஏற்று அருமையாக பட்டியை நடத்தி, அழகாக தெளிவாக தீர்ப்பும் தந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கன்னிநடுவராக இருப்பினும் பட்டியை திறம்பட நடத்தி சிறந்தமுறையில் தீர்ப்பை வழங்கிய நடுவர் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து வாதாட முடியாமைக்கு வருந்துகிறேன். மிக விரைவில் ஒரு நல்ல தலைப்பில் உங்களை நடுவராக எதிர்பார்க்கிறேன்.

கன்னிநடுவராக இருப்பினும் பட்டியை திறம்பட நடத்தி சிறந்தமுறையில் தீர்ப்பை வழங்கிய நடுவர் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து வாதாட முடியாமைக்கு வருந்துகிறேன். மிக விரைவில் ஒரு நல்ல தலைப்பில் உங்களை நடுவராக எதிர்பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்