Disney land(paris)

டிஸ்னீலேன்ட் போயிருக்கீங்களா..பிடிச்சிருந்ததா..எங்கு தங்கினீங்க,என்ன சாப்பிட்டீங்க.எங்கெயெல்லாம் சுற்றி எதையெல்லாம் பார்த்தீங்க என்று சொல்லுங்களேன்

இன்னைக்கு ஒரு நாள் பாப்பேன்..இதில பதிவு வரல..அப்ரம் அப்ரம் அப்ரம் வேற த்ரெட் போட்டுடுவேன் ஆமா

பாரிஸில் போனதில்லை.

லாஸ் ஏஞ்சலஸில் போய் இருக்கோம்.
பிடித்திருந்ததா,என்றால் ஓகே தான்.ஆனால் குட்டீஸ் என்ஜாய் பண்ணுவாங்க.

ஒவ்வொரு ரைடுக்கும் க்யூல நின்னு,நின்னு கால் வலிக்கும்.முக்கால் மணி நேரம் க்யூவில் நின்னால்,உள்ளே போய் வர 5 நிமிஷம் தான் ஆகும்.

தயவு செய்து வெயில் காலத்தில் போகாதீங்க.வெயிலில் மண்டை காயும்.(அனுபவம் :-( ).

சில ரைட்ஸ் பெரியவங்களுக்கும் பிடிக்கும்.

சில ரைட்ஸ்க்கு height requirement (40 inches) இருக்கு.4/5 வயது குழந்தைகள்னா ஓகே.அதற்கும் குறைவு என்றால் நாட் எலிஜிபிள்.

முக்கியமாக மிக்கிஸ் ஹவுஸ்,மினிஸ் ஹவுஸ் எல்லாம் குழந்தைகள் என்ஜாய் பண்ணுவாங்க.மிக்கி மற்றும் மினியுடன் ஃபோட்டோஸ் எடுத்துக்கலாம்.ஜங்கிள் க்ரூஸ் நல்லா இருக்கும்.

ஒரு சப்மரைன் ரைட் இருந்தது.Finding Nemo மூவியை கண் முன் கொண்டு வந்தது.

Star wars,buzz lightyear astro blasters இதெல்லாம் என் மகனுக்கு பிடித்தது.

அப்பப்போ கார்ட்டூன் கேரக்டர்கள்,அங்கங்கே வந்து போவாங்க.

நிறைய டிஸ்னி கடைகள் இருக்கும்.

இருக்கை வசதிகளுடன் உணவகங்கள் இருக்கு.

நாங்க அங்கு தங்கல.அதனால அது பற்றி தெரியலங்க.தெரிந்தவர்கள் வந்து சொல்லுவாங்க.

ஆனால் டிஸ்னி லான்ட் முழுவதும் சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது.

நியாபகம் இருக்கிறதை எழுதி இருக்கேன்.உங்களுக்கு உபயோகமா இருக்கானு தெரியல.

நாங்களும் இங்கிருக்கும் (அதாவது லாஸ் ஏஞ்சல்ஸ் ) டிஸ்னி தான் போயிருக்கிறோம். இருந்தாலும் ஒரே தீம் மாதிரி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கே உள்ள பார்க்கில் இரண்டு பார்க் இருக்கிறது. ஒன்று டிஸ்னி லேன்ட் மற்றொன்று அட்வேஞ்சுர்ஸ் பார்க். டிஸ்னி பார்க் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானது. எல்லா ரைட்டும் கண்டிப்பாக குழந்தைகள் என்ஜாய் பண்ணுவார்கள். அன்பரசி சொன்னது போலவே உயர வரம்பு இருக்கு. பெரியவர்களும் கூடவே போகலாம். அந்த பார்க்கையே நான்கு பகுதிகளாக பிரித்து வைத்திருப்பார்கள். என்ன பார்த்தோமோ இல்லையோ எல்லா கார்டூன் (அதுவும் குறிப்பா இந்த மிக்கி, மின்னி, டோனல்ட், கூபி, ப்ளூடோ) உடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். இங்கே மால்களில் மற்ற எல்லாவற்றையும் பார்க்கலாம் ஆனால் இவற்றை பார்க்க முடியாது. அதனால் தான் இந்த பார்க்கிருக்கு எவ்வளவு மவுசு. ஒரு பகுதியில் இந்த டிஸ்னி மூவியில் வரும் எல்லா பிரின்சஸ் இருக்கும். அது கூட போட்டோ எடுத்துக்க அங்கே வரும் குழந்தைகள் அனைவரும் அவர்களை போலவே மேக் அப் பண்ணிக்கிட்டு வருவாங்க. பார்க்கவே அழகாக இருக்கும். மெயின் ஸ்ட்ரீட் என்று ஒன்று இருக்கும் அது பார்க்கின் எல்லா பகுதியையும் இணைக்கும். அதில் அப்பப்போ பாரேட் நடக்கும். அதை மிஸ் பண்ணாதீங்க. ஆங்காங்கே ஷோஸ் இருக்கும் அதையும் மிஸ் பண்ணாதீங்க. நீங்க உள்ளே போகும்போதே ஷெடூயுல் பார்த்து ப்ளான் பண்ணி போங்க.
அட்வேஞ்சுர் பார்க்கில் சின்ன சின்ன ஹால் மாதிரி இருக்கும். ஒவ்வொன்றிலும் ஷோஸ் இருக்கும். நிறைய பெரியங்க அக்டிவிட்டீசும் இருக்கும்.

