தேதி: September 28, 2011
வேக்ஸ்(wax)
க்ரையான்ஸ்
தேங்காய் எண்ணெய்
திரிநூல்
ப்ளாஸ்டிக் மோல்டிங்
எசன்ஸ் - ஜாஸ்மின், தாழம்பூ
மெழுகுவர்த்தி செய்வதற்கு தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு சில்வர் பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும். அதன் உள்ளே சிறிய பாத்திரத்தில் வேக்ஸை கொட்டி அடுப்பை ஆன் செய்யவும். தண்ணீர் நன்கு கொதிவந்ததும் வேக்ஸ் மெல்ல உருக தொடங்கும். ப்ளாஸ்டிக் மோல்டிங்கில் உள்ள ஒரு டிசைனுக்கு 3 மேசைக்கரண்டி அளவு வேக்ஸ் தேவைப்படும்.

வேக்ஸ் உருகி தண்ணீர் போல் வந்ததும் விரும்பிய க்ரையான்ஸ் நிறத்தை துருவி சேர்க்கவும். கரண்டி அல்லது கத்தியால் அவை கரையும் வரை கிளறி விடவும். க்ரையான்ஸ் எவ்வளவு சேர்க்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் தான் மெழுகுவர்த்தி நிறம் அமையும்.

அதில் விரும்பிய எசன்ஸை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

மற்றொரு நிறத்தில் செய்யவேண்டுமெனில் பாத்திரத்தை சுத்தமாக்கி எடுத்துக் கொண்டு மேற்சொன்ன முறையில் தயார் செய்யவும்.

வேக்ஸ் உருகி கொண்டிருக்கும் நேரத்தில் ப்ளாஸ்டிக் மோல்டிங் முழுவதும் தேங்காய் எண்ணெயை சற்று அதிகமாக தடவி வைக்கவும். அதிலுள்ள துளையில் திரிநூலை கோர்த்து அடியில் ஒரு இன்ச் இருப்பதுபோல் வைத்துவிட்டு மீதியை மோல்டிங் உள்ளே வைத்துவிடவும்.

ப்ளாஸ்டிக் மோல்டிங்கை பின்பக்கமாக திருப்பி திரிநூல் நுழைத்த பக்கத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றியப்பின் உருகும் வேக்ஸை அந்த திரியின் ஓரங்களில் துளைகள் எதுவும் தெரியாதவாறு அடைத்து வைக்கவும்.

க்ரையான்ஸூம், வேக்ஸூம் நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு திரிநூல் போட்டு தயாராக வைத்திருக்கும் மோல்டிங் நிரம்ப ஊற்றவும்.

சிறிது நேரத்தில் இறுக ஆரம்பிக்கும். 5 அல்லது 6 மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது நன்கு இறுகி மோல்டிங்கில் ஒட்டாமல் சற்று விலகி இருப்பதுபோல் இருக்கும்.

மோல்டிங்கில் ஊற்றிய மெழுகுவர்த்தி ஒரு மணி நேரத்தில் இறுகினது போல் தெரிந்ததும் அதனை அகலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குளிர்ந்த பிறகு தனியாக கழற்றி எடுத்துக் கொள்ளலாம். அதிக நேரம் வைத்து இருப்பதற்கு பதிலாக இதுப்போல் செய்யலாம்.

பின்பக்கத்தில் மெழுகுவர்த்தியால் அடைத்த பக்கத்தை சுரண்டி எடுத்து விட்டு மெழுகுவர்த்தியை தனியாக எடுத்து வைக்கவும்.

மெழுகுவர்த்திகள் தயார். மோல்டிங் இல்லையென்றால் ஏதாவது ஒரு சிறிய பாத்திரத்திரத்தை அச்சாக பயன்படுத்தி செய்யவும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் பளிங்கு கற்கள், பூ, பழத்துண்டுகள் ஏதாவது ஒன்றை கால்பாகம் வரை நிரப்பி டம்ளர் முழுவதும் தண்ணீர் ஊற்றி அதன் மேல் மெழுகுவர்த்தி மிதக்கவிட்டு ஏற்றி வைக்கலாம்.

