தீபாவளி ஷாஃப்பிங் - 2011

தீபாவளி ஷாஃப்பிங் பற்றி அரட்டுவோமா?வாங்க வின்டோ ஷஃப்பிங்காச்சும் பண்ணுவோம்.

முதல்ல குழந்தைக்கு.அது முடிஞ்சா பாதி வேலை ஓவர். இந்த தீபாவளிக்கு குழந்தைகளுக்கு எங்கே வாங்கலாம்? சீப் அன்ட் பெஸ்டா திநகர்ல எங்க கிடைக்கும்?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

தீபாவளி வந்தாச்சா? அறுசுவையில் தீபாவளி கலைகட்டுது. வாங்க வாங்க தோழீஸ் இந்த முறை என்னென்ன டிரெஸ் எடுக்க போறீங்க. எந்த மாடல் தைக்க போறீங்க பகிர்ந்துக்கலாம் ஜெயா ஆரம்பிச்சு வச்சுட்டாங்க நாமலாம் தொடரலாம்.

ஆமாம் ஜெயா குழந்தைகளுக்கு தான் முதலில் அவங்களுக்கு தான் எத்தனை சாய்ஸ் அதுவும் இந்த பெண் குழந்தைகளுக்குலாம் இருக்கற மாடல் பார்த்தா அய்யோ நாமளும் குழந்தைங்களாவே இருந்திருக்கலாமோன்னு தோணும் அவ்வளவு கலெக்ஷன்ஸ்.

நான் இன்னும் என்னுடைய தீபாவளி பர்ஷேஸ் ஆரம்பிக்கவே இல்ல டிசைட் பண்ணாவும். பண்ணியதும் நிச்சயம் வந்து சொல்றேன் எப்படியும் ஒரு சாரீ, சுடிதார் உண்டு அதை தவிர வேற என்னென்னு தான் யோசிக்கனும்.

டி வி யில் நாப்டால் விளம்பரம் வருதே அது உண்மையா யாரும் வாங்கீருக்கீங்களா ஏமாற்று வேலையா

தலைப்பை சரவணா ஸ்டோர்ஸ்,போத்தீஸ் 50 % தீபாவளி தள்ளுபடின்னு மாத்தினா கூட்டம் வருமா? இல்ல அமானுஷ்ய ஷாப்பிங்னு மாத்திடுவோமா(கல்பனா சும்மாச்சுகும் கோவிக்க வேணாப்பா)..ஷாப்பிங்கில் வீண் விரயம் தவிர்ப்பது எப்டினு போட்டால் இந்த பல்கிஸ் பொண்ணாவது வருவாங்க..சனிக்கிழமை எடுக்கனும் .அதுக்குள்ள வந்து சொல்லுங்க..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

சென்னை சில்க்ஸ் எப்படிப்பா சாரிஸ்ல சில்க் காட்டன் நல்லா இருக்கும்ப்பா,
மெருன், மஸ்டர்ட், ப்ளாக் நல்ல காம்பினேஷன்பா யாராவது ட்ரய் பண்ணுங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்