குழந்தைக்கு வித்யாரம்பம்!!!

தோழிகளே!! நான் U.S-ல் நார்த் கரோலினா, சார்லெட்டில் இருக்கிறேன், இன்று விஜயதசமி என்பதால் என் 2 1/4 வயது குழந்தைக்கு வித்யாரம்பம்(அதாங்க கோவிலில் “அ” போடுவோமில்லையா) பண்ணனும்னு ஆசை, இங்குள்ள கோவில்களில் என்னென்ன ஃபார்மலிட்டிஸ்-னு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்... நாம கோவிலுக்கு போறப்ப என்னென்ன பொருள் வாங்கிட்டு போகணும், இதை எப்படி செய்வது? இன்று மதியத்துக்குள் சொன்னீங்கன்னா ஈவ்னிங் கோவிலுக்கு போறப்ப வாங்கிட்டு போக வசதியா இருக்கும்...

அனேக அன்புடன்
ஜெயந்தி

//இங்குள்ள கோவில்களில் என்னென்ன ஃபார்மலிட்டிஸ்// டெலிஃபோன் டிரெக்டரில நீங்க போக இருக்கிற கோவில் நம்பர் பார்த்து ஒரு ஃபோன் போட்டு விசாரியுங்க ஜெயந்தி. ஈஸி அன்ட் பெஸ்ட் வழி இதுதான். மிஸ் ஆகாம தேவையானதை (மட்டும்) வாங்கிட்டுப் போயிரலாம். நேரம் & டென்ஷன் மிச்சம்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி உங்க பதிவுக்கு!! //கோவில் நம்பர் பார்த்து ஒரு ஃபோன் போட்டு விசாரியுங்க// அதை ஏன் கேக்கறீங்க, இங்க கோவில்ல கால் அட்டெண்டு பண்றவங்களுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியுது,எனக்கு ஹிந்தி சுத்தமா தெரியாது,... நான் பல முறை கால் பண்ணி வெறுத்துப் போயிட்டேன்... அதான் நம்ம மக்கள்கிட்ட கேட்டேன். எல்லாரும் ரொம்ப பிஸி போல... சரி மெதுவா வரட்டும்!!!

அனேக அன்புடன்
ஜெயந்தி

எனக்கு தெரிந்து நீங்கள் இமா சொன்னது போல் கோவிலில் கேட்டால் நல்லது என்று தோன்றுகிறது. ஏனென்றால் நம்மூர் என்றால் நாம் என்ன வாங்கி கொண்டு போகிறோமோ அதை வைத்து (அல்லது வேறு எதாவது வேணும்னா டக்குனு பக்கத்திலே இருக்கும் கடைக்கு போயிடுவோம்) செய்வார்கள். இங்கு தான் எல்லாவற்றிற்கும் லிஸ்ட் வைத்திருப்பார்களே! நீங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள். அவர்கள் கண்டிப்பாக பதில் கூறுவார்கள். (ஆங்கிலம் தெரியாமல் இங்கே வர முடியாதல்லவா!)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சாரி லாவண்யா!!! நான் உங்க பதிவையே இப்ப தான் பார்க்கிறேன்.... நீங்க நினைக்கிற மாதிரி தான் நானும் நினைச்சேன், அட்லீஸ்ட் ஆங்கிலம் தெரிஞ்சிருக்கும்னு, ஆனால் இந்த கோவில்ல ஃபோன் அட்டெண்ட் பண்றவங்களுக்கு ஹிந்தி தவிர எதுவும் வர மாட்டேங்குது.... நான் இதற்கு முன்னாடியே வேற ஒரு பூஜை சம்பந்தமா கால் பண்ணி நொந்து போயிட்டேன்.... சரின்னு நேரடியா கோவிலுக்கு போய் நாங்க வந்திருப்பதற்கான காரணத்தை ஆங்கிலத்தில் சொல்லியும், ம்ஹூம்... புரியவே இல்ல அவங்களுக்கு, அப்புறமா கோவிலுக்கு வந்த நார்த் இன்டியன் தான் புரிய வச்சாங்க.... ஒரே ஒரு ஐயருக்கு தமிழே தெரியும்,ஆனா, அன்னைக்குன்னு பார்த்து அவர் எங்கேயோ எஸ்கேப் ஆகிட்டார்.... இந்த விஜயதசமிக்கும் அதே கதை தான் நடந்தது.. கடைசியில் நாங்க அந்த ஆசையையே கைவிட்டுட்டோம் :( சும்மா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வந்துட்டோம்...வேற என்ன பண்றது!!!

அனேக அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்