நாங்க அங்க டிஸ்னி லான்ட் ரிசார்ட்டில் தங்கவில்லை. அது ரொம்பவே எக்ச்பென்சிவ்வாக இருந்தது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹர்ஷா உங்கள் தகவல் உபயோகமாக இருந்தது..அடுத்த மாதம் ஆஃப் சீசன் என்பதால் அவ்வளவு கூட்டம் இருக்காதோ??.என் 2 வயது மகனோடு போவது சாத்தியமா.ரொம்ப தூரம் நடக்க வேண்டுமோ?வேறெதெதும் வசதி இருக்குமா...அங்குள்ள ஹொட்டேலில் தான் தங்கியாக வேண்டும் வேற வழியில்லை குழந்தைக சாப்பாடு விஷயமெல்லாம் சமாளிக்க முடியுமோ என்னவோ.ஆக மொத்தம் மேக் டொனால்ட்ஸ் இருக்குமென்ற தைரியத்தில் வரலாம்.மத்தபடி அந்த ஊரு ரெஸ்டாரன்ட் சுவை எதுவும் தெரியாது.

லாவன்யா சும்மா ஒரு ஆசை தான்..நடக்குமா தெரியலை...முதலில் டிஸ்னீ லேன்ட் என்று மட்டுமே ஆசை முளைத்தது பிறகு குழந்தைக சாப்பாடு,தங்குமிடம் ஊர் பாஷை,வெதர்,என் மகன் என்று வரிசையாக யோசிக்க முடியுமா என்றும் சந்தேகம்.ஆனால் நீங்கள் சொல்ல சொல்ல இன்னும் ஆசை அதிகமாகிவிட்டது..
இப்படி ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு போகும்போது எப்படி சமாளிப்பீங்க என்று சொன்னால் எனக்கு உபயோகமாக இருக்கும்..குறிப்பாக குழந்தைகள் இட்லி,தோசை என்று சாப்பிட்டு பழகிவிட்டார்கள் பிள்ளைகளும் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு பழக்கமில்லை.
அங்கு வெட்ட வெயிலில் நிறைய நடக்க வேண்டி வருமா..முழுவதுமாக சுற்றி காண எத்தனை நாள் வேண்டும்

ஆசை பட்டுட்டீங்க இல்ல...கண்டிப்பாக போயிட்டு வாங்க. அடுத்த மாதம் என்றால் அவ்வளவாக வெயில் இருக்காது தானே. பாரிஸ் தானே அங்கே கண்டிப்பாக ஆங்கிலமும் பேசுவார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அவர்களின் சாப்பாடும் பிடிக்கும். குழந்தைகளுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அவங்களுக்கு மெக் டொனல்ட்ஸ் பிடித்தால் இதுவும் பிடிக்கும். கவலை வேண்டாம். இல்லையென்றால் குழந்தைகளுக்கு நம்மூர் உணவு தான் பிடிக்கும் என்றால் அதற்க்கும் நாம் தயாராகவே போகலாம். நீங்கள் போகும் போதே ஒரு சின்ன ரைஸ் குக்கர் எடுத்து போங்க கூடவே புளியோகரே பவுடர், பருப்பு பொடி எடுத்துட்டு போங்க. ரசம் பொடி மட்டும் எடுத்துட்டு போயிட்டால் ரைஸ் குக்கரிலே ரசமும் கூட வைக்கலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கு நம்ப எம் டி யாரின் இன்ஸ்டன்ட் வகைகள். இட்லி தட்டு மட்டும் எடுத்துட்டு போயிட்டு ரெடி மேட் இட்லி கூட ஊத்திக்கலாம்.

