கிரீன் சுண்டல்

தேதி: October 2, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஊற வைத்த பச்சை பட்டாணி: 1 கப்
முளைக்கட்டிய பச்சைப் பயிறு: 1/2 கப்
இஞ்சி : 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் : 1
மல்லித்தழை
உப்பு: தேவையான அளவு
தேங்காய் துருவியது : 2 மேஜைக்கரண்டி
கடுகு: தாளிக்க
கருவேப்பிலை:1 கொத்து
பெருங்காயம் : 1 பின்ச்


 

பச்சை பட்டாணி, பச்சைப்பயிறு இரண்டையும் குக்கரில் உப்பு,போதுமான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய் மிக்சியில் ஒரு சுத்து சுத்தி அரைக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை,பெருங்காயம்,அரைத்த பச்சைமிளகாய் இஞ்சி கலவை, கொத்தமல்லி தழை,உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி தேங்காய் சேர்த்து சிறிது வதக்கி வேகவைத்த பயிறு வகைகளைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.
சுவையான கிரீன் சுண்டல் தயார்.


மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. பிக்னிக் செல்லும்போதும் எடுத்து செல்லலாம். குழந்தைகளுக்கு நன்கு வேகவைத்து சிறிது மசித்து பின்பு தாளித்து கொடுக்கலாம். சிறிது மசித்து கொடுப்பதால் அவர்களுக்கு சாப்பிட எளிதாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

kadaigalil kidaikum masala sundal eappdi seivathu endru yaarkkavathu theriuma?sollunga plz...............

ஜெயலக்ஷ்மி,
இன்று கிரீன் சுண்டல் செய்தேன்...பட்டாணி இல்லாமல் வெறும் முளைக்கட்டிய பச்சைப் பயிறு வைத்து தான் செய்தேன்... மிகவும் சுவையாக இருந்தது :)
மிக்க நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)