தாய் உள்ளம் செய்தது சரியா?

இது துபாயில் நேற்று நடந்த சம்பவம் iran தேசத்தை சேர்ந்த ஒரு தாய் தனது 5வயது மகனை வீட்டில் (maybeதூங்கி கொண்டிருக்கலாம்) விட்டு விட்டு,தனது 12 வயது மகளை பள்ளி பேருந்தில் அனுப்பி வைப்பதற்காக காலை 7மணிக்கு தான் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழே மகளுடன் நின்று கொண்டிருந்தார் அவர்கள் வசிப்பது 8வது மாடி குடியிருப்பில். (total 12 floor)
திடீரென்று அந்த தாய் மேலே பார்க்கும்போது தனது மகன் ஜன்னல் (glass window) கதவை திறந்து அதில் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் பதறி உடனே lift வழியாக மேலே சென்று தனது வீட்டை அடையவும் அந்த பையன் கீழே விழவும் சரியாக இருந்திருக்கிறது உடனே பதறி அடித்து கீழே வந்து பார்க்கும் போது தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் மகள் தனது தம்பியை பார்த்து கதறிக்கொண்டிருப்பதையும் பார்த்த அந்த தாய் திரும்பவும் மேலே தனது வீட்டிற்கு ஓடினாள்.4 நிமிடங்களுக்கு பிறகு சந்தேகமடைந்த security யும் மற்றவர்களும் மேலே சென்று பார்த்த போது அந்த தாயும் தனது மகன் விழுந்த அதே ஜன்னலில் இருந்து கீழே விழுந்து தனது உயிரையும் விட்டு விட்டாள் இத்தனைக்கும் ஜன்னல் மிகவும் சிறியது மிகவும் கஷ்டப்பட்டு தனது உடலை அதில் விட்டு உயிரை விட்டிருக்கிறாள்
இதில் எனது கேள்வி தனது கவனமின்மையால் மகனை கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வினால் அந்த தாய் இறந்தது மனதை வருத்தினாலும் தனது இன்னொரு மகளையும் கணவரையும் பற்றி அந்த நேரத்தில் யோசிக்காமல் செயல்பட்டது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
கடவுள் இன்னும் எனக்கு அந்த தாய்மை பாக்கியத்தை தரவில்லை அதனால் எனக்கு புரியவில்லையோ நீங்களே பதில் சொல்லுங்கள்
தோழிகளே

ஐயோ ரொம்ப கொடுமையான சம்பவமா இருக்குங்க அவசரத்துல எடுக்குற முடிவுங்க இதெல்லாம் நமக்கு அந்த நேரத்துல யோசிக்க தோணாது இப்படில்லாம் யாருக்குமே நடக்க கூடாது.வேற சொல்ல தெரில ரொம்ப கஷ்டமா இருக்கு இத கேள்வி பட்டது by Elaya.G

இதை படித்துவிட்டு பதில் போடாமல் இருக்க முடியல... என்ன கொடுமை இது... ரொம்ப கஷ்டமா இருக்கு... உணர்ச்சிவசப்பட்டு அந்த பெண் குழந்தையை பற்றி யோசிக்காம விட்டுட்டாங்களே.... :(( இது போல சம்பவங்கள் எல்லாம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.... ஒரு நொடி கூட குழந்தைகள் விஷயத்துல அசால்டா இருக்க கூடாதுன்னு இதுல இருந்து தெரியுது... என்ன சொல்றதுனே தெரியல.... :((

வித்யா பிரவீன்குமார்... :)

எனக்கும் இந்த பதிவை பாத்துட்டு சும்மா போக மனசு இல்ல வித்யா சொல்வது ரொம்ப சரி அது மட்டுமில்ல யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவும் சந்தோஷத்தை தராது ஒரு பிள்ளையை நினைத்த அந்த தாய் தன் இன்னொரு பிள்ளையை நினைக்கலயே அதும் பெண் பிள்ளை அல்லவா ரொம்ப கொடுமையான் சம்பவம் கேட்கும் போதே கஷ்டமா இருக்கு அங்கு இருந்த உங்களுக்கு நிச்சயம் கஷ்டமா இருக்கும்....

என்ன கொடுமையான சம்பவம் இதை படித்து ஒரு மணிநேரம் ஆச்சு இன்னம் நெஞ்சுலாம் பட படன்னு இருக்கு அந்த தாய் எப்படி துடுச்சுருப்பாங்க
பிள்ளைகள் விசயத்தில் ரெம்ப ரெம்ப கவனமா இருக்கனும் என்பதற்க்கு இதை விட சம்பவம் தேவை இல்லை
இனி பெண் குழந்தை நிலமை அல்லாஹ் அருல் புரிவானாக ஆமீன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அந்த தாயோட மனநிலை எங்களுக்கும் புரியுது.. ஆனால் அதன் பின்விளைவுகளைப்பற்றி யோசிக்காது அவங்க எடுத்த இந்த முடிவு நிச்சயம் தப்பானது தான்.. ஒரே நேரத்தில் கண் முன் நடந்த இந்த இரண்டு அகோர மரணங்களும் அந்தப்பெண்குழந்தை மனதை எப்படிப்பாதித்திருக்கும்... வாழ்க்கையில் எல்லோரும் தவறுகிற இடம் உணர்ச்சிவசப்படுதல் தான்... அதை நம்ம கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கணும் .. இல்ல.. இப்பிடியான அசம்பாவிதங்களை தடுக்க முடியாமலே போய்விடும்..

இதென்ன வயித்தெரிச்ச கொடுமையா இருக்கு படிக்கவே பயமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு அந்தபையனாவது தெரியாமல் விழுந்துட்டான் இந்த அம்மா என்ன சிந்திச்சிச்சோ இப்படி தெரிஞ்சே விழுந்து தனக்கு மற்றும் குடும்பத்தினருக்கும் கேடை ஏற்படுத்திடுச்சு மிகவும்கொடுமையை தனது அடுத்த மகளுக்கு ஏற்படுத்திட்டு போயிருச்சு அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாத்தனும்

அம்மா சில நாளோ ஏன் சில மணிநேரம் கூட காத்திருக்கவில்லை சிந்திக்க, அடுத்த கனமே அந்த முடிவுக்கு வந்திருக்க்கிறார்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் நமக்கு அவங்க ப்ரச்சனை என்னவென்று தெரியாது...சில வீட்டில் கணவன்மார்கள் மனைவியை குற்றப்படுத்துவார்கள் அந்த பயத்தில் கூட செய்திருக்கலாம்..இப்ப உயிரோட இருந்தாலும் மத்தவங்க சும்மா விட்டிருப்பாங்களா உன் அஜாக்கிரதையால் மகன்இறந்துவிட்டான் என்பார்கள்...அந்த பெண் குழந்தையின் மனநிலையை நினைத்தால் ரொம்ப வேதனையாக இருக்கு...அவரும் இதை பற்றி சிந்தித்திருக்க வாய்ப்பில்லை ஐந்து வயது என்பது அப்படி ஒன்னும் புரியாத வயதல்ல...தூங்கும் குழந்தை பள்ளி வேனில் பெரிய பொண்ணை விடுவதற்குள் எழுவான் என்று நினைத்திருக்க மாட்டார்..அப்படியே எழுந்தாலும் அவங்க பாட்டுக்கு உக்காந்திருப்பாங்க..அதுக்கு நேரம் ,இப்படி செய்து விட்டது.இதில் நமக்கு பெரிசா ஒன்னும் செய்வதற்கில்லை..நமக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்

மேலும் சில பதிவுகள்