PL HELP ME

அனைவர்க்கும் வணக்கம்

கடவுள் இருகின்றரா ? நான் எவ்வளவு தான் கடவுளை மனம் உருக வேண்டினாலும் பிரச்சன்னைகு மேல் பிரச்னை வருகிறது . மனம் குழப்பமாக உள்ளது . மனம் ஒருவித பயமாகவே உள்ளது . மனம் அமைதி அடைய வழி சொல்லுங்கள் தோழிகளே

பென்சில் இருக்கா சாதாரண 2 ரூபாய் பென்சிலை தயாரிக்க ஒருத்தன் இருந்தான்னா இந்த அண்டம் பூராத்தையும் படைக்க ஒருத்தன் இருப்பான் சும்மா வராது ஒரு போதும் இறை நம்பிக்கையை கை விடாதீர்கள் இறைவன் மனிதனை படைத்த நோக்கமே தன்னை வணங்கத்தான் உலகில் எவருக்கு பிரச்சனை இல்லை அவன் அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாலும் சரி ரோட்டிலிருக்குன் பிச்சைகாரனா இருந்தாலும் சரி பிரார்தனையை ஒரு போதும் இறைவன் நிராகரிக்க மாட்டான் எல்லாம் நன்மைக்கே இறைவன் சர்வ வல்லமை உடையவன் அளவற்ற அருளாளன் அவனை நம்பியோரை கைவிட மாட்டான் குழப்பம் எதையும் செயல்படுத்தவிடாது நல்லதை நினையுங்கள் எண்ணம் சொல் செயல் இது மூன்றும் நல்லதாகவே இருக்க இறைவனிடம் பிரார்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும் இறைவன் துணையிருப்பான்

//சாதாரண 2 ரூபாய் பென்சிலை தயாரிக்க ஒருத்தன் இருந்தான்னா இந்த அண்டம் பூராத்தையும் படைக்க ஒருத்தன் இருப்பான் சும்மா வராது //

ஆமாங்க.. ரெண்டு ரூபாய் பென்சிலை தயாரிக்கவே ஒருத்தன் இருக்கணும். அதெல்லாம் சும்மா வராது. அப்புறம் இந்த அண்டத்தை படைச்சவனை படைச்ச ஒருத்தன் இருக்கணுமே.. அவனை படைச்சவன் யாரு.. அவன் அண்டத்தை படைக்கிறதுக்கு முன்ன எங்க இருந்தான்.. என்னைக்கு அண்டத்தை படைச்சான்.. ஏன் அந்த நாள்ல படைச்சான், அதுக்கு முன்ன வரைக்கும் அவன் என்ன செஞ்சுகிட்டு இருந்தான்.. எங்க இருந்தான் னு எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அவன் மட்டும் 'சும்மா வரலாம்'னா, இந்த அண்டமும் சும்மா 'ஒன்றுமில்லாததில' இருந்து வரலாம் னு அறிவியல் சொல்லுது.

கடவுள் விசயங்களை ஒரு நம்பிக்கையா மட்டும் வச்சுக்கோங்க.. எங்கே முறையிடுறதுன்னு தெரியாத சந்தர்ப்பங்கள்ல, மனசுல உள்ளதை கொட்டுறதுக்கு ஒரு தொட்டியா அதை வச்சுக்கலாம். உங்களுக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும். ஆனா, சொல்யூசன் கிடைக்கும்னு எதிர்பார்க்க வேண்டாம். அது முழுக்க முழுக்க உங்க கையில(மனசிலத்தான்) இருக்கு.

குழப்பம், பயம்னு நீங்க சொல்லி இருக்கிறதை வச்சு பார்க்கையில, உங்க பிரச்சனைகள் உடல் சம்பந்தமானது இல்ல, மனசு சம்பந்தமானதுன்னு தோணுது. எந்த பிரச்சனை அல்லது எந்த பிரச்சனைகள் உங்களை வாட்டுதுன்னு நல்லா யோசிச்சு, முடிஞ்சா ஒரு நோட்டுல எழுதிக்கோங்க. இல்ல, கம்ப்யூட்டர்ல நோட் பேட்ல டைப் பண்ணிக்கோங்க. எந்த விசயங்களுக்கு நீங்க பயப்படுறீங்கங்கிறதையும் எழுதுங்க. இப்ப அது உங்க பிரச்சனைகள் இல்ல.. அறுசுவையில யாரோ ஒருத்தர் கேட்டு இருக்கிற பிரச்சனையா நினைச்சுக்கோங்க. உங்களை நல்ல அனுபவசாலியா நினைச்சு, அதுக்கு என்ன மாதிரி சொல்யூசனை பதிலா கொடுப்பீங்களோ, அதை டைப் பண்ணுங்க. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஒண்ணு இருக்கும். நமக்குன்னு பிரச்சனை வர்றப்ப, நிறைய நேரங்கள்ல நம்ம மனநிலை அதை கண்டுபிடிக்க உதவுறது இல்லை. அறுசுவையிலேயே நிறைய பார்த்துட்டேன். மத்தவங்க பிரச்சனைகளுக்கு ரொம்ப அருமையா ஆலோசனை கொடுக்கிறவங்ககூட, தனக்கு ஏற்படுற சின்ன பிரச்சனைகளுக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம தடுமாறி இருக்காங்க.

