வாழைப்பூ கூட்டு குழம்பு

தேதி: October 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

வாழைப்பூ - 4 மடல்
துவரம் பருப்பு, பாசி பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
பூண்டு - 8 பல்
மிளகாய் - 1
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்

கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு


 

பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும்.
பூவை பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
பூண்டு, மிளகாய், சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பூ, பருப்பு கலவை, தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.


இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
சற்று கெட்டியாக செய்து சாம்பார் சாதம், பூண்டு ரசம், மிளகு ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்