இரத்த தானம் செய்யலாமா

ஹாய் தோழிஸ் இரத்த தானம் செய்யனும்ன்னு ஒரு பத்து வருடமா நினைத்து கொண்டே இருக்குறேன்

இப்போ அதுக்கு சரியான நேரம் வந்து விட்டது எங்கே குடுப்பது என்று இடம் சரியான தகவல் கிடைத்து விட்டது என் தோழி தனம் மூலியமாக.......................
அதிக்கிடையில் ஒருத்தங்க சொல்ராங்க இரத்த தானம் குடுத்தா பிரஸர் ஏறிரும் என்றும் உடல் எடை அதிகரித்து விடும் என்றும் அது உண்மையா வேர ஏதும் பிறச்சனை இருக்கா ந்ன்மை தீமை தோழிகள் இடமே கேப்போம் என்று வந்து விட்டேன் விபறம் தெறிந்த தோழிகள் வந்து சொல்லவும்

கொடுக்கலாம்னு நினைக்கிரேன் ஏன்னா யாருக்கு என்ன என்ன எந்த எந்த விதத்தில் தேவையோ அதைத்தான் கொடுக்கிரார்கள்
இரத்தம் எடுக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் ஒவ்வொன்றும் தனியே பிறிக்கப்பட்டு கலெக்ட் பன்னி சேமித்து வைக்கிரார்கள் உதாரணம் இரத்த சிவப்பு அனுக்கள்,.இரத்த தகடுகள் மற்றும்இரத்த வெள்ளை அணுக்கள்
இவைகள்யாருக்கு என்ன தேவையோ அதை கொடுப்பார்கள்
லுகீமியா,. அனிமிக்,. புற்றுனோய் போன்ற நோய்களுக்கு உபயோகப்படும்

நான் கேள்விய கவனிக்கலை ஓ அப்படி சொறாங்களா தெரியலையே

உங்க ரத்ததில் ஹீமோகுலோபின் அளவு 14 பெர்சென்ட் இருக்கான்னு பாத்துக்கோங்கஇருந்தா தாராளமாக கொடுக்கலாம்னு நினைக்கிரேன் 9 க்கு கீழே இல்லாமல் இருக்கனும்

யாரும் மெடிக்கல் லைன்ல படிச்சவங்க இருக்கீங்களா வந்து பதில் சொல்லுங்கப்பா

கடந்த 6 வருஷமா நான் இரத்த தாணம் செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன்,(எனக்கு பெரிசா ஒரு பிரச்சனையும் இல்லை)எனக்கு உங்க கேள்விக்கு கரெக்டா பதில் சொல்ல தெரியலை..ஆனா டொனேட் பண்ணா ப்ரஷர் வரும் அப்படி இப்படின்னு விடற டூப்பெல்லாம் நம்பாதீங்க..பார்க்க போணா இரத்தம் கொடுத்தா நமக்கு புது இரத்தம் சுரக்கறதால நாம புத்துணர்ச்சியாத்தான் இருப்போம்..கவலைப்படாதீங்க..நல்லதை செய்ய ரொம்ப யோசிக்காதீங்க..நீங்க பிரக்ணெண்டா,பீடிங் பண்ணா,சுகர் இருந்தா,பீரியட்ஸ் இருந்தா கொடுக்க வேண்டாம்..என் திங்கிங்க ஷேர் பண்ணிக்கிட்டேன்..இதைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் யாரேணும் வந்து இதுப்பற்றி சொல்வார்கள்..

இதுவும் கடந்துப் போகும்.

என்னது 6 வருஷமாவா
எவ்வளவு கொடுத்தீங்க சற்று விளக்கம் தேவை
மற்ற விபரங்களும் தேவை

பசரியாக்கா அஸ்வினி நன்றி
எனக்கும் அது டூப்பா இருக்குமோன்னு ஒரு சந்தேகம்தான்
ஆனா படிச்சவுங்க அனுபவசாலிகள் சொன்னா உதவி செய்ரதை உண்மையா செய்யலாமுல அதான் தோழிகளிடம் தெளிவு படுத்திக்கலாம்ன்னுதான்ப்பா
அதான் அஸ்வினி 6 வருடமா குடுத்தாதாக சொல்ரீயேப்பா
வேர தோழிகலும் கொஞ்சம் சொல்லிட்டா திங்க கிழமை குடுத்துடுவேன்