பிரச்சனைகளை தவிர்க்க நினைக்கிறது நல்ல விசயம்தான். ஆனா, அது பிரச்சனைகள் உருவாகிறதுக்கு முன்ன செய்ய வேண்டிய விசயம். பிரச்சனைகள் வந்த பிறகு அதை சந்திக்கிறதுதான் தீர்வு கிடைக்கிறதுக்கான ஒரே வழி. அதில இருந்து விலகி ஓட நினைக்கிறது, இந்த மாதிரி மனசுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு உறுத்திக்கிட்டே இருக்கும். நல்லா யோசிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். நீங்க பயப்படுற விசயங்கள் எல்லாமே, நீங்க விலகிப் போக நினைக்கிற விசயங்களா இருக்கும். எந்த விசயங்களுக்கு பயப்படுறீங்களோ, அதை திரும்பத் திரும்ப சந்திக்கிறதுக்கு உங்களை தயார் படுத்திக்கோங்க. ஒரு காலத்துல போலீஸ்னா எனக்கு ரொம்பவே பயம். என்னோட சில தேவைகளுக்காக, ஒரு பெரிய அதிகாரியை நட்பு பிடிச்சு, அவர் மூலமா அடிக்கடி ஸ்டேசன் போற பழக்கத்தை உண்டு பண்ணிக்கிட்டு, நிறைய பேருக்கு நெருக்கமான பிறகு, அந்த பயம் போயிடுச்சு. இங்க நான் யோசிச்ச ஒரே ஒரு விசயம், எப்படி திறமையா ஒருத்தரை பிடிக்கிறது, அதுவும் மேலதிகாரியா பிடிக்கிறதுங்கிறதுதான்.

மனசு சம்பந்தமான எல்லா விசயங்களுக்கும் தீர்வு நம்மகிட்டதாங்க இருக்கு. கொஞ்சம் முயற்சி செஞ்சா அதில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம். ரொம்பவே கஷ்டமா இருக்குன்னு நீங்க நினைச்சா, இப்படி பொதுவா பயம், குழப்பம்னு சொல்லாம, எதுக்கு பயம், என்ன குழப்பம்னு விபரமா ஒரு பதிவு கொடுத்தா, நிறைய பேர் ஆலோசனை சொல்வாங்க. (ஆனா, எட்டு பேர் பத்து ஆலோசனை கொடுப்பாங்க.. எதை எடுத்துக்கிறதுங்கிறதுல மறுபடியும் உங்களுக்கு குழப்பம் வரலாம். எச்சரிக்கை. :-))

கடவுள் நம்மல பல நேரங்கள்ல ரொம்ப சோதிப்பார் ஆனா அது கூட அவர் இருக்காரா இல்லயான்னு நாம் நம்புறோமா இல்லயானு பார்க்கதான். நாம அவர ஒரு வாஞ்சையோட பிடிச்சுகணும். நமக்கு குழந்தைங்க இருக்கும் அதுங்க தப்பு பண்ணா நாம கண்டிப்போம்ல ஆனா அவங்க குறும்பு பண்றத விட மாட்டாங்க. நாம மட்டும் என்ன? இல்ல என் பையன் ரொம்ப சேட்டை பண்றான்னு அவன வெறுக்குறோமா இல்லைல அது மாதிரி தான் நமக்கு தாய் மாதிரி தான் கடவுள் சில டைம் ல நம்மல கண்டிப்பார் ஆனா வெறுக்க மாட்டார். அது மாதிரி குழந்தைகள் போல தான் நாமும் அவர் என்ன கண்டிச்சாலும் சமயத்துல பல சேட்டை பண்ணிருவோம். ஆனா பண்ற தப்ப சில பேர் ஒத்துக்கிறதும் இல்ல உணர்றதும் இல்ல. இதான் நம்ம பிரச்சனை. எது எப்படி நடந்தாலும் சரி கடவுள விடாம துரத்துங்க குழந்தை மாதிரி. குழந்தைக்கு இரங்காமலா இருப்பார்? அவர் தான் தாயாச்சே தாய் உள்ளம் மிக இரக்கங்கல் நிறைந்தது. என்னோட கருத்து இது எதா தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுடுங்க தோழி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

