
தேதி: June 29, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தமிழகத்தைவிட கேரளாவில் ஆப்பம் மிகவும் பிரபலம். செய்வதற்கு தோசைப் போல் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் வந்துவிடாது. இதற்கு மாவின் பதம், புளிப்புதன்மை மிகவும் முக்கியம். ஆப்பம் செய்வதற்கென விசேஷ ஆப்பச்சட்டிகள் பலவிதங்களில் விற்பனைக்கு வருகின்றன. Non-stick ஆப்ப கடாய் வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
பச்சரிசி - 3 3/4 கப்
பழைய சாதம் - 3 கப்
தேங்காய் பூ - 1 1/2 கப்
சீனி - 3 மேசைக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
<b>தேங்காய் பால் எடுக்க தனியாக:</b>
தேங்காய் பூ - ஒரு கப்
சீனி - அரை கப்











பழைய சோறு சேர்ப்பதால் மாவு நன்கு புளித்து பொசபொசவென்று வரும். ஆப்பம் ஊற்றி எடுப்பதற்கும் வசதியாய் இருக்கும்.
Comments
Sir,
Sir,
பலமுறை சாப்பிட்டு பழக்கப்பட்ட இந்த ஆப்பத்தை, உங்களின் போட்டோவில் பார்த்தவுடன் வாய் ஊறுகிறது! Digital camera - வில் போட்டோ எடுக்கிறீர்களா? உங்கள் தளத்தில் போட்டோ இணைப்பதற்கு எந்த சைஸில் செட் பண்ணி எடுக்கவேண்டும்? தெரிஞ்சிக்கலாமா?
சகோதரிக்கு நன்றி
படங்கள் அனைத்தும் Digital camera வில்தான் எடுக்கப்படுகின்றன. இங்கே "யாரும் சமைக்கலாம்" பகுதியில் இடம்பெறும் படங்கள் அனைத்தும் 200 X 150 pixels என்ற அகல, உயர விகிதத்தில் உள்ளன. படங்கள் எடுப்பதை நீங்கள் எந்த Resolution ல் வேண்டுமானாலும் வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அவற்றை Photoshop அல்லது வேறு எதாவது Image editing tool கொண்டு இந்த சைஸிற்கு மாற்ற வேண்டும். அது சுலபமானதுதான். இந்தப் படங்களுக்கான file size நிர்ணயிக்கப்படவில்லை. குறைவாக இருப்பின் விரைவில் load ஆகும். ஒவ்வொரு படமும் 10KB என்ற அளவிற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றோம். கட்டாயம் இல்லை.
மற்றபடி, சாதாரண குறிப்புகளில் இடம் பெறும் படங்கள் தற்போது 160 X 250 என்ற அகல, உயர விகிதத்தில் உள்ளன. அதாவது அகலம் 160 px அதிகப்பட்சமாக. உயரம் 250 px அதிகபட்சமாக. File size 15 KB ஐ தாண்டக்கூடாது. இந்த நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் உங்களிடம் படங்கள் இருந்தால், அதனை நீங்கள் குறிப்புகள் அனுப்பும் பக்கத்தின் மூலமாகவே நேரிடையாக சேர்த்துவிடலாம். அந்தப் பக்கத்தின் கடைசியில் படம் சேர்க்க என்று ஒரு இணைப்பு உள்ளது.
இந்த 160 x 250 px என்ற அளவு போதுமானதாக இல்லை என்பதை உணருகின்றோம். அந்தப் படங்கள் விளம்பரங்களுக்கு ஔஅருகில் வருவதால், அவ்வளவுதான் அதிகப்பட்சமாக கொடுக்க முடிந்தது. விளம்பரத்தை மாற்றி, படத்தின் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அப்படி செய்தவுடன் தங்களுக்கு தெரிவிக்கின்றோம். அப்போது பட அளவு மாறுபடும்.
அளவுகளை மாற்றுவது கடினமாக இருப்பின், நீங்கள் எடுக்கும் படங்களை அப்படியே எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வையுங்கள். அவற்றை நாங்கள் தேவையான அளவிற்கு மாற்றி, நீங்கள் சொல்லும் குறிப்பில் இணைத்துவிடுகின்றோம். மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது மிகவும் பெரிய size file ஆக அனுப்பவேண்டாம். நாங்கள் இன்னமும் 56 Kbps என்ற Dial up connection ல் தான் இருக்கின்றோம். படங்கள் download ஆக மிகுந்த நேரம் எடுக்கும்.
நன்றி
உடனுக்குடன் தெளிவான பதில் கொடுத்த இணையத்தாரே! மிக்க நன்றி!
இதில் உள்ள
இதில் உள்ள முறைப்படி நான் அப்பம் செய்துபார்த்தேன், மிக நன்றாக வந்தது. எனது நண்பர்களும் இம்முறையில் செய்து அப்பம் நன்றாகவந்துள்ளது. இச்செய்முறையைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
நான்
நான் செய்தேன் நனறாக இருந்தது.ஆனால் கொஞ்சம் ரப்பர் தன்மை போல வருகிறது.நான் எப்போது செய்தாலும் சிறிது
ரப்பர் தன்மை இருக்கிரது.இதுவும் ட்ரை செய்தும் அப்படி தான் வருகிறது.அரிசி ஒரு காரணமாக இருக்கலாமா? பழைய சாதம் புழுங்கள் அரிசி சாதம் போடனுமா?
sajuna
ஆட்டுக்கால் பாயா
ஆட்டுக்கால் பாயா என்றால் என்ன?அதை எப்படி செய்வது.நன்றி.
டியர் கவிதா!
ஆட்டுக்கால் பாயா என்பது குழம்பு வகையை சேர்ந்தது. பரோட்டா, இடியப்பம், ஆப்பம் போன்றவற்றுக்கு இது ஒரு அருமையான சைட் டிஷ்!என்னுடைய குறிப்புகளில் சேர்த்துள்ளேன். ட்ரை பண்ணி பாருங்கள். நன்றி!
இந்த பக்கத்தை க்ளிக் செய்யவும்!
http://www.arusuvai.com/tamil/node/2346
ஆப்பம்
ஆப்பம் மாவு மீதமாகிவிட்டால் அதை fridge-ல் வைத்துவிட்டு மறுநாள் ஆப்பம் பண்ணினால் ஆப்பம் நன்றாக வருமா?
santheham
pachchari illamel powder maawa use pannalama ithula palaya sathatha podanuma pulekka ist podalama
ean en kelwekku yarum reply tharalla
anunissa
ஹாய்
ஹாய் நான் இங்கே உள்ள முறையில் ஆப்பம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது....நன்றி..
அன்புடன்
ஷராபுபதி
appam
instead of left over rice, we can use aval. this is best idea,good for health also.i tried,it is nice.
appam
instead of left over rice, we can use aval. this is best idea,good for health also.i tried,it is nice.
appam
instead of left over rice, we can use aval. this is best idea,good for health also.i tried,it is nice.