பசரியாக்கா நீங்க சொன்னதும் எனக்கு ரெம்ப புரியலை ஆனா நல்ல விசயமாத்தான் இருக்கும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இரத்த தானத்தை பத்தி இன்னும் கொஞ்சம் டீடெய்ல் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா என்ன வயசுல இருந்து என்ன வயசு வரைக்கும் தரலாம் அவங்க ஹெல்த் கண்டிஷன் எப்டி இருக்கணும் எங்கெல்லாம் ப்ளட் தரலாம் அதாவது ப்ளட் பேங்கில் மட்டுமா அல்லது ஹாஸ்பிட்டலில் மட்டுமா இது போன்ற விவரங்கள் கூறவும் தோழிகளே பிறர்க்கும் உதவியாக இருக்கும் பயாலஜி மைக்ரோ பயாலஜி ஸ்டூடண்ஸ் மெடிக்கல் லைனில் இருப்பவர்கள் இருந்தால் தெளிவு படுத்தவும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மன்னிக்கவும் சர்வர் ப்ராப்ளம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வருஷத்துக்கு ஒரு தடவை..மொத்தமா 7 தடவை கொடுத்து இருக்கேன்..ஒரு தடவை நான் o+veங்கறதால இங்க ஒருத்தருக்கு அவசரமா தேவைப்பட்டதால் எல்லா இந்தியன்ஸும் கொடுத்தோம் அப்ப ரெண்டாவது தடவை கொடுக்க வேண்டியதா போயிடுச்சு..ஒவ்வொரு தடவையும் 400மிலி எடுப்பாங்க..அவ்வளவுதான்...எனக்கு இதுவரை ஒண்ணும் வேறுபாடு தெரியலை,கொடுத்த அன்னிக்கு மட்டும் எனக்கு டையர்டா இருக்கிற மாதிரி இருக்கும்(பிரம்மை)..ஆனா நம்மதானே வேலை பண்ணனும்..வேற ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்லை..

உங்க பேரை சேர்த்துட்டேன்,சமைச்சுட்டு வாங்க அரட்டைக்கு..

இதுவும் கடந்துப் போகும்.

•ரத்ததானம் செய்வதால் உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கும் என்ற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த அச்சம் தேவையற்றது. உண்மையில் ரத்ததானம் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ஏனெனில் உடலுக்கு பாதிப்பு தராத அதிகப்படியான ரத்தமே தானமாக செய்யப்படுகிறது. தானம் செய்தவுடன் புதுரத்தம் தானாகவே ஊறத் தொடங்கிவிடுவதால் விரைவில் ஈடுகட்டப்பட்டுவிடும்.

•எந்த விதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே பாதுகாப்பான ரத்தம் எனப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான ரத்தமே வழங்கப்படுகிறது. எனவே தானம் செய்பவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டு பெறப்படுகிறது. இது தானம் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் பாதுகாப்பை தருகிறது. உயிரைக் காக்கிறது. பாதுகாப்பற்ற ரத்தம் உயிருக்கு கூட உலை வைக்கலாம்.

•மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரத்ததானம் செய்யக்கூடாது. பால்வினை நோய், மஞ்சள்காமாலை பாதிக்கப்பட்டவர்கள் ஓராண்டு காலமும், காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற 5 ஆண்டுகள் வரையும் ரத்ததானம் செய்யக்கூடாது. ரத்தம் ஏற்றிக்கொண்டவர்கள் ஓராண்டும், எய்ட்ஸ், இதயநோய், சிறுநீரக நோய், தைராய்டு, வலிப்பு நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

•பாதுகாப்பற்ற ரத்தத்தின் மூலமாக எச்.ஐ.வி., ஹெப்படிடிஸ் பி, சி வகை மஞ்சள் காமாலை நோய்கள், பால்வினை நோய், மலேரியா நோய்கள் பரவுகின்றன. எனவே சரியான பரிசோதனை இல்லாமல் ரத்ததானம் செய்யவோ, ரத்தம் பெறவோ கூடாது. இதனால்தான் நோய் பாதிப்புள்ளவர்கள் தானம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு சரிவர இல்லாததால் அவர்களும் ரத்ததானம் செய்ய முடியாது.

•அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ரத்ததானம் அளிக்கலாம். அங்கு ரத்ததானம் வழங்குபவர்களுக்கு முதலில் ஆலோசனை வழங்குவார்கள். பிறகு விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும். எடை, ஹீமோகுளோபின் அளவிடுதல், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சோதனை, கல்லீரல், நுரையீரல் நிலை ஆகிய பரிசோதனைக்குப் பின் ரத்ததானம் பெற்றுக் கொள்ளப்படும்.

•ரத்ததானம் பெறும்போது ஒருவரிடம் இருந்து 350 மில்லி ரத்தம் எடுக்கப்படும். இது மீண்டும் ஒரு மாதத்தில் உற்பத்தியாகிவிடும். 90 நாட்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம். சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதால் தொற்று நோய் ஏற்படாது. ரத்ததானம் செய்யும்போது வலி ஏற்படாது. ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் அன்றாட பணிகளை தொடங்கிவிடலாம்

i think this is enough for you and this is refered by one daily news paper
take care

Regards,
Rajeshwarianantharaman

Mrs.Anantharaman

ராஜேஸ்வரி ரெம்ப நல்லா சொல்லி இருக்கீங்க நீங்க பதில் குடுத்தமைக்கு ரெம்ப சந்தோஸம் இன்ஸாஹ் அல்லாஹ் அடுத்த வாரம் குடுத்து விடுவேன்
ரெம்ப நன்றி
அதாவது இரத்தம் குடுத்தா இரத்தம் ரெம்ப ஊரி வெயிட் ரெம்ப போட்டுடும்ன்னு சொன்னாங்க அதான் கொஞ்சம் பயம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்