நான் உங்களை பயப்படுத்த இதை சொல்லலை. இருந்தாலும் நீங்கள் ப்ளான் பண்ணுவதற்காகவே சொல்றேன். முதல் தடவை செல்லும் போது என் மகளுக்கு பத்து மாதம். அப்பொழுது அது கிறிஸ்துமஸ் டைம் வேற...கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். என் குழந்தை அழுத அழுகைக்கு அளவே இல்லை. எப்பொழுதுமே ஆப் சீசனில் போங்க. லைன் இருந்தாலும் நீங்கள் சைல்ட் சுவிட்ச் பாஸ் எடுத்துக் கொண்டால் லைனில் நிற்காமல் போகமுடியும். என்ன ஒன்னு அவர் இல்லாமல் நீங்களும் நீங்க இல்லாமல் அவரும் போக வேண்டி வரும். சில ரைடுக்கு நாம் யாரையாவது போட்டு அழுத்தினால் அல்லது சதையே பீயத்துக் கொள்ளும் அளவுக்கு பிடித்தால் தான் பயம் (கண்டிப்பாக இருக்கும் ) இல்லாமல் இருக்கிற மாதிரியாவது இருக்கும். இரண்டாவது முறை செல்லும் போது ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயது அதனால் பாதி நேரம் அவள் தூங்கும் ஸ்ட்ராலருக்கு காவலாய் இருந்தேன் :( அட்வென்ச்சர் பார்க்கிலாவது ஏ சி ஹாலில் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி இருக்கும். ஆனால் மற்ற பார்க்கில் எல்லாம் மொட்டை வெயிலில் தான். இருந்தாலும் கண்டிப்பாக போயிட்டு வாங்க......

இப்பொழுது நீங்கள் எங்கே சென்றாலும் அங்கே கண்டிப்பாக நம்மவர்களை பார்க்க முடியும். அதுவும் இல்லாமல் நம்மூர் சாப்பாட்டு கடைகள் கூட இருக்கும். நாடு விட்டு நாடு செல்லும் போது தான் அதிகமாக என்ஜாய் பண்ணனும். அங்கே யாருக்கும் நம்பலை தெரியாது இல்ல....அதனால் நாம் நம்பளாகவே இருக்கவும் முடியும். நாம் இப்போவே நம்மூரில் இல்லை தானே....அதே போலவே நினைத்துக் கொண்டு போயிட்டு வாங்க. எதற்க்காக இல்லையென்றாலும் ரீமா குட்டிக்காகவாவது போயிட்டு வாங்க. அவர்களுக்கு அது ஒரு பெரிய கனவாகவே இருக்கும். என் பெரியவள் மிக்கியை பார்த்ததும் அவள் கண் பூரித்ததை என்னால் மறக்கவே முடியாது. அவளுக்கு ஏதோ கடவுளே நேரில் வந்த மாதிரி....நாங்கள் இரண்டு நாள் சென்றோம். ஒழுங்காக ப்ளான் பண்ணினால் இரண்டு மூன்று கண்டிப்பாக போதும். இருந்தாலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு கண்டிப்பாக ப்ளான் பண்ணிய படி நடக்கவே நடக்காது. அங்கங்கே ப்ரேக் போடா வேண்டி வரும். இருந்தாலும் போயிட்டு வரலாம். கடைசியாக போயிட்டு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. இருந்தாலும் என் பொண்ணு இப்போவே அடுத்து எப்போ போவது என்று ப்ளான் போட்டுட்டே இருக்கா ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அப்படியா லாவண்யா. எங்காவது போகலாம் என்று நினைத்தோம் என் மகளது அடுக்கு கேள்வி பயங்கரமா இருந்தது "ஏன் அந்த இடம் அங்கே எனக்கு புடிச்ச என்ன இருக்கு,ஏன் இந்த இடம் இங்கே எனக்கு வாங்க என்ன இருக்கு"என்று அவளுக்குன்னு சொல்லிக்க ஒன்னுமில்லாத இடத்துக்கு போவதுக்கு எனக்கு மனசுல வந்தது இது மட்டும் தான்.
வருவது வரட்டும்னு போயிடலாம்னு இப்ப ரொம்ப ஆசை அதிகமாகிடுச்சு..விசா அது இதுன்னு நிறைய வேலை இருக்கு இருந்தாலும் ஆசை அதிகமாகிவிட்டது.நீங்க சொல்ற மாதிரி தான் இன்ஸ்டன்ட் பொருட்கள் கொண்டு செல்லலாம்னு நினைக்கிறேன்.ஸ்ட்ராலெர் வாடகைக்கு கிடைக்குமா இல்ல நாம கொண்டு போவனுமா .எல்லாம் சரி விமான பயனம் எனக்கு பாவக்காய் மாதிரி அதனாலேயே பல சான்ஸை தவற விட்டாச்சு ...இதையே சொல்லிகிட்டிருந்தா பிள்ளைகளுக்கு ஏது பொழுதுபோக்குன்னு இப்போ ஒரு முடிவோட இருக்கேன்
உங்க அனுபவம் படிச்சப்போ கொஞ்சம் பயமா தான் இருந்தது பின்ன இப்ப அழுகை கூச்சல் எல்லாம் பழகி போச்சு போங்க;-D
காதில் வேக்ஸ் எடுப்பது பற்றி ஒரு த்ரெட் போட்டிருக்கேன் அனேகமா உங்க பதில் வரும் என்று ஒரு எதிர்ப்பார்ப்போடு ஒருக்கேன்;-)