உங்கள் அனைவரின் பதில்கள் எனக்கு ஆறுதலாக உள்ளது

வணக்கம் தோழிகளே
மனது குழப்பமாக உள்ளது , தீர்வு சொலுங்கள் , ப்ளீஸ் ,
எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது ,எனக்கு பெற்றோர்கள் கிடையாது , சகோதரிகள் உள்ளனர் அவர்கலும் திருமணம் ஆனவர்கள் . ஒரு சில காரணங்களால் என் கணவருக்கும் என் சகோதரிகள் குடும்பதிற்கும் இடையில் மனகசப்பு வந்துவிட்டது ,தவறு இருவர் மேலும் உள்ளது, நான் எவளவோ முயன்றும் என் கணவரை சமாதனம் படுத்த முடியவில்லை . இந்த பிரச்சனையால் என் கணவர் என் சகோதரிகள் குடும்பத்தை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , என்னையும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பது இல்லை . நான் நிறைய முறை இதை பற்றி அவரிடம் கோபமாகவும் பொறுமையாகவும் பேசிவிட்டேன் அனால் பலன் இல்லை . நான் என் பிறந்த வீட்டின் மேல் நிறையை பாசம் வைத்துளேன் . அனால் அவர் மட்டும் அவர் பெற்றோகளை பார்பதற்கு அடிகடி செல்கிறார் , நானும் வர வேண்டும் என்று நினைக்கிறார் , அவர்க்கு அவர்கள் வீட்டின்மேல் உள்ள பாசம் தானே எனக்கு என் வீட்டின் மேல் இருக்கும் என்று நினைக்க மாடிகிறார் . இதனால் எனக்கும் அவருக்கும் அடிகடி பிரச்னை வருகிறது , இந்த பிரச்னை எபொழுது முடியும் என்று தெரியவில்லை , பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் எனக்கு சகோதரிகளின் அன்பும் கிடைக்காமல் செய்து விட்ட என் கணவர் மேல் எனக்கு அடிகடி கோபம் வருகிறது தோழிகளே , நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் . நான் என செய்யவேண்டும் சொலுங்கள் தோழிகளே

வணக்கம் தோழிகளே
மனது குழப்பமாக உள்ளது , தீர்வு சொலுங்கள் , ப்ளீஸ் ,
எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது ,எனக்கு பெற்றோர்கள் கிடையாது , சகோதரிகள் உள்ளனர் அவர்கலும் திருமணம் ஆனவர்கள் . ஒரு சில காரணங்களால் என் கணவருக்கும் என் சகோதரிகள் குடும்பதிற்கும் இடையில் மனகசப்பு வந்துவிட்டது ,தவறு இருவர் மேலும் உள்ளது, நான் எவளவோ முயன்றும் என் கணவரை சமாதனம் படுத்த முடியவில்லை . இந்த பிரச்சனையால் என் கணவர் என் சகோதரிகள் குடும்பத்தை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , என்னையும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பது இல்லை . நான் நிறைய முறை இதை பற்றி அவரிடம் கோபமாகவும் பொறுமையாகவும் பேசிவிட்டேன் அனால் பலன் இல்லை . நான் என் பிறந்த வீட்டின் மேல் நிறையை பாசம் வைத்துளேன் . அனால் அவர் மட்டும் அவர் பெற்றோகளை பார்பதற்கு அடிகடி செல்கிறார் , நானும் வர வேண்டும் என்று நினைக்கிறார் , அவர்க்கு அவர்கள் வீட்டின்மேல் உள்ள பாசம் தானே எனக்கு என் வீட்டின் மேல் இருக்கும் என்று நினைக்க மாடிகிறார் . இதனால் எனக்கும் அவருக்கும் அடிகடி பிரச்னை வருகிறது , இந்த பிரச்னை எபொழுது முடியும் என்று தெரியவில்லை , பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் எனக்கு சகோதரிகளின் அன்பும் கிடைக்காமல் செய்து விட்ட என் கணவர் மேல் எனக்கு அடிகடி கோபம் வருகிறது தோழிகளே , நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் . நான் என செய்யவேண்டும் சொலுங்கள் தோழிகளே

