பொரித்த குழம்பு

தேதி: October 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

முருங்கைக்காய் - 3
துவரம்பருப்பு - கால் கப்
சாம்பார்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 5 மேசைக்கரண்டி
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

துவரம்பருப்பை வேக வைக்கவும். முருங்கைக்காயை 2 அங்குல நீள அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
தேவையான தண்ணீரில் முருங்கைக்காய்களை போட்டு கொதிக்க விடவும். அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணெயில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றலை வறுக்கவும். அத்துடன் சீரகம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
அதில் வெந்த துவரம் பருப்பும் சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
தேங்காய் எண்ணெயை இரும்புக் கரண்டியில் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் குழம்பில் கொட்டவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு நன்கு கலந்து சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... வாசம் இங்க வருது... செய்துடறேன்... ரொம்ப சூப்பரா இருக்கு பார்க்கவே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன ஆச்சரியம் ( நல்ல வேளை இன்கிரிடியன்ஸ் மாறிருக்கு;-)) நானும் முருங்கக்காய் குழம்பு செய்து வைத்திருக்கிறேன் அனுப்ப;-) உங்க முறையிலும் பண்ணிடறேன்...நிஜமாவே வாசனை இங்க வர வந்திருச்சு;)

Don't Worry Be Happy.

ராதா மேடம் பாசிப்பருப்புல தான் பொரித்த குழம்பு செய்வாங்க. உங்க செய்முறை வித்தியாசமா நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

ராதா ஆன்ட்டி சூப்பர் புதுவிதமான ரெசிபி ட்ரை பண்றேன் வாழ்த்துகள் ஆன்ட்டி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வனிதா, ஜெயா,வினோஜா, ரேணு எல்லோருக்கும் நன்றி....வினோ.....பாசிப்பருப்பில் செய்யும் பொரித்த குழம்பு வேறுவிதம்....அதையும் விரைவில் எழுதுகிறேன்...

ராதா ஆன்ட்டி சூப்பர்குழம்பு. சாதாரணமா வைக்கிறத விட நல்ல வித்தியாசமா இருக்கு. வாழ்த்துக்கள்.

Sambar parkavae mighavum arumaiya irukirathu nan virupa patiyalil serthu vitean enaku oru doubt sambhar podi eppadi seivathu please kurungal...

ஹலோ கௌதமி நலமா? இதோ சாம்பார் பொடி செய்முறை....எழுதிக் கொள்ளுங்கள்
மிளகாய் வற்றல்-- 1/2 கிலோ
தனியா(கொத்தமல்லி விதை)--- 3/4 கிலோ
துவரம்பருப்பு--- 1 கப்
கடலைப் பருப்பு-- 3/4 கப்
உளுத்தம்பருப்பு-- 1/2 கப்
வரளி மஞ்சள்--- 100 கிராம்
மிளகு--- 1 கைப்பிடி
வெந்தயம்--- 25 கிராம்
எல்லா சாமான்களையும் நன்கு வெய்யிலில் காயவைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்....சாம்பார், வத்தக் குழம்பு, பொரித்த குழம்பு எல்லாவற்றிற்கும் போடலாம்...வாசனையாக அருமையான சுவையோடு இருக்கும்...செய்து பார்த்து எனக்கு சொல்லுங்கள்..

ராதா,
நான் உங்கள் சமயலை செய்தேன்.nice.

என் சமயலை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி சாத்விகாந்த்...