ஹாய் தளி,

எப்படி இருக்கிங்க?! பசங்க இரண்டுபேரும் நலமா? டிஸ்னி லேண்ட் என்றதும் 'டபக்'குன்னு உள்ளே வந்துட்டேன்! :) என்னைக்கேட்டா கண்டிப்பா பசங்க வைச்சிருக்கவறங்க எல்லாம் ஒரு முறையாவது போய்ட்டு வரனும்! நாங்க 3 முறை போயிருக்கோம்! நாங்க போவது, இங்க ஃப்ளோரிடா லொக்கேஷன், இது எங்களுக்கு பக்கம்! (கம்பேரிங் டு அதர் ப்ளேசஸ்).

லாவண்யா நிறைய விஷயங்களை போதுமான அளவுக்கு சொல்லிட்டாங்க!. ஒரு இரண்டு பதிவு படிக்கும்போதே தோணியது, சாப்பாடு நாமே தயார் செய்றமாதிரி ஏற்ப்பாட்டுடன் போகலாமென்று சொல்ல வந்தேன். அதுவும் லாவண்யா முந்திட்டாங்க! :) நாங்க குழந்தைகள் பிறந்தபிறகு போன இரண்டு முறையுமே, சமைக்கவென்று ஒரு எலக்டிர்க் ரைஸ் குக்கர், புளிக்காய்ச்சல், இட்லி இன்ஸ்டன்ட் மிக்ஸ்சஸ், துவையல் வகைகள் என்று கனகச்சிதமா போனோம். குழந்தைகள் ஒரு பக்கம், கூடவே அம்மா, அப்பா (ஒரு முறை), மாம‌னார், மாமியார் (ஒரு முறை) என கூட்டமாகவே போனதால், இப்படி இரு செட்டப். தங்குவதற்கு தோதா, டிஸ்னியில் இருந்து, கொஞ்சம் அருகாமையிலேயே இருந்த, ஒரு கெஸ்ட் ஹவுஸை ரென்ட்க்கு பிடித்தார் என் ஹஸ். சும்மா ஃபுல் கிச்சன், 2 பெட் ரூம்ஸ், ஸ்விம்மிங் பூல் என்று செம ஜோரா கிடைத்தது, நன்றாக வசதியாக இருந்தது!

