'டைனோஸர்' கொழுக்கட்டை

தேதி: October 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

இது சாதாரண கொழுக்கட்டைதான். டைனோஸர் உருவில் செய்ததால் என் மகள் வைத்த பெயர் 'டைனோஸர் கொழுக்கட்டை" ....:)

 

ஷெல் செய்வதற்கு:
அரிசி மா - 2 கப்
உப்பு
பூரணத்திற்கு:
வறுத்து குற்றிய பயறு - 1 1/2 கப்
சர்க்கரை - அரை கப் அல்லது சுவைக்கேற்ப
தேங்காய்ப்பூ - அரை கப்
ஏலக்காய் - 3 - 4 எண்ணிக்கை


 

பூரணம் செய்ய: பயறை தண்ணீர் ஊற்றி அவித்து அதனுள் தேங்காய்ப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
சிறிது குழைவாக வந்ததும் இறக்கி ஆற விடவும்.
ஷெல் செய்ய: அரிசிமாவுடன் உப்பு சேர்த்து கலக்கி பின்னர் இதனுள் கொதிநீர் ஊற்றி மர அகப்பையால் குழைக்கவும். மாவை சப்பாத்தி பதத்திற்கு திரட்டி வைக்கவும்.
பின்னர் எலுமிச்சம் பழம் அளவு சிறு உருண்டைகளாக உருட்டி ஈர துணியால் மூடி வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் சிறிய கிண்ணம் போல செய்யவும்.
பின்னர் இதனுள் ஒரு மேசைக்கரண்டியளவு பூரணத்தை வைத்து மூடவும்.
விளிம்பை கையால் சிறிய பல்லு போல மடித்து இரு விரல்களால் அழுத்தி விடவும்.
இவ்வாறு ஏனையவற்றையும் செய்து ஆவியில் அவித்து எடுக்கவும். சுவையான கொழுக்கட்டை தயார்.
'டைனோஸர்' கொழுக்கட்டை: சாதாரண கொழுக்கட்டைக்கு மடிப்பது போல மடித்து ஓரத்தை பல்லு போல கூராக அழுத்தி விட்டு வால் பகுதியை சிறிது நீளமாகவும் மேல் நோக்கியும் வளைத்து விட்டு தலைப் பகுதியை மழுங்கலாகவும் அழுத்தி ஆவியில் அவித்தெடுக்கவும். குழந்தைகள் உருவத்தைப் பார்த்தே சாப்பிட ஆசைப்படுவார்கள்.
பல்லு கொழுக்கட்டை 1: தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் மடித்த கொழுக்கட்டையின் ஓரத்தில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை பதித்து ஆவியில் அவித்தெடுக்கவும். இலங்கையில் இதனை குழந்தைகளிற்கு முதல் பல்லு முழைத்ததும் கும்பம் வைத்து படைப்பதற்கு செய்வார்கள்.
பல்லு கொழுக்கட்டை 2: மாவையும் பூரணத்தையும் சிறிது சர்க்கரை/சீனி சேர்த்து பிசையவும்.
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பெருவிரலால் நடுவில் அழுத்தி அதனுள் ஒரு தேங்காய்த் துண்டை வைத்து அழுத்தி ஆவியில் அவித்து எடுக்கவும். இதனை பல்லு முளைத்த குழந்தைகளின் தலையில் கொட்டுவதற்கு செய்வார்கள்.
பிடிக்கொழுக்கட்டை 1: பின்னர் ஒரு கைப்பிடி மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களை மடித்து அழுத்தி பிடித்து பின்னர் ஆவியில் அவித்து எடுக்கவும்.
டைனோஸர்' பிடிக்கொழுக்கட்டை: சாதாரண பிடிக்கொழுக்கட்டைக்கு பிடிப்பது போல பிடித்து வால் பகுதியை சிறிது நீளமாகவும் கூராகவும் அழுத்தி விட்டு தலைப் பகுதியை மழுங்கலாகவும் அழுத்தி ஆவியில் அவித்தெடுக்கவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எக்ஸலண்ட் வாரே வா.....!

வாழ்த்துக்கள்

Don't Worry Be Happy.

நர்மதா,
எளிமையான குறிப்பு,அழகான Presentation
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அழகான படங்கள் குட்டீஸ்கு பிடிக்கற மாதிரி தான் இருக்கு டிசைன்லாம் அழகா இருக்கு விளக்கமும் அருமை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குறிப்பு, படங்கள் எல்லாமே கலக்குது நர்மதா. ;)

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு கொழுக்கட்டை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன சொல்ல நர்மதா!!!!!!!!!!!ஒரு மாவு & ஒரு பூரணத்தைக் கொண்டு இப்படி விதவிதமா செஞ்சி அசத்திட்டீங்க!அதிலும்,பல்லு கொழுக்கட்டை டிசைன் சூப்பர்!வாழ்த்துக்கள்!

Eat healthy

நர்மதா,
ஒரே இன்கிரிடியென்ட்ஸ் வைத்துக்கொண்டு, அழகழகா, அசத்தலா பலவிதமான கொழுக்கட்டைகளை செய்து காண்பித்திருக்கிங்க! கலக்கலா இருக்கு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

Awesome! Simply superb. Thanks for sharing.

99% Complete is 100% Incomplete.

ப்ரெசன்டேஷன் அருமையாக இருக்கு. அதுவும் இந்த தேங்காய் பல் பதித்து வைத்திருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அனாலும் இப்போயிருக்கும் குழந்தைகள் என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்க. உங்க வீடு சுட்டி சூட்டிய பெயர் அருமை. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பின் அறுசுவை டீம் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
-நர்மதா :)

உங்களது குறிப்புக்கு நன்றி. நான் என் கருத்தை சொல்லவா,கோதுமை மாவை நன்கு வாசம் வரும் வரை வருத்து பின் ஏலக்காய்,தேங்காய் பல்,வெல்ல பாகு ஊத்தி கெட்டியாக பிசைந்து கொலுக்கட்டை பிடித்து ஆவியில் வேக வைத்து சாப்பிடவும்.