ஹாய் தோழி நீங்க உங்க கணவருக்கு தெளிவா புரிய வைங்க அவங்க அப்பா அம்மா எவ்ளோ முக்கியமோ அதே போலதா உங்க சகோதரிகளும்னு அப்டி புரிய மறுத்தா அவர் வழிலயே விட்டுடுங்கபா அவருக்கா புரிந்தா தா இந்த நிலமை மாறும் நீங்க கோபப்படாதீங்க முடிந்தவரை பொறுமைய கடை பிடிங்க பா அவரே புரிஞ்சிப்பார் எனக்கு தோணுனதா சொன்ன தப்பாயிருந்தா மன்னிக்கவும் தோழியே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்க பீலிங் புரிகின்றது...இந்த சமயத்தில் உங்களுக்கு பொறுமை மிக முக்கியம்..கோபதால புரிய வைக்க நிச்சயம் முடியாது...கொஞ்ச மாசத்துக்கு அவர் போக்கில் விட்டு பிடிங்க..மாமியார் வீட்டுக்கு சென்றும் வாங்க உங்க கணவர் மனம் நோகாமல் நடந்துகங்க உங்க வீட்டை பர்றியே பேசாதீங்க அவருக்கு என்ன பிடிக்குமோ அப்படியே நடந்து அன்பை சம்பாதித்து கொள்ளுங்கள்..அதன் பிறகு டைம் பார்த்து பக்குவமாக சொல்லுங்க அக்கா மேல் தப்பு இருக்காத்தான் செய்கிறது எனக்கு இப்ப அவங்கதானே பிறந்த வீடு நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துகாதீங்க நீங்க உங்க அப்பா அம்மாவோட ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க எனக்கு அது ரொம்பவே பிடிச்சிருக்கு எனக்கும் அது போல என் வீட்டாரிடம் சந்தோசமாக இருக்க ஆசையாக இருக்கிறது..எனக்கு எல்லாமே நீங்கதானே நீங்களே வேணாம்னு சொன்னா நான் என்ன செய்வேன்..கோபமாகமல் நான் சொன்னதை கொஞ்சம் யோசித்து பார்த்து பதில் சொல்லுங்கன்னு அவங்க போக்கிலேயே விட்டு கணவர் குணத்திற்க்கு எப்படி பேசமோ அப்படி பேசுங்க..நிச்சயம் புரிவார் பொறுமை,அன்புதான் நீங்க இப்போதய்க்கு கடைபிடிக்க வேண்டிய ஆயுதம்..அது வரை அவருக்கு தெரியாமல் போன் மூலம் மட்டும் உங்க குடும்பத்தாரிடம் தொடர்பு வைத்திருங்க அதும் அடிக்கடி வேணாம் சந்தேகம் வராதபடி நடந்துகங்க...பெற்றொர் இல்லை இது என்னை மிகவும் மனசை பாதித்துவிட்டது..உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் ..என் பொதுவான இமெயில் ஐடி இது எல்லோரும் ஒன்றானதும் எனக்கு தெரிய படுத்துங்கள்..mnm_mnm@ymail.com

அன்புடன்,
மர்ழியா நூஹு

தோழி உங்களுடைய நிலைமை எனக்கு நல்லாவே புரிகிறது.நான் பார்த்தவரை ஆண்களில் சிலருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.அவர்களாகவே புரிந்து வர வேண்டும்.அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.சண்டை போடுவதால் பிரோயஜனம் இல்லை.உங்கள் குடும்ப வாழ்க்கையில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை தானே தோழி.அவர் உங்களை நல்ல முறையில் தானே பார்த்துக் கொள்கிறார்.பின்னர் இதை ஒரு பிரச்சனையாக நீங்கள் கொண்டு வராதீர்கள்.என் அனுபவத்தில் நான் சொல்கிறேன் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பேசுவதால் சண்டை தான் வரும்.அடிக்கடி ஒரு முறை அல்லது இரண்டு முறை சொல்லி விட்டு,விட்டு விடுங்கள்.அவர்கள் யோசிப்பதற்கு,புரிந்து வருவதற்கு டைம் கொடுங்கள்.அது சீக்கிரமாகவும் இருக்கும் அல்லது கொஞ்சம் காலமாகும்.ஆனால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் பிறந்த வீட்டை விட்டு கொடுத்து பேசாதீர்கள்.நீங்கள் இருவரும் சண்டை போடுவதால் உங்கள் குழந்தையின் மனம் தான் பாதிக்கும்.அவனுக்காக நீங்கள் விட்டு கொடுத்து பாருங்கள்.கஷ்டம் தான் என்ன செய்வது.கடவுளை நம்புங்கள்.சீக்கிரம் அவரே புரிந்து வருவார்.

நான் சொன்னது ஏற்பதற்கு கொஞ்சம் சிரமம் தான்.இதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.

Expectation lead to Disappointment

என் கேள்விக்கு என்னுடைய சகோதரிகள் போல் அக்கரை உடன் பதில் அளித்த தோழிகள் அனைவர்க்கும் என் நன்றிகள் , நிச்சயம் நீங்கள் அனைவரும் சொன்னதை போல் பொறுமையை கடை பிடிக்கிறேன் .

மேலும் சில பதிவுகள்