பழைய துணிகள்.....

அன்புத்தோழிகளே....எனக்கு ஒரு விபரம் தேவை...என்னிடம் நிறைய பழைய துணிகள் (புடவை, பேன்ட், சர்ட், குழந்தைகள் ஆடைகள்) உள்ளன...அவற்றை ஏதாவது ஆசிரமத்தில் வாங்கிக் கொள்வார்களா? அப்படி ஏதாவது தெரிந்தால் விலாசம் கொடுத்து உதவ வேண்டுகிறேன்....

அன்பு ராதா... உங்க எண்ணத்தை நான் வரவேற்கிறேன். தாராளமா வாங்கிக்குவாங்க. நானும் வழக்கமா வருடத்தில் ஒரு முறை கொண்டு போய் கொடுப்பது வழக்கம். நீங்க எந்த ஊரில் எந்த ஏரியாவில் இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா உங்க ஏரியா பேரை போட்டு ஆர்ஃபனேஜ், ஓல்டேஜ் ஹோம் என எதாவது இருக்கா என கூகிலில் தேடி பாருங்க. கிடைக்கும் இடத்தின் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாங்கிக்குவாங்கலா என விசாரிச்சு முகவரி வாங்கி நேரில் போய் கொடுங்க. நான் இப்படி தான் செய்வேன். வழக்கமாகவே இப்போது திருவான்மியூரில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் கொடுப்பேன். அவர்களுக்கு சென்னையில் பல இடங்களில் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் இருக்கு... அவர்களே தேவையான இடத்துக்கு அனுப்பிடுறாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக மிக நன்றி வனிதா...நான் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறேன்...எனக்கு திருவான்மியூர் முதியோர் இல்ல விலாசம் கொடுத்தால் அங்கு கொண்டு கொடுக்க வசதியாக இருக்கும்...நீங்கள் சென்னையில் எங்கே இருக்கிறீர்கள்?

http://kaakkumkarangal.com/contactus.html

இது தான் நான் போகும் இடத்தின் முகவரி:

Kaakkum Karangal Old Age Home,
New No.47 (Old No.11)
East Mada Street,
Thiruvanmiyur (Near Teppakulam),
Chennai - 600 041.

கோவிலுக்கு எதிரே இருக்கும்.

நான் தாம்பரம் பக்கம் இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏதாவது நேரம் உண்டா?எப்பவும் கொண்டு கொடுக்கலாமா? மருந்தீஸ்வரர் கோவிலுக்கு எதிரில்தானே?

நேரம் ஏதும் இல்லைங்க... முன்பே போன் செய்து சொல்லிவிட்டு போங்க. ஏதோ ஒரு சிவன் கோவில் அது... பெரிய கோவில், பெயர் தெரியாது. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்