சர்க்கரை பொங்கல்

தேதி: September 28, 2011

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (11 votes)

 

பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
நெய் - 1/4 கப்
பச்சை கற்பூரம் (விருப்பப்பட்டால்)


 

அரிசி, பருப்பை களைந்து 7 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம், 1 கரண்டி தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துவிடவும்.
பச்சை வாசனை போனதும் பச்சை கற்பூரம், வெந்த அரிசி, பருப்பு கலவையை வெல்லத்தில் சேர்த்து சிறிது நெய் ஊற்றி கிளறவும்.
மற்றொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் தூளை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
பரிமாறும்போது பொங்கலின்மேல் 1 ஸ்பூன் நெய் ஊற்றி பரிமாறவும்.


பொங்கலில் எல்லா நெய்யையும் சேர்த்தால் பரிமாறுவதற்குள் அனைத்து நெய்யும் பொங்கலில் உறைந்துவிடும்.
அதனால் பரிமாறும்போது தட்டில் நெய் சேர்த்து பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

its nice.taste superb a iruku.and i need the receipe for gothumai halwa.can u help me?....

செய்து பார்த்து மறக்காமல் கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி :-)

இதில் நம் தோழிகள் செய்த கோதுமை அல்வா குறிப்புகள் இருக்கிறது. நானும் விரைவில் கோதுமை அல்வா குறிப்பு தருகிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/6296
http://www.arusuvai.com/tamil/node/13902
http://arusuvai.com/tamil/node/445
http://www.arusuvai.com/tamil/node/4548

KEEP SMILING ALWAYS :-)

நாகா....வாழ்த்துக்கள்.....இந்த குறிப்பில் ஒரு சின்ன திருத்தம்...அரிசி, பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் லேஸாக வறுத்து செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்...

அம்மா அப்படிதா செய்வாங்க ஆன்ட்டி. ஆனா நான் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கருக்கிடுவேன். அதுனால வறுக்காம செஞ்சு பார்த்தேன் நல்லா வந்துது. உடனே குறிப்பு அனுப்பிடேன்:-)

KEEP SMILING ALWAYS :-)