கனவு காணுங்கள் நிஜமாகும்

அன்புதோழிகளுக்கு வணக்கம். நமது முன்னாள் குடியரசு தலைவர் Dr.A.P.J.அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களை கனவு காணுங்கள் நிஜமாகும் என்று சொல்லியிருக்கிறார். அதனால், அன்புள்ளம் கொண்ட தோழிகளே(தாய்மார்களே/தாய்மையை எதிர்பார்க்கும்) தங்கள் குழந்தைகளை என்னவாக உருவாக்க விரும்புகிறீர்கள் என்று இங்கே சொல்லுங்கள். அதற்கு என்னவிதமான பயிற்சி அளிக்கிறீர்கள்? குழந்தைகளை அவங்க விருப்பபடி படிக்கவைப்பது நல்லதுதான். இருப்பினும், பெற்றோரின் வழிகாட்டுதல் அவசியமில்லையா?

தோழிகளே, என் குழந்தையை மகப்பேறு மருத்துவருக்கு படிக்கவைக்கணும்னு நினைக்கிறேன். சேவை மனப்பான்மையோட வளர்க்கணும்னு ஆசைபடுறேன். கேள்வி கேட்டா டாக்டர்ஸ் தெளிவா பதில் சொல்லமாட்டேங்குறாங்கப்பா!

சத்தியமா என் பிள்ளைகள் எப்படி ஆக வேண்டும் என்று எனக்கு ஆசையோ கனவோ இல்லை..நல்ல பிள்ளைகளாக ஒழுக்கமாக வளர வேண்டும் கடைசி வரை பெரியவங்க தாய்தந்தையர் பேச்சை கேட்டு யாரிடமும் கெட்ட பேர் வாங்காமல் இருக்க வேண்டும்..ஆசையே இல்லைன்னு சொல்லிட்டு இத்த பெரிய ஆசைய சொல்றேனு பாக்கறீங்களா...இதுவெல்லாம் ஒழுங்கா இருந்தாலே அவர்களுடைய வருங்காலமும் சிறப்பாக இருக்குமென்ற நம்பிக்கை தான்

மருத்துவர்
இப்ப உள்ள குட்டீஸ்க்கு நல்லா தெரியும்போல வருங்காலத்தில் மருத்துவர்கள் தேவை படும் என்று
என்பொண்ணு என் கனவே டாக்டர்தாம்மா என்பால் அது சொல்லேல அழுகையே வந்துரும் அவளுக்கு
என் மூண்ரு வயது சின்னவர் பெயர் என்னன்னு கேட்டாலே யூசூஃப் டக்டர்தான் சொல்லுவர் டாக்டர் சேக்காம பெயர் சொன்னா அவருக்கு கோவம் வந்துடும்
எனக்கும் என் பெரிய பயனை போலிஸ் அதிகாரியாவும் என் பொண்ணை டக்டராவும் என் சின்னவனேயும் டாக்டரா ஆக்கி இந்த நாட்டு பிரத்மரா ஆக்க ஆசை [சிரிக்காதிங்க] நல்ல ஒலுக்கமும் பன்பும் ஓதுவதில் திறமையும் நல்லதை மட்டுமே போற்றி வழக்க ஆசை படுகிறேன் தோழி ப்ரியா செந்தீல்

குழந்தைகளுக்கு ஒழுக்க விதிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணும் முன் கை, கால்களைக் கழுவுவது, நகம் கடிக்காமல் இருப்பது, பணிவோடு நடந்து கொள்வது, ஷூவையோ செருப்பையோ கழற்றினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீசி எறியாமல் அழகாக அடுத்தடுது வைப்பது என எல்லாமே ஒரு வகை ஒழுக்கம் தான். இவ்வாறு வளர்க்கப்பெறும் குழந்தைகள் எதிர்காலத்தில் நேர்மையோடு வாழவும், பிரச்னைகள் வந்தாலும், அவற்றை எதிர் நோக்கிப் போராடவும், வெற்றிபெறவும் செய்கின்றன.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பெற்றோராய்க் கனவு காணுங்கள்; அன்பாக வழிகாட்டுங்கள். ஓரளவுக்கு மேல் எதையும் குழந்தைகள் மேல் திணிக்க வேண்டாம். குழந்தைப் பருவம் போனால் வராது. அவர்களுக்கும் கனவு இருக்கும்; குழந்தைக் கனவு. அவை மறுக்கப்பட்டால் மனது உடைந்து போகும்.

புரிந்து கொள்ளும் பருவத்தில் எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை முடிவு செய்ய விடுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயத்தில் ஆர்வம் இருக்கும். எல்லோராலும் எல்லாம் இயலாது. அவர்கள் ஆர்வத்தைப் பொறுத்து ஒரு துறையைத் தெரிந்து மேலே வர உதவலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்