Comments
நல்ல இருக்கு கண்டிப்பாக
நல்ல இருக்கு கண்டிப்பாக இன்னிக்கே முயற்சி பன்றேன், ரொம்ப நல்ல இருக்கு
இன்று வேளையை இன்றை முடிப்பது
அருமை
ரொம்ப சூப்பரா இருக்கு.
Jaleelakamal
டீம்
ரொம்ப நல்லா இருக்கு மெட்டிரியல்ஸ் கிடைச்சதும் கண்டிப்பா செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள் by Elaya.G
hi arusuvai team
Super craft.i like very much for colour combination and desin. keep it up.with regards.g.gomathi.
மெழுகுவர்த்தி
ரொம்பவும் அழகாக உள்ளது டீம் வாழ்த்துகள் நல்ல குறிப்பை குடுத்ததற்கு நன்றிகள் வேக்ஸ் மோல்டிங் எங்கு கிடைக்கும் தாம்பரத்தில் அல்லது சென்னையில் நான் இருப்பது குன்றத்தூரில் சொல்லுங்கள் தோழிகளே
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
மெழுகுவர்த்திகள்,
மெழுகு வர்த்திகளை இவ்வளவு சுலபமா செய்ய முடியுமா?ரொம்ப அழகா இருக்கு.ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கங்கள் எளிதில் புரியும்படி தெளிவா சொல்லி இருக்கீங்க.டிப்ஸ்களும் அருமை.வாழ்த்துக்கள்...அறுசுவை குழு.
மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி ரொம்ப அழகா இருக்கு.
இதுவும் கடந்து போகும்.
சுயதொழில் :)
வாவ்.....அருமையான விளக்கங்கள். எவ்வளவு எளிதில் மெழுகு செய்ய முடியுமா...எவ்வளவு சுலபமாக ஒரு சுய தொழிலை சொல்லிக் கொடுத்து விட்டீங்க.....பாராட்டுக்கள். கீப் அப் த குட் வொர்க்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
நன்றி
அருமை!! அருமை!! உங்களது டிப்ஸ் பயனுள்ள வகையில் உள்ளது. இதே போன்று இன்னும் பல பயனுள்ள டிப்ஸ்களை வழங்குங்கள்.
please response your parents.
மெழுகுவர்த்தி
ரொம்ப அழகா இருக்கு பத்மா & ரேவதி. கொஞ்ச காலம் முன்னாடிதான் ஒரு சகோதரி மெழுகுவர்த்தி செய்முறை கேட்டிருந்தாங்க இங்க. கொடுத்துட்டீங்க, பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
இவளோ ஈஸி ஹா
மெழுகுவர்த்தி இவளோ ஈஸி ஹா பண்ணலாமா? அழகா விளக்கி இருக்கீங்க. எப்பவும் போல சூப்பரோ சூப்பர்
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
அடடா மணக்கும் மெழுகுவர்த்தியா?
ஜாஸ்மின், லாவண்டர் எல்லாம் சேர்த்தது மெழுகுவர்த்தி எரியும் போது மணம் வரதுக்காகவா? ரொம்ப புதுமையா இருக்கு நான் இப்பதான் பாக்கறேன். செய்முறையும் ரொம்ப சுலபமா இருக்கு. அருசுவை டீம் க்ரேட்மா!!
Don't Worry Be Happy.
so easy and cute.thanx
so easy and cute.thanx aarusuvai team
hi
செய்முறை விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது.
ப்ளாஸ்டிக் மோல்டிங் எங்கு கிடைகும்
மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி செய்வது எப்படி? என்பதை
விருப்பமான விளக்கப்பட குறிப்புகள் பகுதியில் செற்பது எப்படி ?
ரேவதி, பத்மா
நல்ல பயனுள்ள குறிப்பு... பலர் பல நாள் தேடிய குறிப்பும் கூட. ரொம்ப சுலபமா அழகா செய்து காட்டி இருக்கீங்க. கலக்கல்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hello sir
hello arusuvai team how are?
meluku varthi sammanthamana details venaum please
contact address and your cel no
thanks
sir
sir i like this candle business, i want to start this business , so pls send
some candle prodection compant details contact no and address
எதையும் துனிந்து செய் அதையும்
எதையும் துனிந்து செய் அதையும் திரம்பட செய் என்ற வார்த்தைக்கு நிகராக உள்ளது உங்களுடைய ஊக்கம்