நீங்க போவது பாரிஸில் என்பதால், இது மாதிரி தனி வீடு எந்த அளவு சவுகரியப்படும் என்று தெரியவில்லை. அதேப்போல டிஸ்னி ரிஸாட்டில் எனக்கு தங்கிய‌ அனுபவம் இல்லாததால் சரியா சொல்லத்தெரியலை தளிகா. ஆனால், ஆஃப் சீஸன் தேர்ந்தெடுத்து செல்வது ரொம்ப நல்லது. இல்லைன்னா, பாதி நாள் க்யூவில் நின்னே காலி ஆகிடும்! :(

லாவண்யா சொன்ன மாதிரி, என் பையனுக்கு முதல் முறை (அப்போ அவனுக்கு வயது 3) மிக்கியை பார்த்ததும், அப்படியே இன்ப அதிர்ச்சிதான்! கண்களில் ஆச்சரியம், ஆனந்தம் கொப்பளிக்க அவன் ஓடிச்சென்று மிக்கியை அணைத்து hug செய்தது, இன்று நினைத்தாலும் இனிக்கிறது!! :)

அதேப்போல ரீமாக்கு பிரின்சஸ் பிடித்தமா இருக்கும் என்று நினைக்கிறேன். குட்டி பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுக்கு பிடித்த கனவு தேவதைகளை கண்ட சந்தோஷத்தில் கண்டிப்பா போய்வந்த பிறகும் ரொம்ப நாளைக்கு அதைப்பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்!. யப்ப்ப்பா... இந்த பிரின்சஸ் பார்க்க மட்டும் ஒரு முக்கா மணி நேரத்துக்கு மேல‌ க்யூவில் கால்கடுக்க நின்னு பார்த்திட்டு வந்தோம்! ஆனால், உள்ளே சென்றதும் என் பொண்ணு முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்குமுன் அத்தனை நேர வெயிட்டிங் களைப்பும் காணாமப்போச்சு! ;) எல்லா பிரின்சஸ் கூடயும் ஓடி ஓடி போட்டோஸ் எடுத்துக்கொண்டாள்! :) சோ, நல்ல கேமரா, கேம் கார்டர் எல்லாம் ஜார்ஜ் போட்டு எடுத்திட்டு போங்க தளிகா! (மறந்துட்டுபோய், அங்கேயே டிஸ்னி கேம்பஸ்குள்ளே எல்லாம் வாங்கலாம் என்றால், யானை விலை, குதிரை விலைதான்! :))

அப்புறம் என்ன, அழகா ப்ளான் போடுங்க, ஜாலியா போயிட்டு வாங்க! எஞ்ஜாய்!! :)

அன்புடன்
சுஸ்ரீ

தளிகா,
டிஸ்னி லேன்டிலேயே அம்ப்ரெல்லா ஸ்ட்ராலர் வாடகைக்கு கிடைக்கும்.மிகவும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.கொண்டு போகும் பேக் எல்லாம் அதில் மாட்டிக்கலாம். ;-) ஒவ்வொரு ரைட் மற்றும் ஷோக்கு போகும்போதும் வெளியே நிறுத்திவிட்டு போகலாம்.கேமரா,பர்ஸ் போன்ற முக்கியமானவைகள் மட்டும் கையில் வச்சுக்கோங்க.

ஆஃப் சீசனில் செல்வதும் நல்ல ஐடியாதான்.வெயிலும் அவ்வளவு இருக்காது.கூட்டமும் குறைவாக தான் இருக்கும்.நாங்க போன போது நல்ல வெயில்.7 மாத குழந்தையை(மகள்) வச்சுக்கிட்டு ரொம்ப சிரமமா இருந்தது.

கைவசம் நிறைய ஸ்னாக்ஸ் வச்சுக்கோங்க.குழந்தைகளுக்கு அங்கு கிடைக்கும் உணவு பிடிக்கலைனா,ஸ்னாக்ஸ்(குக்கீஸ்,பழங்கள்,கப் கேக்,பேபி கேரட்ஸ்,பாக்கெட் ஜூஸ்) உதவும்.

மற்ற எல்லா விஷயங்களையும் லாவண்யாவும்,சுஸ்ரீயும் சொல்லிட்டாங்க.

சீக்கிரம் டிஸ்னிலேன்ட் போய்ட்டு வந்து எப்படி இருந்ததுனு சொல்லுங்க.

ஏறக்குறைய எல்லா விஷயமும் லாவண்யாவும், சுஸ்ரீயும் சொல்லிட்டாங்க, இருந்தாலும் நானும் 3 மாதம் முன்னாடி தான் போய்ட்டு வந்ததால் பதிவு போடலாம்னு தோணிச்சு. என் பொண்ணுக்கும் 2 வயது தான் அப்போ! அதனால இது உங்க பையன் விஷயத்தில் பயன்படும்னு நினைக்கிறேன். நாங்க போனது ஃப்ளோரிடா டிஸ்னி தான், அதுவும் பீக் சம்மர்ல, வெயில்னா வெயில் அப்படி ஒரு வெயில்... நாங்கள்லாம் அங்க போய் இறங்கும் போதே காஞ்சு கருவாடா போயிட்டோம்... அதனால முதல் நாள் ஃபுல்லா எங்க மேடம் க்ராங்கி தான்,ஒரே அழுகை,கொஞ்சம் கொஞ்சம் எஞ்ஜாய் பண்ணினா,அடுத்த இரண்டு நாட்கள் பரவாயில்லை. நாங்க மேஜிக் கிங்டம், யுனிவெர்சல் ஸ்டுடீயோஸ், சீ(sea world)வேர்ல்டு - மூணும் போனோம்,அதுக்கே கால் வலி பெண்டு எடுத்துடுச்சு...அதில் எனக்கு ரொம்ப பிடிச்சது யுனிவெர்சல் பார்ட் தான், என் பொண்ணும் அங்க தான் ரொம்ப ரசிச்சா, நிறைய கார்ட்டூன் காரக்டர்ஸ் வரும்,முக்கியமா டோரா வந்தது, அவளுக்கு பிடிச்சிருந்தது ஆனா கொஞ்சம் பயந்தா.... அப்புறம் அங்கங்க 3டி ஷோ, 4டி ஷோ இருக்கும், முதல் நாள் போனதில் லாவண்யா சொன்ன மாதிரி பரேடு இருக்கும்,ஃபுல் அண்ட் ஃபுல் ப்ரின்சஸ் கேரக்டர்ஸ பத்தி தான் இருக்கும்,உங்க மகள் வயது குழந்தைங்க எஞ்ஜாய் பண்ணுவாங்க..

சாப்பாடு பொறுத்த வரை எனக்கு ரொம்ப கை குடுத்தது மேகி நூடுல்ஸ் தான், அது தவிர கெர்பர் ஃபுட்ஸ் நிறைய ஸ்டாக் வச்சுக்கிட்டேன்... ஸ்னாக்ஸ் டைமுக்கு யோகர்ட், சீஸ் ஸ்டிக்ஸ், வாழைப்பழம் இப்படியாக சமாளிச்சேன்,அது கூட நம்ம ஃப்ரெண்ட்ஸ் குடுத்த டிப்ஸ் தான்.... நாங்க பக்கத்துலயே ஹோட்டல்ல தங்கினோம்... ஒரு 15 பேர் சேர்ந்து போனதால் வாடகையும் பெரிய விஷயமா தெரியல, ஒரு நாளுக்கு $50 ரூமுக்கு ஆச்சு... முதல் நாள் நைட் அலுப்புல தூங்கிட்டு மறுனாள் சீக்கிரம் எழறதே கஷ்டம்,இதில் எங்க ரைஸ் குக்கர் எடுத்துட்டு போய் சமைக்க, அத்னால நான் எதுவும் குக்கர்லாம் கொண்டு போகல.... நாங்க போனதில் 3 ஃபேமிலியில் சக வயது குழந்தைங்க இருந்ததால் சாப்பாடு விஷயத்தை இப்படியும் அப்ப்டியுமா சமாளிச்சுட்டோம்... அங்கயும் இண்டியன் உணவகம் எதுவும் கண்ணுக்கு தென்படல, மூணாவது நாள் தான் நம்ம ஊர் இட்லி கண்ணில் தென்பட்டது, நீங்க போற இடத்தில் எப்படின்னு தெரியல... உங்கள மாதிரி தான் போறதுக்கு முன்னாடி எனக்கும் பல யோசனைகள், ஒரே மலைப்பா இருந்தது, ஆனால் போனதுக்கு அப்புறம் அப்படி ஒன்னும் கஷ்டமா தெரியல.... கண்டிப்பா குழந்தைங்களுக்காக போக வேண்டிய இடம் தான்.... உங்க பொண்ணு நல்லா எஞ்ஜாய் பண்னுவா, உங்க ஜூனியர்க்கு மூடை பொறுத்து தான் இருக்கும்,அவ்வள்வா ஒன்னும் தெரியாது... நல்ல படியா ப்ளான் பண்ணி போய் எஞ்ஜாய் பண்ணிட்டு வாங்க...

அனேக அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்